Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும் முன்னிலை சோசலிச கட்சிக்கும் கொள்கை அளவில் வித்தியாசம் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும் முன்னிலை சோசலிச கட்சிக்கும் கொள்கை அளவில் வித்தியாசம் இல்லை:-

 

கட்சியில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்:- பழ றிச்சர்ட்

Pala_CI.jpg

 

இந்த 2 கட்டுரைகளையும் 2013ஆம் ஆண்டு ஆரம்பத்தில் நான் எழுதியபோது சமூக வலைத் தளங்களிலும்  இணையங்களிலும் புளொக்குகளிலும் எனக்கும் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கும் எதிராக கடுமையான தாக்குதல்களையும் சேறடிப்புகளையும், விமர்சனங்களையும் பலர் முன்வைத்திருந்தார்கள். நான் தனிப்பட்ட காழ்புணர்ச்சியில், எழுதுகிறேன் என்றார்கள் நண்பர் பழரிச்சாட் கட்சியின் சார்பில் எனக்கு சாவால்களையும் விட்டிருந்தார். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டேன்.. இப்போதும் அவற்றை குத்திக் காட்டி  அவர்களது மனதை புண்படுத்த செய்வதற்கு இதனை இங்கே சுட்டிக் காட்டவில்லை....  ஆனால் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் மக்கள் சார்ந்தது என்பதனை எம்மீது நம்பிக்கை கொண்டுள்ள வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரைகளை மீள்பதிவு செய்திருக்கிறென். முன்னர் இவற்றை வாசிக்காதவர்களுக்கும் இந்த இணைப்புகள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

நடராஜா குருபரன்

சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும்  முன்னிலை சோசலிச கட்சிக்கும் கொள்கை அளவில் வித்தியாசம் இல்லை:- கட்சியில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்:- பழ றிச்சர்ட்

எண்ணிப்பார்க்க நேரம் கூட இல்லாமல் கடந்து விட்டன இரண்டு வருடங்கள். இந்த இரண்டு வருடங்களாய் முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்து நான் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கைளை முடிவிற்கு கொண்டு வந்துள்ளேன். முன்னிலை சோசலிச கட்சியின் ஆரம்பம் முதலே  இணைந்து செயற்பட்டு வந்தவன் நான். கட்சியின் முதலாவது அங்குரார்பண மாநாட்டில் கட்சியின் முதல் உத்தியோகபூர்வ உரை என்னாலேயே நிகழ்த்தப்பட்டது. இவ்வாறு இரண்டு வருடங்கள் தொடர்ந்த என் பயணத்தை முடிவிற்கு  கொண்டு வர காரணம் கூறுவதென்றால் அடுக்கடுக்காக காரணங்களை  கூறலாம்.  ஆனால் உடனடி காரணம் ஒன்று இருக்கின்றது. வெளியே கூறதேவையில்லை எனறே எண்ணியிருந்தேன். ஆனால் என்றும் எனக்கு ஆதரவு தந்து என்னில் நம்பிக்கை கொண்டு இன்றும் செயலாற்ற தயாராயிருக்கும் தோழர்கள் தொடர்ந்து கோரி வந்த்தால், கட்சியிலிருந்து விலகிய அமைப்பு ரீதியான காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய  தேவை எழுந்துள்ளது.

இந்த இரண்டு வருடங்கள் அரசியலிலே  எனக்கு பயிற்சி காலம் என்றே கூற வேண்டும். இலங்கையில் ஆளணி வளத்தை அதிகமாய் கொண்ட சோசலிச கட்சி என்ற காரணத்தினலேயே   முன்னிலைசோசலிச கட்சியுடன் இணைந்து செயற்பட முதல் காரணம். கொள்கை அடிப்படையில் பல முரண்பாடுகள் இருந்தாலும், அக்கட்சியின் இளைஞர்களின் முற்போக்கு சிந்தனை ஏற்படுத்திய நம்பிக்கையும், அவர்களின் இறுதி இலக்கும் என் இறுதி இலக்கும் ஒன்றாய் இருந்ததும் முன்னிலை சோசலிச கட்சியில் இணைந்து செயற்படுவதினை சாத்தியமாக்கியது. குறிப்பாக இனப்பிரச்சினை விடயத்தில்  சிங்கள பேரினவாத கட்சிகளுக்கும்  முன்னிலை சோசலிச கட்சிக்கும் கொள்கை அளவில் வித்தியாசம் இல்லை. அனுகுமுறையில் மாத்திரமே வித்தியாசம் இருந்தது. எனினும் கட்சியின்  இளைஞர்களில் பெரும்பான்மையானோர் இதனை எதிர்த்ததோடு தனி தமிழ் அரசு என்பதினை ஆதரித்தே வந்தனர். இன்று அவர்களில் பெரும்பலானோர் என்னை தொடர்ந்து கட்யிலிருந்து விலகியுள்ளனர், கழற்றி விடப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இது இவ்வாறு இருக்க கடந்த மே தினம் முதல் கட்சியின் செயற்பாடுகள் யாவும் முடக்கப்பட்டது. அரசியல் குழு கலைக்கப்பட்டது. மத்திய குழுவிலிருந்து மூன்று பேர்  இடைவிலகினர். மத்திய குழு நான்கு பிரிவாக பிளவுபட்டது. வெகுசன பணிகள் யாவும் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டன. இவை எல்லாவற்றிற்கும் கட்சிக்குள் கோட்பாடு ரீதியாக எழுந்த பிரச்சனையே காரணம் என்று கூறப்பட்டது.

ஆனால் உண்மையில்  அமைப்பு ரீதியாக எழுந்த பிரச்சினையே காரணம். கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது கட்சியின் தலைவர் என அறியப்பட்ட குமார் குனரத்தினமும் அவருடன் சேர்த்து திமுது ஆட்டிகலவும் கடத்தப்பட்டதினை சகலரும் அறிவார்கள். அவர்கள் இருவரும் தனிதனியாக கடத்தப்பட்டதாகவே கூறப்பட்டது. ஆனால் உண்மையில் இருவரும்  ஒரே இடத்தில் வைத்தே கடத்தப்பட்டனர். இருவருக்குமிடையில் திருமணத்திற்கு புறம்பான பாலியல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் பதிவு செய்யப்பட்ட இறவெட்டு ஒன்று அரசாங்க புலனாய்வு துறையினர்க்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவர்கள் அதனை மத்திய குழு உறுப்பினரான திமுது ஆட்டிகலவிடம் காட்டி அச்சுறுத்தி  கட்சியின் இரகசிய தகவல்கள் அனைத்தினையும் சேகரித்து வந்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் உயர் மட்டத்திலிருந்து வெளியே கசிந்ததும் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் உருவாகின. சம்பந்தப்பட்ட இருவரும் இதனை மறுத்ததுடன் குமார் குணரத்தினம் இதனை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். இதற்காக கட்சிக்குள் கருத்தியல் முரண்பாடுகளை செயற்கையான முறையில் உருவகித்து அனைவரும் அது தொடர்பான விவாதங்களை வலுக்கட்டாயமாக முன்னெடுக்க செய்யப்பட்டனர். அத்துடன் கட்சி பணிகளும் முடக்கப்பட்டன. இந்த கால பகுதியில் குமார் குணரத்தினம் கட்சியில் தன் ஆதிக்கத்தினை நிலைநாட்டிட எல்லா வகையான கீழ்தரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஆரம்பித்தார்.

விவாதங்கள் மூலம் தன் ஆதிக்கத்தினை நிலை நாட்ட முனைந்தோடு எதிர்த்தவர்களை கட்சி ஒரங்கட்டும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார். எதிர்த்தவர்களுக்கு கட்சி வழங்கிய பொருளாரதார உதவிகளை இடைநிறுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒரம் கட்டினார்.

இவருக்கு ஆதரவாக அவரை போன்றே ஏதேச்சகார போக்குடைய பிரச்சார செயலாளர் உட்பட  பலர் செயற்பட்டனர். கட்சியின் மூத்த செயற்பாட்டாளர்களில் பலரை குமார் குணரத்தினம் தனக்கு சாதகமாக திருப்பி கொண்டார். இவருடன் ஆரம்பத்திலிருந்தே செயற்பட்ட பலரின் கறுப்பு பக்கங்களை இவர் அறிவார். அதனை பயன்படுத்தியே தனக்கு சாதகமாக பலரை இவர் அணிசேர்த்தார். அவர்களின் முறைகேடான பாலியல் தொடர்புகள், கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்களில் அவர்களுக்கிருந்த தொடர்புகள் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டன. கட்சிக்குள் தங்கள் ஆதிக்கத்தினை வலுபடுத்த காத்திருந்த பலர் இவருக்கு பக்க பலமாக செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குமார் குணரத்தினம் இனபிரச்சினை விவகாரத்தில் தன் தனிப்பட்ட சிந்தனையை கட்சியின் கொள்கையாக கொண்டுவருதிலும் இந்த தந்திரத்தினையே  கடைபிடித்துள்ளார். கட்சி வேலைத் திட்டம் தொடர்பான விவாதங்கள் நடந்த போது இன பிரச்சினை விவகாரத்தில் பலர் தங்கள் நிலைப்பாட்டினை ஒரே இரவில் மாற்றி கொண்டனர். அதற்கு பின்னால் குமார் குணரத்தினமே செயற்பட்டுள்ளார். குறிப்பாக கட்சியின்  பொது செயலாளர் சேனாதீர குணதிலக்க  ஒரே இரவில் இனபிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டினை மாற்றி கொண்டார். கட்சியில் பிரம்மச்சாரியாக வலம் வரும் இவரின்  மனைவிகள் பிள்ளைகள் தொடர்பான வெளியே சொல்ல முடியாத இரகசியங்களை குமார் குணரத்தினம் அறிந்து வைத்துள்ளமையே இதற்கு பின்னாலுள்ள காரணம். இவ்வாறு பலரை இவர் தன் கைபொம்மைகளாய் வைத்துள்ளார். இவர்கள்  அனைவரும் இணைந்து தன் கறுப்பு பக்கங்களை மூடி மறைக்க எடுக்கும் நடவடிக்கைகள் பலரை கட்சியிலிருந்து விலகி செல்ல  வைத்துள்ளது. கிட்ட தட்ட 200 ற்கும் அதிகனமான முழுநேர செயற்பாட்டாளர்கள் விலகி சென்றுள்ளனர்.  

கட்சிக்குள் சனநாயக மத்திய படுத்தல் மறைந்தமையும் ஏதேச்சதிகார போக்குகள் தலை தூக்கியமையும் கட்சிக்குள் சனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கான வாய்ப்புக்களை இல்லாது செய்தது. மேலும் ஒரு வர்க்க கட்சியின் வர்க்க போராட்ட கட்சியின் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் நேர்மையையும் தனிப்பட்ட ஒழுக்க விழுமியங்களையும்  கடைபிடிக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும். எம்மால் சமூகத்தின் ஒழுக்க விழுமியங்களை கீழ்தரமான முறையில் மீறி சமூகத்தினை வழிநடத்திட முடியாது. அப்படியானவர்களுடன் இணைந்து எதனையும் சாதிக்கவும் முடியாது.

தலைமை பதவிகளில் இருப்பவர்கள் இவ்வாறான நிலைக்கு செல்லும் போது  அவர்களது குற்றங்கள் வெளிப்படும் போது கட்சி தலைமை பதவிகளில் இருந்து நாகரிகமான முறையில் ஒதுங்கி கொள்வதே சிறந்ததாகும். மாறாக அதனை மூடி மறைக்க மேலும் கீழ் தரமான காரியங்களில் ஈடுபடுவது மோசமான விளைவுகளையே தரும்.

சமூக  ஓழுக்க விழுமியங்கள், தனிப்பட்ட ஒழுக்க விழுமியங்கள் கடைபிடிக்கப்படாத ஒரு இயக்கத்தினால் எதனையும் சாதிக்க முடியாது அவர்களுடன் என்னை போன்றவர்களினால் இணைந்தும் செயற்பட முடியாது. வெளியே  கூற இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால் அதற்கு நேரத்தை தற்போது செலவிட முடியாது. சாதிக்க அசாத்தியம் என்று மற்றவர்களால் கருதப்படும் விடயங்கள் இருக்கின்றன.

-- 

என்றென்றும் அன்புடன் 

பழ .றிச்சர்ட் 

077-1751148

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99684/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.