Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் வாழும் வடக்கிலும் மத்தியிலும் இந்து கோவில்களுக்கு அச்சுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

182843147212-ramanathaswamy-temple-600.j

தமிழர் வாழும் வடக்கிலும் மத்தியிலும் இந்து கோவில்களுக்கு அச்சுறுத்தல்!

இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டுவருவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் கூறியுள்ளது. 

இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதும் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் வழிபாடுகள் நடத்த முடியாத அளவுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக நடந்துவருவதாகவும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் தெரிவித்தார். 

அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள இந்து ஆலயங்களை மூடி வைத்திருக்காது பூஜைகள் நடத்துவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை என்றும் கந்தையா நீலகண்டன் கூறினார். 

இந்த நிலையில், அடுத்த கட்டமாக சர்வதேச சமூகத்திடம் தங்களின் பிரச்சனைகளை கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் கீரிமலை உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த மூன்று இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி சென்றுபார்க்க முயன்ற வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உள்ளே செல்ல அனுமதிக்காது இராணுவத்தினர் திருப்பியனுப்பி விட்டதாகவும் கந்தையா நீலகண்டன் கூறினார். 

வடக்கு மாகாண முதலமைச்சருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலை எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

சுதந்திர கால அரசியல் தலைவர்களில் ஒருவரான சேர். பொன் இராமநாதன் இன்று இருந்திருந்தால் தமது மக்களின் நிலைகண்டு ´கண்ணீர் விட்டு அழுதிருப்பார்´ என்றும் இந்து மாமன்றத்தின் தலைவர் கூறினார். 

சனிக்கிழமை சேர். பொன் இராமநாதன் தினம் அனுட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, அகில இலங்கை இந்து மாமன்றத்தின் குற்றச்சாட்டுக்களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. 

´யாழ்ப்பாணத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ மத வழிபாட்டுத் தலங்களை அழிக்கும் வேலையில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபட்டதில்லை. நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவமும் பொய்யான செய்தியை அடிப்படையாகக் கொண்டு பரப்பட்டிருக்கிறது´ என்றார் இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய. 

´யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்விடங்களில் மத சுதந்திரத்துக்கு எந்தவிதமான தடைகளும் கிடையாது´ என்ற இலங்கை இராணுவ பேச்சாளர், ´மக்கள் வசிக்காத அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள ஆலயங்களில் பூஜை வழிபாடு நடத்த வேண்டும் என்று கோருவது நியாயமில்லை´ என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, கடந்த நான்கு நாட்களில், நான்கு இந்து கோவில்கள் மலையகத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், வட பகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி விட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரி மாவட்ட கொலொன்ன பொலிஸ் பிரிவில் ஹேஸ் தோட்ட அம்மன் கோவிலில் ஒரு சம்பவமும், மாத்தறை மாவட்ட தெனியாய பொலிஸ் பிரிவில் தெனியாய, அணில்கந்த தோட்டங்களில் அம்மன், முருகன் கோவில்களில் மூன்று சம்பவங்களும் என மொத்தம் நான்கு கொள்ளை சம்பவங்களில் கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற தகவல்கள் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் இலங்ககோனை தொடர்பு கொண்டு நான் கடுமையாக ஆட்சேப புகார் தெரிவித்த பிறகு தென் பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்ன, மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் மற்றும் கொலொன்ன, தெனியாய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு தமது விசாரணை நடவடிக்கைகளை விபரித்தார்கள். 

சம்பந்தப்பட்ட தோட்ட மக்களிடம் விசாரித்த போது ஸ்தலத்துக்கு மோப்ப நாய்களுடன் பொலிசார் வந்து விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சொன்னார்கள். 

வடக்கில் நடப்பது போல் இவையும் திட்டமிட்ட இந்து கோவில் அழிப்பு-கொள்ளை சம்பவங்களா என்ற சந்தேகம் இப்பகுதி மலையக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர்கள் பற்றி தகவல்கள் இருப்பின் உடன் போலிசுக்கு அல்லது எனது கைபேசிக்கு (777312770) அறிவியுங்கள் என மனோ கணேசன் கேட்டுகொண்டுள்ளார். 

(பிபிசி, அத தெரண தமிழ்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.