Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பொதுசன நூலகத்திற்கான பிரதம நூலகராக முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரி?

Featured Replies

 

Librarie_CI.jpg

யாழ்.பொதுசன நூலகத்திற்கான பிரதம நூலகராக தனது ஆதரவாளரான முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை நியமிக்க அமைச்சர்      றிசாத் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தற்போது பொதுநூலகத்தின் பிரதம நூலகராக இருந்து வரும் இமெல்டா ஓய்வு பெறும் காலம் அண்மித்துள்ள நிலையில் எந்தவித அடிப்படை தகுதியுமற்றவரான நிசாத் என்பவரை நியமிக்க அமைச்சர் றிசாத் அழுத்தங்னை பிரயோகித்து வருவதாக கூறப்படுகின்றது.


கடந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளாக சென்றிருந்த சிங்களவர்கள் சிலர் நூலகத்தில் அடாவடிகளில் ஈடுபட்டமைக்கு கடும் எதிர்ப்பு உள்ளுரில் கிளம்பியிருந்த நிலையில் நூலகத்தில் தமது பிடியினை இறுக்கிக்கொள்ள ஆளுநர் சந்திரசிறி அமைச்சர் றிசாத்தின் ஆலோசனையினில் அவசர அவசரமாக புத்தளத்திலிருந்து முன்னாள் இராணுவப்புலனாய்வு அதிகாரியொருவரை தருவித்து அவரிற்கு கூடிய அதிகாரங்களுடன் நூலக உதவியாளர் பதவியொன்றை வழங்கியிருந்தனர். தற்போது பொதுசன நூலகத்தின் அனைத்தையும் தீர்மானிக்கும் நபராக இந்நபரே இருந்து வருகின்றார்.


எனினும் தற்போது அடுத்த கட்ட நகர்வாக குறித்த நபரை நூலகத்தின் பிரதம நூலகராக நியமிக்க முயற்சிகள் ஆரம்பமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் பின்னணியில் தகுதியற்றவர்களை நியமித்து நூலக செயற்பாடுகளை முடக்கவும் புலம்பெயருதவிகளை சுருட்டிக்கொள்ளவுமே இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


ஏற்கனவே வடக்கு மாகாணசபை முதல் போக்குவரத்து சபை வரை அமைச்சர் றிசாத் நியமித்தவர்களாலேயே நிரம்பி வழிகின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பின் மாகாணசபை நிர்வாகம் கூட இத்தகைய நியமனங்களை வெளியேற்ற முடியாது திணறுவதாக  தெரிய வருகிறது.

இதேவேளை தகுதியானவர்கள், நூலக சேவையில் இருப்பவர்கள், அரசியல் செல்வாக்குகளால் திணிக்கப்படாத எவரும் வடக்கில் அரச நியமனங்களை பெற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை எனதெரிவிக்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய தரப்புகள் தமது மேலாதிக்கத்தை திணிக்கும் வகையில் அரசியல் பின்னணியில் நியமனங்கள் வழங்கப்படுவதே விமர்சனத்திற்கு உரியது எனத் தெரிவித்தனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99702/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.