Jump to content

கூன் பாண்டியன்(நெடுஞ்செழியன் . )


Recommended Posts

1458412_449516635160054_1650622879_n.png
கூன் பாண்டியன். ============== பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும் ஒருவனாவான். இவனது இயற்பெயர் நெடுஞ்செழியன்  . அவனுடைய முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான். கூன் பாண்டியன் அறிவு மிக்கவன். தன்னுயிர் போலவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவன். நீதியும் நேர்மையும் அவனிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன. இங்கனம் நல்ல குணங்கள் பலவும் அமையப் பெற்ற கூன் பாண்டியன் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தான். கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி என்பவள், பெண்டிர்க்குரிய நற்குணங்கள் பலவும் கொண்டிருந்தாள். தனது பெயருக் கேற்பவே மங்கையருக்கெல்லாம் அரசியாகவே விளங்கினாள். கணவன் கருத்துணர்ந்து நடப்பதில் வல்லவனாகத் திகழ்ந்தாள். இல்லற வாழ்க்கையும் நற்குண மனைவியும் பெற்ற கூன் பாண்டியன், அரசியல் வாழ்க்கையிலும் நெறி தவறா அமைச்சன் ஒருவனையும் பெற்றிருந்தான். குலச்சிறை என்னும் பெயருடைய அவன், கூன் பாண்டியனுக்குத் தலைமை அமைச்சனாக இருந்து ஆட்சியைத் திறமையாக நடத்தி வந்தான். மங்கையர்க்கரசியாரை மனைவியாகவும், குலச்சிறையை அமைச்சனாகவும் பெற்ற கூன் பாண்டியன், யாதொரு குறையுமின்றி வாழ்ந்து வந்தான். அவன், சோமசுந்திரக் கடவுளிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தான். அவனைப் போலவே, அவன் மனைவியும் அமைச்சனும் சிவ பக்தியிற் சிறந்து விளங்கினர். மன்னன் கோயில்களில் பூசைகள் குறைவில்லாமல் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களைக் கடவுள் போல போற்றி வழிபட்டான். இல்லற வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், பக்தி வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்கிய கூன் பாண்டியனது ஆட்சியில் குடிமக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். வறுமை என்பதே பாண்டிய நாட்டில் தலைகாட்டவில்லை; வளம் கொழிந்தது. தேனைச் சுற்றி எறும்புகள் மொய்ப்பதைப் போல, வளமுள்ள பாண்டி நாட்டை நோக்கி, நாலா திசையிலும் மக்கள் வந்து குடியேறினர்; பல சமயத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுபவர்களும் மதுரை நகரில் நிரம்பினர். அவர்களுள், அருகனைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமண சமயத்தினர் மிகுதியாக மதுரையில் குடியேறினர். சிறிது சிறிதாகச் சமணர்கள் அரசனிடம் செல்வாக்குத் தேடிக் கொண்டனர். கூன் பாண்டியன் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவன். அதனால், சமணர்களையும் பிற சமயத்தவர்களையும் ஆதரித்தான். ஆனால், அவ்வாறு ஆதரித்தது அவனுக்கே தீங்காக முடிந்தது. சமண சமயத்தைப் பற்றிய செய்திகளைச் சமண முனிவர்கள் வாயிலாகக் கேட்டுணர்ந்தான். சமணர்களும் அதுதான் சமயமென்று, சைவ சமயத்தைவிடச் சமண சமயம் மேலானது என்று அரசன் நம்புமாறு செய்தனர். உண்மை யுணராத அரசன், மனம் மாறத் தொடங்கினான். வாழையடி வாழையாகச் சைவ சமயத்திலே வளர்ந்து வந்த பாண்டியர் குலத்திலே பிறந்த கூன் பாண்டியன், சமணரது வலையில் வீழ்ந்து விட்டான்; சைவ சமயத்தை விட்டு சமணனாக மாறினான். அரசன் சமண சமயத்திற்கு மாறியதை அறிந்ததும் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் புழுப்போல் துடித்தனர். சைவ சமயம் மங்கிவிடுமே என்று அஞ்சினர். கூன் பாண்டியனைத் திருத்த முடியுமா? அவன் அரசனாயிற்றே? என்ன செய்வானோ? என்று எண்ணியவராய், மனதிற்குள்ளேயே பொருமினர். இருந்தாலும் அரசனுக்குத் தெரியாமல், சைவ சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தினர். 'அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி' என்பார்கள். அரசன் சமண சமயத்தைத் தழுவியதை அறிந்த குடிமக்களில் பலரும் சமண சமயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்; அரசன் மேல் உள்ள அச்சத்தால் சிலர் சமணராயினர்; சமணருடைய கொடுமை தாங்காமல் சமணரானோர் பலர். சைவத்தில் சிறந்து விளங்கிய மதுரை மாநகரம் சமண சமயத்திற்கு அடிமைப்பட்டது. கொஞ்ச நஞ்சமிருக்கும் சைவ சமயமும் எங்கே அழிந்து விடுமோ என்று மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அஞ்சினர். சமண சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தியிருந்த கூன் பாண்டியன், போரில் ஈடுபடும்படியான நிலை ஏற்பட்டது. வட நாட்டரசன் ஒருவன், பெரும்படையுடன் கூன் பாண்டியனைத் தாக்குவதற்காகப் புறப்பட்டு வந்தான். அவன் படையெடுத்து வருவதை ஒற்றர்களால் அறிந்த கூன் பாண்டியன் தானும் போருக்குத் தயாரானான். பாண்டியப் படை அணி வகுத்து நின்றது. கூன் பாண்டியன் வேப்பமாலை சூடித் தேரேறிப் புறப்பட்டான். தேர்மீது மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது; முரசு முழங்கப் பாண்டியப் படை அரசனைப் பின் தொடர்ந்தது. வடநாட்டுப் படையும் பாண்டியப் படையும் திருநெல்வேலியிலே சந்தித்தன; இரு பெரும் படைகளும் மோதிக் கொண்டன; பாண்டியனிடத்திலே யானைப் படை மிகுதியாக இருந்தன. சில நாட்கள் வரையில் முழு மூச்சோடு போரிட்டுக் கொண்டிருந்த வடநாட்டுப் படை, பாண்டியனது யானைப் படை முன் நிற்கமாட்டாமல் புறங்காட்டி யோடின; வடநாட்டுப் படையின் தோல்வியைக் கண்டு பாண்டிய வீரர்கள் தோள்தட்டி ஆரவாரித்தனர். பாண்டியன், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வேப்ப மாலையோடு வாகை மாலையும் சூடிக் கொண்டு மதுரையை அடைந்தான். வெற்றி வீரனாக வரும் தங்கள் அரசனை மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வரவேற்றனர். மங்கையர்க்கரசியாரும் தன் கணவனின் வெற்றியை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்தாள். போர் முடியுற்றதால் நாட்டில் அமைதி நிலவியது. பாண்டியன் தனது கருத்தை மேலும் சமண சமய வளர்ச்சியில் செலுத்தத் தொடங்கினான். ஆங்காங்கே சமணக் கோயில்களும், சமணப் பள்ளிகளும் கட்டப்பட்டன. அரசன் சமண சமய வளர்ச்சியில் மிகுதியான கருத்தைச் செலுத்தியதால், சைவ சமயம் மேலும் தாழ் நிலையடையத் தொடங்கியது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயம் தாழ்ந்து வருவதைக் கண்டு மிகக் கவலை கொண்டார்கள்; சைவ சமய வளர்ச்சிக்கு யாது செய்வதென்று இருவரும் ஆராய்ந்தனர். அப்போது சீர்காழிப் பகுதியிலே தோன்றிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சைவத் தொண்டு செய்து வருவதைக் கேள்வியுற்றனர். சம்பந்தரால் சைவம் தழைக்கும் என்று நம்பினர். எனவே, அவரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவு செய்தனர். தங்கள் நம்பிக்கைக்குரிய ஏவலாளரில் சிலரை, அரசனுக்குத் தெரியாமல் சம்பந்தரிடம் அனுப்பினர்; பாண்டி நாட்டின் சமய நிலையைப் பற்றிய உண்மையை அவருக்குச் சொல்லுமாறு ஏவலாளரிடம் கூறியிருந்தனர். திருஞானசம்பந்தர் ஒவ்வோர் ஊராகச் சென்று, சிவபெருமானை வழிபட்டு வந்தார். அம்முறையில் திருமறைக்காட்டிற்குச் சென்று, வேதவனப் பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, மங்கையர்க்கரசியாராலும் குலச்சிறையாராலும் அனுப்பப்பட்ட ஏவலாளர்கள், திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கினர். அவர்கள் வாயிலாக பாண்டி நாட்டில் சமண சமயம் வளர்ச்சி பெற்று வருவதையும், சைவ சமயம் தாழ்ந்து வருவதையும், அறிந்தார். பாண்டியன் சமண சமயத்தையும், மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயத்தையும் ஆதரித்து வருவதும் அவருக்குத் தெரியும்; வந்த ஏவலாளர்கள் அவரைப் பாண்டி நாட்டிற்கு வந்து, சமணர்களை வாதத்தில் வென்று, சைவ சமயத்தை ஈடேற்றுமாறு வேண்டிக் கொண்டனர். திருஞானசம்பந்தரும் அதற்கு உடனபட்டார். தம்முடன் இருந்த அடியாராகிய திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப் பாண்டி நாட்டிற்குப் பயணமானார். அவரைப் பின்தொடர்ந்து சைவ அடியார் கூட்டம் சென்றது. திருஞானசம்பந்தர் அடியார்கள் கூட்டத்துடன் மதுரைக்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அவரது வருகையைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை வரவேற்றுக் கோயிலுக்கு அழைத்து வருமாறு குலச்சிறையாரை அனுப்பிவிட்டுத் தாம் நேராகக் கோயிலுக்குச் சென்றார். குலச்சிறையார், மதுரைக்குப் புறத்தே தங்கியிருந்த திருஞானசம்பந்தரைச் சென்று கண்டு வணங்கி வரவேற்று அளவளாவினார். குலச்சிறையார், திருஞானசம்பந்தரை மீனாட்சியம்மையைத் தரிசிப்பதற்காகக் கோயிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அவரும் அவரது வேண்டுகோளுக்கிணங்கித் தம்முடைய திருக்கூட்டத்துடன் கோயிலுக்குச் சென்றார். முன்னமே கோயிலுக்குச் சென்று காத்திருந்த மங்கையர்க்கரசியார், சம்பந்தரைக் கண்டதும் கீழே விழுந்து பணிந்தார். சம்பந்தர் சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியம்மையையும் வழிபட்டுத் தேவாரத் திருப்பதிகங்கள் பாடினார். பின்னர் எல்லோரும் ஒன்றுகூடி அளவளாவினார்கள். சமணர்கள் செய்யும் கொடுமைகளையெல்லாம் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மற்றைய அடியார்களும் சம்பந்தருக்குத் தெரிவித்தனர். சமணர்களை வாதத்தில் வென்று சைவ சமயத்தை நிலை நிறுத்துமாறும், அரசனையும் சைவனாக்கித் திருநீறணியச் செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர். சம்பந்தரும் சமணரை வாதத்தில் வெல்வதாக வாக்களித்தார். சம்பந்தர் தங்கியிருப்பதற்காக மடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பந்தர் இறைவனைத் தொழுத பின் தம்முடைய திருக்கூட்டத்தோடு மடத்திற்குச் சென்று தங்கினார். சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியதை அறிந்த சமணர்கள் கடுங்கோபங் கொண்டனர். அவருக்கு எந்த வகையிலாவது தீங்கு செய்து, மதுரையை விட்டு ஓடிப் போகுமாறு செய்ய வேண்டுமென்று திட்டமிட்டனர். சமணர்கள் எல்லோரும் ஒரே கூட்டமாகப் பாண்டியனைக் காணச் சென்றனர். சம்பந்தரது வருகையால் சமண சமயம் அழிந்து விடும் என்று முறையிட்டனர். கூன் பாண்டியன் அதற்கு யாது செய்வது என்று அவர்களையே வினவினான். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் மடத்திற்கு நெருப்பிட்டு, சம்பந்தரை மதுரையை விட்டு ஓடச் செய்வதாகக் கூறினர். சமண சமய வெறியினால், அரசனும் அதற்கு உடன்பட்டான். ஞானசம்பந்தரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்தை நோக்கி நள்ளிரவில் சமணர்கள் சென்றனர். அப்பொழுது எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால், மடத்தில் தீப் பற்றுமாறு செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் மந்திர வித்தை சம்பந்தரையோ, அவர் தங்கியிருந்த மடத்தையோ ஒன்றும் செய்யவில்லை. சமணர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அரசன் அறிந்தால் தங்களைத் தண்டிப்பதோடு, சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிவிடுவான் என்பதை உணர்ந்தனர். அதனால், தீப் பந்தங்களைக் கொண்டு திருமடத்திற்குத் தீயிட்டனர்; மடத்தை நெருப்பு எரிக்கத் தொடங்கியது. நெருப்புப் பரவத் தொடங்கியதும் அடியார்கள் கூச்சலிட்டனர். விழித்தெழுந்த சம்பந்தர் திருமடம் தீப்பற்றி எரிவதைக் கண்டார். சமணர்களாலேயே அச் செயல் நிகழ்ந்தது என்பதை அடியார்கள் சொல்ல அறிந்து கொண்டார். உடனே, சிவபெருமான் மீது தேவாரம் பாட, நெருப்பு இருந்த இடம் தெரியாமல் அணைந்தது. அரசனும் நெருப்புப் பரவுவதற்குக் காரணமாக இருந்தவனாதலால், அந்நெருப்பே, சுரநோயாக அவனைச் சென்றடைந்தது. அரசன் புழுவாய் துடித்தான்; அரசாங்க மருத்துவர்களும் சமண மந்திரவாதிகளும் விரைந்தனர். சமணர்களின் மருந்தாலும் மந்திரத்தாலும் பாண்டியனது சுரநோய் மேலும் வளர்ந்ததேயொழியச் சிறிதும் குறைந்தபாடில்லை. நோயினால் துடித்த பாண்டியன், தன்னுடைய நோயைத் தீர்க்க முடியாத அவர்களையெல்லாம் அப்பால் போகுமாறு வெறுப்புடன் கூறினான். மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சம்பந்தருக்குச் செய்த தீங்கினால்தான் அந்த நோய் வந்ததென்றும், சம்பந்தர் வந்தால்தான் அந்த நோய் நீங்குமென்றும் சொல்லினர். நோயைப் பொறுக்க முடியாத பாண்டியன், எப்படியாவது தனது நோய் நீங்கினால் போதுமென்று எண்ணினான்; அதனால், உடனே சம்பந்தரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான். சம்பந்தர் அரண்மனைக்கு எழுந்தருளினார்; சமணர்கள் அவரது வருகையை விரும்பவில்லை. அதனால், அரசனிடம் சென்று சம்பந்தர் வந்தால் சமண சமயம் அழிந்துவிடுமென்றும், அவரை வராமல் தடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஆனால், அரசன் அவர்கள் சொல்லுக்கு உடன்படவில்லை. சம்பந்தரையும் சமணர்களையும் தன்னெதிரில் ஒன்று கூடுமாறு சொல்லினன். இருவரில் எவர் தங்கள் தெய்வத் தன்மையால் தன்னுடைய நோயைத் தீர்த்தாலும், அவர்கள் சொல்வது போல் கேட்பதாகப் பாண்டியன் கூறினான். ஞானசம்பந்தரும் சமணர்களும் அதற்கு உடன்பட்டனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்பதென்றும், சம்பந்தர் தமது வன்மையால் வலப் பாகத்து நோயைத் தீர்ப்பதென்றும், முடிவாயிற்று. முதலில், சமணர்கள் தங்கள் மந்திரத்தை ஓதி, மயில் தோகையால் அரசனது இடப் பக்கத்தைத் தடவினர். தடவியவுடன், நோய் குறைவதற்கு மாறாகப் பன்மடங்கு பெருகியது. ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, அரசனது வலப்பாகத்தில் திருநீற்றினைத் தடவினார். தடவியவுடனேயே வலப்பக்க நோய் இருந்த விடம் தெரியவில்லை. அரசன் சம்பந்தரது பெருமையை உணர்ந்தான்; சமணர்களையெல்லாம் அவ்விடத்தைவிட்டு உடனே அகன்று விடுமாறு கட்டளையிட்டான். அவர்கள் அரசனது கட்டளைக்கு அஞ்சி உடனே சென்றுவிட்டனர். அரசன் சம்பந்தரை வணங்கித் தன்னுடைய இடப்பாகத்து நோயையும் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டான். சம்பந்தரும் இடப் பக்கத்தில் திருநீறு தடவ , அந்நோய் மறைந்தது; நோயோடு அவனது கூனும் மறைந்தது. நெடுநாளாக இருந்த கூனும் சுரநோயும் நீங்கப் பெற்ற பாண்டியன், சைவ சமயத்தின் பெருமைகளை உணர்ந்தான். அன்று முதல் அவனுக்கு 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பெயர் ஏற்பட்டது. சைவசமய வளர்ச்சியில் கருத்தைச் செலித்தத் தொடங்கினான்; சிவன் கோயில்களுக் கெல்லாம் பூசைகள் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களை அன்போடு உபசரித்து வந்தான்; நீண்ட நாள் சிவத்தொண்டு செய்தபின் இறைவனது திருவடி நிழலை அடைந்தான். -- சங்கத் தமிழ் இலக்கியம் --

https://www.facebook.com/photo.php?fbid=449516635160054&set=a.446095018835549.1073741828.446090048836046&type=1&theater

பாண்டியன் நெடுஞ்செழியன்.

======================

1468810_448381271940257_1338805061_n.png

பழங்காலத்திலேயே பாண்டியர் தங்கள் தலைநகரமாகிய மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர். அவ்வாறு வளர்த்து வந்த பாண்டியருள் பலர் தமிழில் நல்ல புலமையுடையவராகவும், செய்யுளியற்றக் கூடிய திறமை பெற்றவராகவும் விளங்கினர். நெடுஞ்செழியன் என்பான் அவர்களுள் ஒருவனாவான். நெடுஞ்செழியன் என்னும் பெயரில் பாண்டியர் பலர் இருந்தனர். அதனால் வேறுபாடு தெரிவதற்காகத் தாங்கள் செய்த அருஞ் செயலைத் தங்கள் பெயருக்கு முதலில் அமைத்துக் கொண்டனர்.

இங்கு கூறப்படும் நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவான்.

இவ் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வீரத்தில் மேம்பட்டு விளங்கினான். அவனைக் கண்டாலே பகைவர் அஞ்சி நடுங்கினர்.

அவன் மனைவி கோப்பெருந்தேவி என்னும் பெயருடையவள். அவள் நற்குண நற்செயல்கள் உடையவளாய், கணவன் கருத்துப்படி நடக்கும் தன்மையுடையவளாய், விளங்கினாய். சமையத்தில் அமைச்சனைப் போல ஆலோசனைக் கூறும் அரிய பண்பு அவளுடன் அமைந்திருந்தது.

மனத்திற் கிசைந்த மனைவியைப் பெற்ற நெடுஞ்செழியன், இல்லறத்தையும் அரசாட்சியையும் இனிதே நடத்தி வந்தான். நெடுஞ்செழியனையும் கோப்பெருந்தேவியையும் மகிழ்விக்க அவ்விருவருக்கும் மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு வெற்றிவேற் செழியன் என்று பெயரிட்டு, நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். வெற்றிவேற் செழியனும் தன் பெயருக்கு ஏற்றவாறு, எல்லா வகையிலும் வெற்றியுடன் விளங்கினான். தன் தந்தைக்குப் பல வழிகளிலும் துணை புரிந்தான்.

அன்புள்ள மனைவியையும் அறிவறிந்த மகனையும் பெற்ற நெடுஞ்செழியன், ஒரு சமையம் போரில் ஈடுபடும்படியான நிலை ஏற்பட்டது. வடநாட்டிலுருந்து ஆரியனொருவன் பெரும் படையுடன் தமிழ் நாட்டைத் தாக்குவதற்காக வந்து கொண்டிருந்தான். நெடுஞ்செழியனின் ஒற்றர்கள் வந்து, ஆரியப் படையின் வருகையை அறிவித்தனர்.

செய்தியைக் கேட்டதும் நெடுஞ்செழியனின் கண்கள் சினத்தால் சிவந்தன. தோள்கள் விம்மின. தமிழரது ஆண்மையை அறியாது எதிர்த்து வரும் படையை எதிர்த்தழிக்க வீறு கொண்டான். மற்றைய சேர சோழர்களின் துணையையும் அவன் நாடவில்லை. தான் ஒருவனே எதிர் நின்று போரிட்டு ஆரியப் படையை வெல்வது என்று முடிவு செய்தான்.

ஆரியப் படை பாண்டிய நாட்டில் காலடி வைப்பதற்கு முன்னே, வரும் வழியிலேயே சென்று தாக்கினான். ஆரியப் படையை வெல்வதற்குப் பெரும்படை தேவையில்லையென்று சிறுபடையுடனே சென்றிருந்தான்.

பாண்டியப் படை சிறிதானாலும் வலிமையில் பெரியது. இரு படைக்கும் போர் மூண்டது. ஆரியப்படை அளவில் பெரிதாக இருந்தாலும், புலிக்கு முன் நிற்க மாட்டாமல் மருண்டோடும் மான் கூட்டம்போல, பாண்டியப் படை முன் நிற்கமாட்டாமல் நாலா திசையிலும் சிதறி ஓடியது. நெடுஞ்செழியன் வெற்றி பெற்று வாகை மாலை சூடினான்.

அவனது வீரத்தை மக்களும் புலவரும் போற்றினர். அவ் வெற்றிக்குப் பின், அவனை எல்லோரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கத் தலைப்பட்டனர். அந்தப் பெயரே அவனுக்கு நிலைத்தது.

போரில் நெடுஞ்செழியன் ஆற்றிய தீரத்தைக் கண்ட பகைவர்கள், அவனை எதிர்ப்பதைவிட்டு அவனுடன் நட்புக் கொள்ள முயன்றனர். வீரத்தில் சிறந்து விளங்கியது போலவே, ஈகையிலும் நெடுஞ்செழியன் சிறந்து விளங்கினான். கல்வியின் அருமை பெருமைகளை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அதனால், தன் நாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்று, அதற்கான பணியில் ஈடுபட்டான்.

தாயொருத்தி தன் வயிற்றில் பிள்ளைகள் பல பிறந்தாலும், கல்வியிற் சிறந்த பிள்ளையிடமே மிகுந்த அன்பு காட்டுவாள். கற்றறிந்த இளைஞனையே அரசனும் விரும்பி அழைப்பான். கீழ்குலத்தான் கற்றவனாக இருந்தால், மேற்குலத்தானும் அவனிடம் சென்று அடிபணிந்து நிற்பான்.

'இவ்வாறு, பலவகையிலும் சிறந்து விளங்கும் கல்வியை, ஆசிரியர்க்கு உதவி செய்தும், பொருள் கொடுத்தும், பணிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.'

இக்கருத்து உள்ள பாடல் ஒன்றால், கல்வியின் அருமையை நெடுஞ்செழியன், தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகினர் எல்லார்க்கும் உணர்த்தினான். அப்பாடல் விளக்கம் இங்கே காண்க:-

https://www.facebook.com/photo.php?fbid=646471935377721&set=a.525913584100224.127697.501293243228925&type=3&theater

'அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி' என்பார்கள். கல்வியில் கருத்துடையவனாய் விளங்கிய நெடுஞ்செழியனைப் போலவே, பாண்டிய நாட்டு மக்களும் கல்வியில் அக்கறை செலுத்தினர். கல்வியிலும் வளத்திலும் பாண்டிய நாடு சிறப்புற்று விளங்கியது. நெடுஞ்செழியன் தன் நாட்டு முன்னேற்றத்தையும், கல்வியில் சிறந்து விளங்கிய குடிமக்களையும் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

நெடுஞ்செழியனுக்கு உரிய கொற்கைத் துறைமுகத்தில், ஒரு முறை விலை மதிக்க முடியாத முத்துக்கள் கிடைத்தன. அம் முத்துக்கள் உடனே அரசனுக்கு அனுப்பப்பட்டன. நெடுஞ்செழியன் இதற்கு முன், அத்தகைய முத்துக்களைப் பார்த்ததில்லை.

மிகப் பெரியதாகவும் ஒளியுள்ளதாகவும் விளங்கிய அந்த முத்துக்களைக் கொண்டு, கோப்பெருந் தேவிக்குச் சிலம்புகள் செய்ய முடிவு செய்தான்.

உடனே அரசாங்கப் பொற்கொல்லனை அழைத்து வரச் செய்தான். அவனிடம் முத்துக்களைக் கொடுத்து, அரசிக் கேற்ற சிலம்புகளைச் செய்து வருமாறு கட்டளையிட்டான். பொற் கொல்லனும், பணிவுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போயினான்.

இயற்கையிலேயே பொற்கொல்லன் மிகவும் பேராசைக்காரன். அந்தப் பேராசை விலை மதிக்க முடியாத முத்துக்களைக் கண்டதும் மேலும் வளர்ந்தது. அரசனுக்குரியது என்றுகூட நினைக்கவில்லை. சில முத்துக்களை எடுத்துப் பதுக்கி வைத்துக் கொண்டான்.

சில முத்துக்களை வைத்து அழகான சிலம்பு ஒன்று செய்தான். சில நாட்களுக்கு பின்னர் அச் சிலம்பினை எடுத்துக் கொண்டு அரசனிடம் சென்றான். அரசனைக் கண்டு மிகவும் அச்சத்தோடு வணங்கினான். தான் கொண்டு போயிருந்த சிலம்பு ஒன்றைக் கொடுத்து, மற்றொரு சிலம்பைத் திருடன் எவனோ திருடிச் சென்றுவிட்டதாகக் கூறினான்.

ஆனால் அரசன், பொற் கொல்லனுடைய சொல்லில் நம்பிக்கைக் கொள்ளவில்லை. சினத்தோடு பார்த்தான். அரசனது சினத்தைக் கண்ட பொற் கொல்லன் அஞ்சி நடுங்கினான். இன்னும் சில நாட்களில் திருடனைக் கையும் மெய்யுமாகப் பிடித்து வருவதாகப் பணிவுடன் கூறி, விடைபெற்றுச் சென்று விட்டான்.

அரசன் தண்டிப்பானே என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், முத்துக்கள்மேல் வைத்த ஆசையைப் பொற் கொல்லன் விடவில்லை. ஒவ்வொரு நாளும் அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். இந் நிலையில் காவிரிப் பூம் பட்டினத்திலிருந்து கோவலன் என்பவன் தன் மனைவி கண்ணகியுடன் மதுரைக்கு வாணிகம் செய்வதற்காக வந்தான்.

கண்ணகியின் இரண்டு சிலம்புகளில் ஒரு சிலம்பை விற்று, அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாணிகம் செய்வதென்று முடிவுடன், கோவலன் ஒரு சிலம்பைக் கையிலெடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றான். அவ்வழியே அரசங்கப் பொற் கொல்லன் வந்து கொண்டிருந்தான். கோவலன், அவனிடம் சிலம்பைக் காட்டி, 'விற்றுத் தர முடியுமா?' என்று கேட்டான்.

கோவலன் காட்டிய சிலம்பு, தான் அரசனுக்குச் செய்து கொடுத்த ஒரு சிலம்பைப் போலவே இருப்பதைக் கண்ட பொற் கொல்லன் மனதில் சூழ்ச்சி உருவாகியது.

கோவலனை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு விரைவாக அரண்மனைக்குச் சென்று அரசனைக் கண்டு வணங்கினான். 'சிலம்பு கவர்ந்த திருடன் அகப்பட்டுக் கொண்டான்' என்று பொற்கொல்லன் சொன்னான். சிலம்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், நெடுஞ்ச்செழியன் சிறிதும் ஆராயாமல், திருடனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருமாறு காவலாளர்க்குக் கட்டளையிட்டான்.

காவலாளர்களும் அரசன் கட்டளையை நிறைவேற்றினர். கோவலன் நீதியற்ற முறையில் கொல்லப் பட்டான். பொற் கொல்லன் இனி அச்சமில்லை என்ற எண்ணத்துடன் சென்றான்.

கணவன் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் கண்ணகி, அளவற்ற துன்பத்தை அடைந்தாள். பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற உணர்ச்சி அவளிடம் தலைதூக்கியது.

நேரே அரசனிடம் சென்றாள். கையிலே ஒரு சிலம்பினை வைத்துக்கொண்டாள். அரசன், அவளது துன்ப நிலையைக் கண்டதும் காரணம் புரியாமல் விழித்தான்.

கண்ணீருடன் வந்த கண்ணகியை 'யார்' என்று வினவினான். அக் கேள்வி, கண்ணகியைச் சினங் கொள்ளச் செய்தது. சினத்தால் சொற்களைக் கொட்டினாள்.

'தெளிவில்லாத அரசனே! என்னை யார் என்று கேட்கிறாய்? நான் யார் என்பதை நான் கூறாமலே தெரிந்திருக்க வேண்டும். இருந்தாலும் சொல்கிறேன். சோழ நாட்டுத் தலைநகரமாகிய காவிரிப்பூம் பட்டினம் எனக்குச் சொந்த ஊர். ஒரு புறாவுக்காகத் தன்னுடலையே அரிந்து கொடுத்த சிபிச் சோழன் என்பவனும், ஒரு பசுவின் கன்றினைக் கொன்றதற்காகத் தன் மகனையே தேர்க் காலில் வைத்துக் கொன்ற மனுநீதிச் சோழன் என்பவனும் வாழ்ந்த பெருமையுடைய அவ்வூரில் மாசாத்துவான் என்னும் வணிகன் ஒருவன் இருக்கிறான். அவன் மகனாகிய கோவலனே என் கணவனாவான். பிழைப்பதற்காக உனது மதுரைக்கு வந்தோம். வந்த விடத்தில், அவனைச் சிறிதும் நேர்மையின்றிக் கொன்று விட்டாய்; இது முறையா?' என்றாள்.

கண்ணகி கூறிய செய்திகளைக் கேட்டதும் தான் பாண்டியனுக்கு, அவள் சிலம்பு திருடியவனின் என்பது தெரிந்தது. அமைதியாக , கள்வனைக் கொல்லுதல் தனது நாட்டுச் சட்டமென்றும், அதில் தவறில்லையென்றும் பாண்டியன் கண்ணகிக்கு அறிவித்தான்.

அது கேட்ட கண்ணகி மேலும் சினங்கொண்டாள். தன் கணவன் கள்வனல்ல என்று வாதாடினாள். பாண்டியனும் விட்டுக் கொடுக்கவில்லை. கோவலன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பித்துக் காட்டுமாறு நெடுஞ்செழியன் கூறினான். கண்ணகி சிறிது நேரம் சிந்தித்தாள்.

அரசனுடைய சிலம்பின் உள்ளே உள்ளவை முத்துக் பரல்களா, மாணிக்கப் பரல்களா என்று கண்ணகி வினவினாள். அரசன் தன்னுடைய சிலம்பு முத்துப் பரல்களைக் கொண்டது என்றான். கண்ணகியோ தன் சிலம்பு மாணிக்கப் பரல்களையுடையது என்றாள். அரசனுக்கு அப்போதுதான் சிறிது நடுக்கம் ஏற்பட்டது.

நீதியிலிருந்து தவறி விட்டோமோ என்று அஞ்சினான். உடனே, கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பைக் கொண்டு வருமாறு காவலாளர்க்குக் கட்டளையிட்டான்.

காவலாளர்கள் அச் சிலம்பினைக் கொண்டு வந்து அரசன் முன் வைத்தனர். கண்ணகி அச் சிலம்பைக் கையிலே எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தாள். சிலம்பு உடைந்தது; அதனுள்ளிருந்து மாணிக்கப் பரல்கள் சிதறிப் பாண்டியன் முன் விழுந்தன.

மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டியன் நடு நடுங்கினான். பொற் கொல்லனது சொல்லைக் கேட்டு, குற்றமற்றவனைக் கொன்ற தனது அறமற்ற செயலை எண்ணி யெண்ணி வருந்தினான். நீதி தவறாத பாண்டியர் குடிக்குத் தன்னால் இழுக்கு நேர்ந்துவிட்டதே என்பதை நினைத்ததும் பாண்டியன் நிலை குலைந்தான்.

'பொற் கொல்லனுடைய சொல்லைக் கேட்ட யானோ அரசன்? இல்லை, இல்லை! யானே கள்வன். இது வரையிலும் நீதி தவறாத பாண்டியர் குலத்தில் நீதி தவறியவன் நான் ஒருவனே. இந்தச் செய்தியை மற்றைய அரசர்களது செவியில் விழுவதற்கு முன்னே நான் உயிர் துரத்தலே நலமாகும்.' என்று கூறி அரியணையிலிருந்து மயங்கிக் கீழே விழுந்தான்.

விழுந்தவன் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டான். தன் செயலால் வளைந்த கோலை, தனது உயிரைக் கொடுத்து செங்கோலாக்கினான். பக்கத்தில் இருந்த கோப்பெருந் தேவி நடந்ததையெல்லாம் கவனித்தாள். கணவன் இறந்த பிறகு தனக்கு வேலையில்லை என்று கருதி, கணவன் சென்றவிடத்திற்குத் தானும் செல்வதென்று முடிவு செய்தாள். அவ்வளவுதான்; அவளது உயிர் அவளது உடலை விட்டுப் பிரிந்து, நெடுஞ்செழியன் சென்ற விடத்தை நோக்கிச் சென்றது.

நெடுஞ்செழியன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, தனது உயிரையே விட்ட பிறகும் கூட கண்ணகியின் சினம் தணியவில்லை. மதுரை மாநகரத்தையும் எரித்து ஒழிந்த பின்தான், அவளது சினம் தணிந்தது.

இணையுங்கள்====> சங்கத் தமிழ் இலக்கியம்

பொற்கைப் பாண்டியன்.

 

1426147_446803385431379_1160561073_n.png

பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு. அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம். அங்கிருந்து அரசாண்டு வந்தான் பாண்டிய மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர் யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும் பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன் என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.

பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு, நீதி தவறாதவன். பொய், களவு, கொலை முதலியவற்றுக்குச் சிறிதும் இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும் விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன். அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச் சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும் கொண்டிருந்தான்.

ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன் போல மாறுவேடம் பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந் தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும் நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன. ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும் இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும் அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின் இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும் பேச்சொலி கேட்டது.

அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன் ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன். மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத் துணையும் இல்லாதவன். அரசன் அந்த வீட்டை அடைந்து மறைந்து நின்றான். உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான்.

"கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி, காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த, வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள் சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக் காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்? அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?" என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன் மனைவி.

அதற்கு அவன்,

"நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான். அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்? நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப் பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.

காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன் களிப்புற்றான், கூத்தாடினான், அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள் பொழுது புலர்ந்தது.

அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள் தேடி வரச் சென்ற கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன் ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு. பலரும் பலவாறு கருத இடமளிக்கும் என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள அனைவருக்குமே உணவுப் பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான். அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.

அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில் மாறுவேடம் பூண்டு நகர்க் காவல் சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும் நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப் பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல சென்றன.

ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல் கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன் இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும் வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ, வேறு யாரோ என்ற ஐயம் அரசனுக்கு உண்டாயிற்று. அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத் தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான். அதனை அறியான் அரசன்.

கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன், வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய குரலில் கேட்டான். அவன் மனம் தீய எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன் மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள். அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும் வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான் என்று கூறினாரே அன்று. அந்த அரசன் இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.

நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்; திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும் தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே" என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.

உடனே, அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளையும் தட்டி, ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி, அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர் அனைவரும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத் தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதினர். "பாண்டிய அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக் கேட்டு வருத்தப்பட்டனர்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. பார்ப்பனர் அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக் கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து, முறை வேண்டினர். அரசன் வருந்தினான்; அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய முறையீட்டை கூறினான். "அவ்வாறு கதவைத் தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று கேட்டான்.

அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து, அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.

"அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம். தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!" என்றான்.

அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன் கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!" என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான். யாரையோ வெட்டப் போகிறான் அரசன் என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர். ஆனால், அரசன் தனது வலக் கையைத் தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!

பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள் தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம் என்ன?" என்று கேட்டனர். அரசன் நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.

மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்; "இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல், பொன்னால் கையொன்று செய்து பொருத்திப் பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என அழைத்து வரலாயினர்.

மேலும் செய்திகள்====> சங்கத் தமிழ் இலக்கியம்

பசும்பூண் பாண்டியன்.

==================

1459284_446390282139356_725229146_n.png

(புறம் - 18, 19, 23 - 26, 76 - 79, 371, 372)

தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த பெருமை பாண்டியர்களுக்குரியது. அவர்களின் தலைநகரமாக மதுரைமா நகரம் விளங்கியது. “பாண்டிய நாடு முத்துடைத்து” என்று பெரியோர் போற்றுவர். முத்தும் மணியும் விற்கக்கூடிய கடைகள் பல, மதுரைமா நகரத்தின் செல்வ வளத்தை அயலாறுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. இத்தகைய செல்வ வளம் மிக்க மதுரைமா நகரைத் தலைநகரமாகக் கொண்டு, புகழ் பெற்ற பாண்டியர் பலர் ஆண்டு வந்தனர். அவருள் பசும்பூண் பாண்டியனும் ஒருவன்.

அவன், பலவகையிலும் தன் முன்னோரைக் காட்டிலும் சிறந்து விளங்கினான். அவனை நெடுஞ்செழியன் என்றும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றும் சான்றோர் அழைத்தனர். பசும்பூண் பாண்டியன் மிக இளைஞனாக இருந்த போதே அவன் தந்தை இறந்து விட்டான். அரசாளும் பொறுப்பு அவனை வந்தடைந்தது. மிக மிக இளைஞனாக இருந்தும் அவன் முடிசூடிக்கொள்ள அஞ்சவில்லை. 

இளைஞனாக இருந்தும் வில்வித்தையிலும் வாட்போரிலும் சிறந்து விளங்கினான். வீரத்தில் சிறந்து விளங்கிய பசும்பூண் பாண்டியன் அரியனையேறி அரசாளத் தொடங்கினான். அவனது ஆட்சி, நீதியாகவும் நேர்மையாகவும் நடந்தது. கல்விக் கேள்விகளிலும் சிறந்தவன் பசும்பூண் பாண்டியன். குடிமக்கள் குறையில்லாது வாழ்ந்தார்கள். கொற்கைத் துறைமுகத்திலிருந்து கிடைக்கும் முத்துகளும், பொதியமலைச் சந்தனமும் அவனைச் செழிப்புடையவனாக ஆக்கின. அவன் ஆண்ட மதுரைமா நகரமும் செல்வ வளத்தால் அழகுடன் விளங்கியது.

சிறப்பும், மதுரையின் வளமும் கண்ட பகை வேந்தர் உள்ளத்தில் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இளைஞன்தானே என்று எண்ணி, எப்படியும் அவனை வென்றுவிடலாம் என்று நப்பாசைக் கொண்டனர். இளைஞனாகிய பசும்பூண் பாண்டியனை வெல்ல எழுவர் திரண்டனர். அவர்களில் இருவர் பேரரசர்கள். ஒருவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன், மற்றொருவன் சோழன், மீதி ஐவர் குறுநில மன்னர்களாவர். அவர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் முதலியோராவர்.

இவ்வெழுவரும் ஒன்று கூடிச் சூழ்ச்சி செய்தனர். பசும்பூண் பாண்டியனை எந்த வழியிலாவது வென்றுவிட வேண்டுமென்று துடித்தனர். பெரும் படையுடன் மதுரை மீது படையெடுத்தனர். தன்னை எதிர்த்துப் பெரும் படை வருவதை ஒற்றர்களால் அறிந்த பசும்பூண் பாண்டியன் சினம் கொண்டு பொங்கி எழுந்தான். படையெடுத்து வரும் பகைவர்களை, வழியிலேயே மடக்கி அவர்களது செருக்கை அடக்க நினைத்தான்.

வஞ்சினங் கூறிய பசும்பூண் பாண்டியன் வேப்பமாலை சூடிக் கொண்டு படை தொடர்ந்துவரப் புறப்பட்டான். பாண்டியப் படைகள் ஆரவாரித்தன. தேர்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், காலாட் படையும் அணிவகுத்துப் புறப்பட்டன. பகைவர்கள் தங்கள் படையுடன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தங்கியிருந்தனர். பசும்பூண் பாண்டியன் படைகளுடன் வந்து கொண்டிருப்பதை அறிந்தார்கள். அவர்களும் தங்கள் படைகளைத் தயார்படுத்திக் கொண்டனர். பசும்பூண் பாண்டியன் படையும் பகை மன்னர்கள் படையும் ஒன்றோடொன்று மோதின.

மதயானைப் போலப் பசும்பூண் பாண்டியன் போரிக்களத்தில் புகுந்து வீரப் போரிட்டான். அவனது கைவாளுக்கு யானைகளும், குதிரைகளும், காலாட்படையினரும் மிகுதியாக இரையாயின. பகைபடையினர் பசும்பூண் பாண்டியனின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பகைவர் படைகள் நாலாபக்கமும் சிதறின. பகைவர்களை விடாது ஓட ஓட விரட்டித் தாக்கினான் பசும்பூண் பாண்டியன். துரத்திச் சென்று யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை மட்டும் சிறை செய்தான். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். இந்தக் காட்சியை குடபுலவியனார் தனது “எழுவரை வென்ற ஒருவன்” (புறம் – 19) என்ற பாடலில் விளக்குகிறார்.

வெற்றி வீரனாகப் பசும்பூண் பாண்டியன் தலைநகருக்குத் திரும்பினான். தன் நாட்டு அரசன், ஏழு பேர்களையும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றதை அறிந்த குடிமக்களும் புலவர்களும் எதிர்கொண்டு வரவேற்றுப் புகழ்ந்தனர். அவனது வெற்றியை நக்கீரர், பொதும்பில் கிழார், ஆலம்பேரி சாத்தனர், மாங்குடி கிழார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடினர். மாங்குடி மருதனார் “மதுரைக் காஞ்சி” என்னும் பாடலில் பசும்பூண் பாண்டியனைப் போற்றிப் புகழ்ந்தார்.

பசும்பூண் பாண்டியன் தலையாலங்கானத்துப் போரோடு அமைதியடைய விரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் தனது பெயர் பரவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதனால், தனக்குப் பணியாத பகை மன்னர்கள் மேல் அவன் போர் தொடுக்க முற்பட்டான். தமிழ் நாட்டில் அவ்வப்போது குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த கொங்கர் என்பாரை, அவர்களுக்கு உரிய கொங்கு நாட்டிலேயே சென்று வென்று அடக்கினான். சேர நாட்டின் மீது படையெடுத்து, சேரருக்குரிய முசிறித் துறைமுகத்தையும் யானைப்படையையும் அழித்து வெற்றியுடன் நாடு மீண்டான். அதன் பின்னர், குறுநில மன்னனாகிய எவ்வி என்பவனை வென்று அவனுக்குரிய முத்தூர்க் கூற்றத்தையும் மிழலைக் கூற்றத்தையும் கைப்பற்றிக் கொண்டான்.

சென்ற இடமெல்லாம் பசும்பூண் பாண்டியனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. அவனை எதிர்த்து நிற்பார் யாருமில்லை. பல புலவர்கள் அவனைப் போற்றிப் பாடினார்கள். வெற்றி வீரனாகிய அவன், கொடை வீரனாகவும் விளங்கினான். புலவர்களுக்கும் பாணர்களுக்கும் வேண்டும் பொருள்கொடுத்துப் போற்றினான். தனக்கு எல்லோரும் அடங்கியிருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கில்லை. அடங்காதவரை அடக்குவதே அவனது முறை. பல போர்களிலும் போர் செய்து புண்பட்ட வீரர்களைத் தனித்தனியே சென்று கண்டு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினான். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தான். இதனால் எல்லோரும் அவனைத் தெய்வமாகவே போற்றினான்.

பலரும் போற்றும் வண்ணம் பசும்பூண் பாண்டியன் நெடுங்காலம் பாண்டி நாட்டை ஆண்டான். குடிமக்கள் ஒரு குறையுமின்றி வாழ்ந்திருந்தனர்.

மேலும் செய்திகள்====> சங்கத் தமிழ் இலக்கியம்

உக்கிரப் பெருவழுதி.

================

 
1462978_446340995477618_370693023_n.png
 
 
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அதனை ஆண்ட அரசர்கள் தமிழ்ப் பற்று மிக்கவர்கள். அவர்களுள் உக்கிரப் பெருவழுதி என்பவனும் ஒருவனாவான்.

உக்கிரப் பெருவழுதி மூன்றாம் தமிழ்ச் சங்கத்தைக் காத்தவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூறு என்னும் நூலைத் தொகுத்து அளித்தவன்.

திருவள்ளுவர் தனது திருக்குறளை அரங்கேற்றிய அவைக்குத் தலைமை வகித்த தனிப்பெருமையுடையவன். அழகு தமிழில் பாட்டியற்றும் ஆற்றல் பெற்றவன்.

தமிழ்ப் புலவர் பெருமக்களோடு இருந்து தமிழை வளர்த்தவன். அவர்கள் போற்ற வாழ்ந்தவன்; நற்பண்புகள் உடையவன்.

இத்தகைய உக்கிரப் பெருவழுதிக்கு முன்னர்த் தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய அரசர்களிடையே ஒற்றுமை இருந்ததில்லை. பகையும் பொறாமையும் நிலைப்பெற்றிருந்தன. இவற்றால் அவர்கள் தங்களுக்குள்ளேயே இடைவிடாது போர் புரிந்து வந்தனர். அதனால் தமிழகத்தின் வாழ்வும் வனப்பும் புகழும் குன்றின.

தமிழ் அரசர்களாகிய தம் முன்னோர் செய்த தவற்றை உணர்ந்தான் உக்கிரப் பெருவழுதி. உடனே அதனை நீக்க முடிவு செய்தான்.

உக்கிரப் பெருவழுதி பாண்டி நாட்டை ஆட்சி செய்து வந்த காலத்தில், சேர நாட்டை மாரிவெண்கோவும், சோழ நாட்டைப் பெருநற்கிள்ளியும் ஆண்டு வந்தனர். வழுதி இவ்விருவரிடமும் பகை என்பதே இல்லாமல் பெருநட்புடையவனாய் வாழத் தொடங்கினான்.

இவ்வாறு மூன்று அரசர்களும் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்ட புலவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கோர் அளவில்லை.

ஒரு நாள் ஒளவையார், வழுதியும் கிள்ளியும் வெண்கோவும் நட்புக் கொண்டு ஒருசேர வீற்றிருந்த காட்சியைக் கண்டு களிப்புற்றார். "இந்த ஒற்றுமை இன்று போல என்றும் இருக்காதா?" என்று எண்ணினார். மூவரும் ஒற்றுமையோடு நிலைபெற்று வாழ்வதற்கான மூதுரைகள் சிலவற்றையும் கூறி மகிழ்ந்தார். புறநானூறு 367, இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது ஒளவையார் பாடப்பட்ட பாடல்.

இவ்வாறு பகை என்பதே இல்லாமல், இரு பெருவேந்தரோடும் நட்பு கொண்டும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த உக்கிரப் பெருவழுதிக்கு, அவனை அறியாமலேயே அவன் நாட்டில் சிறிய பகைவனொருவன் தோன்றிவிட்டான்.

யார் அப்பகைவன்? அவன் ஒரு பெரு வீரன். ஊக்கமும் உரனும் ஒருங்கேயுடையவன். கல்வியறிவு இல்லாதவன். தீய நண்பர்களை மிகுதியாகப் பெற்றவன். முரடன். வேங்கைப் புலியைப் போன்றவன். வேங்கை மார்பன் என்ற பெயர் உடையவன்.

வேங்கை மார்பன், இன்று காளையார் கோவில் என வழங்கும் கானப்பேர் என்னும் ஊரை ஆண்டு வந்த ஒரு சிற்றரசனாவான். இக்கானப்பேர் பாண்டி நாட்டின் நடுவே அமைந்த ஓர் ஊராகும்.

இவன், இவ்வூரைச் சுற்றிப் பகைவரால்கூடப் பற்றிக்கொள்ள முடியாத வண்ணம் கோட்டையொன்று கட்டி, அதில் வாழ்ந்து வந்தான்.

அக்கோட்டை நிலத்தின் எல்லையையும் கடந்து விட்டதோ என்று மதிக்கத்தக்க அளவில் ஆழமாகத் தோண்டப் பெற்ற அகழியையும், வானத்தின் எல்லையையும் கடந்து விட்டதோ என்று கருதத்தக்க அளவில் உயரமாக எடுக்கப் பெற்ற மதிலையும் உடையது.

ஒளியும் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கிய மரங்கள் செறிந்த காவற் காட்டையும், சிற்றரண்கள் பலவற்றையும் கொண்டது.

இத்தகைய கோட்டை யொன்றினைத் தன் நாட்டில் பகைவனொருவன் கட்டி வாழ்வதை அறிந்தான் வழுதி. அவ்வாறு அவன் வாழ்வதை தன் ஆட்சிக்கே இழுக்காகும் என்று கருதினான். அதனால் அவனை நேரில் அழைத்து அறிவுரை கூறித் திருத்தலாம் என்று கருதினான். உடனே, ஒர் ஆளை அனுப்பி வேங்கை மார்பனை அழைத்து வரும்படி ஆணையிட்டான்.

வேங்கை மார்பன் வழுதியின் அரண்மனைக்கு வந்தான். வழுதி அவனை வரவேற்றான். இருக்க இடமளித்தான். அவனிடம் எடுத்துரைக்க வேண்டியவற்றை எல்லாம் நயமாக எடுத்துரைத்தான். வேங்கை மார்பன் வழுதி கூறியவற்றையெல்லாம் பேசாது கேட்டுக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் விருப்பம் எள்ளளவும் இல்லை. வெறுப்பே குடி கொண்டிருந்தது. அவனது உள்ளம் வழுதியின்மீது பகை கொண்டதே ஒழிய, அவன் கூறிய நன்மொழிகளைக் கொள்ளவில்லை.

அதனால், பாண்டியனிடம் விடை பெற்று ஊரை அடைந்தான். அடைந்ததும், தன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் யாவரும் கெட்டவர்கள். தீய குணம் உடையவர்கள். அவர்களிடம், உக்கிரப் பெருவழுதி கூறியவற்றைக் கூறி, மனம்விட்டுக் கலந்து பேசினான். அவர்கள் பாண்டியன் சொன்னதாக இவன் சொல்லியவற்றைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். அவனுக்குப் பாண்டியன் மீது சினம் பெருகி வழியும் அளவுக்கான ஆகாத சொற்களைக் கூறி, அவனைச் சினங்கொள்ளச் செய்தார்கள்.

சினமுற்ற வேங்கை மார்பன் செந்தமிழ் பாண்டியன் வழுதியை வெறுத்தான். அவனை எவ்வாறேனும் வெல்ல வேண்டும் என்று எண்ணி படை திரட்டினான். நண்பர்களைத் துணைக்கழைத்துக் கொண்டான். மாநகர் மதுரை நோக்கிப் புறப்பட்டான். செல்லும் வழியில் இருந்த சிற்றூர்களைச் சீரழித்துப் பொருள்களைக் கொள்ளையடித்தான். வயல் வரப்புகளைப் பாழ் செய்து ஏழை எளியவர்களைத் துன்புறுத்தினான்.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இவற்றை அறிந்து சினமுற்றான். படைகளைத் திரட்டி வேங்கை மார்பனோடு போர் செய்யச் சிங்கமெனப் புறப்பட்டான். வெள்ளம்போல் திரண்டு வந்த பாண்டியனுடைய வீரஞ் செறிந்த படைக் கூட்டத்தைக் கண்டு வேங்கை மார்பன் அஞ்சி ஓடினான். பாண்டிய அரசன் வழுதி, வேங்கை மார்பனையும் அவனது படையினையும் விடாது துரத்தினான். வேங்கை மார்பனின் நாட்டையும் கைப்பற்றினான். வீரன் வேங்கை மார்பன் எவ்வளவோ முயன்று பார்த்தான். தன் நாட்டில் சிறிதளவேனும் காத்து விடவேண்டும் என்று தவியாய் தவித்தான். இறுதியில் துணைக்கு வந்த சூரத் தோழர்களுடன் ஓட்டம் பிடித்தான். வேற்றூர் சென்று சேர்ந்து, பிறருக்குப் பயந்து, கரந்துறைந்து வாழலானான்.

நாட்கள் பல சென்றன. நாட்டை இழந்த வேங்கை மார்பனால் வறிதே இருக்க முடியவில்லை. அவற்றை எவ்வாறேனும் கைப்பற்றி விடவேண்டும் என்று இரவு பகலாக அரும் பெரும் முயற்சிகள் எடுத்துத் தோல்வியுற்றான்.

' உக்கிரப் பெருவழுதி பேரரசன் வழி

வந்தவன்; பெரும் படை துணையுடையவன்.

அவனை வெல்வதோ, அவன் கைப்பற்றிய

எயிலை மீட்பதோ எள்ளளவும் இயலாது '

என உணர்ந்தான், முடிவில்

' காய்ச்சிய இரும்பிலே தெளிக்கப்பட்ட நீரை அந்த இரும்பு உண்டுவிடும். அப்படி உண்டுவிட்ட நீரைக்கூட ஒரு வேளை மீட்டாலும் மீட்டுவிடலாம். ஆனால் உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிய எனது கானப் பேரெயிலை உறுதியாக மீட்கவே முடியாது. நான் கெட்டவர்கள் பேச்சைக் கேட்டு கெட்டழிந்தேன் '

என்று உணர்ந்து கூறி மிகு துயர் உற்றான். உளம் வருந்தி வாழ்ந்தான். உக்கிரப் பெருவழுதியின் பேராண்மை மிக்க இவ்வெற்றிச் செயல் கண்ட மக்கள், அவனை 'கானப் பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்று பாராட்டினர்.

https://www.facebook.com/sangattamil

Link to comment
Share on other sites

நல்ல பகிர்வு யாழ்அன்பு.

 

கூன் பாண்டியன் நோயை குணப்படுத்த முடியாத சமணர்கள் நாற்பத்தி எட்டு பேரும் மலையின் உச்சியில் கழுவேற்றப்பட்டதாகவும், எட்டாயிரம் சமண மதத்தைப் பின்பற்றியவர்கள் மதுரைக்கு அருகில் உள்ள தற்போது சாமநத்தம் என்று அழைக்கப்படும் இடத்தில் கழுவேற்றப்பட்டதாகவும் ஒரு செய்தி உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2015 ல வாக்கு போட்ட தமிழருக்கு ஒழுங்காகக் தீர்வை கொடுத்து இருந்தால் இந்த முறை பதவிக்கு வந்திருக்கலாம் ....நரி வேலை பார்த்தால் இப்படி தான் பின் வந்தவர்களை பார்த்து  சும்மா பொய் சொல்லிக்கொண்டு இருக்கணும் ......
    • கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில்  திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்கவேண்டி வந்த இடர்பாடுகளும் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களை அகற்றவேண்டும் என்றும் உறுதிப்பாட்டை இறுக்கமாக்கியது. அரசியல் அதிகாரத்தை ஒருபோதும் கொண்டிராத கட்சி என்ற வகையில் தேசிய மக்கள் சக்தியே (முன்னணி கட்சிகள் மத்தியில்) ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டதாக இருந்தது. ஊழலினாலும் முறைகேடுகளினால் சீரழிந்துகிடக்கும் நாட்டை துப்புரவு செய்ய வேண்டும் என்ற வேட்கை  ஆட்சிமுறை தொடர்பில் மக்களுக்கு இருந்த அக்கறையின் மைய  விவகாரமாக இருந்தது. வேறு எந்த பிரச்சினையினாலும் அதை மறைப்புச் செய்ய முடியவில்லை. இனத்துவ தேசியவாதத்தை கிளறிவிடுவதற்கு சில எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரயத்தனம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தேசிய மக்கள் சக்தியை தவிர, தங்கள் மத்தியில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களைக்  கொண்ட எந்தவொரு பிரதான அரசியல் கட்சியினாலும் ஊழல் பிரச்சினையை கையாள்வதற்கான அரசியல் துணிவாற்றல் தங்களுக்கு இருப்பதாக வாக்காளர்களை நம்பச்செய்ய முடியவில்லை. அதனால், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியிருப்பதாக எதாச்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களோ அல்லது அவற்றின் வாதங்களோ வாக்காள்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.  ஊழலை ஒழிக்க  வேண்டும் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை அகற்ற வேண்டும் என்பதுமே வாக்களர்களின் பிரதான அபிலாசையாக இருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் இரு முக்கிய உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதை அடுத்து ஊழலையும் அதனுடன் இணைந்த தண்டனையின்மையையும் கையாளுவதில் அரசாங்கம் அக்கறையுடன் இருக்கிறது என்ற திருப்தி தற்போதைக்கு வாக்காளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  பதிவு செய்யப்படாத ஆடம்பர வாகனம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் வன்முறை நடத்தை வரலாற்றைக் கொண்டவர்.  ஆனால், அவர் முன்னர் ஒருபோதும்  கைது செய்யப்பட்டதில்லை. அவரின் குடும்பம் காலத்துவத்துக்கு  முன்னரான  உயர்குடி தொடர்புகளை கொண்டவர் என்பதும் சமூகத்தின் ஒரு பிரிவினரின் வாக்குகளை பெற்றுத்தரக்கூடிய ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டதாலும்  அவர் கைதுசெய்யப்படால் இருந்திருக்கலாம். ஆனால்,  தற்போதைய அரசாங்கம் அவரையும் பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட  முன்னைய அரசாங்கத்தின் இன்னொரு உறுப்பினரையும் பதிவு செய்யப்படாத வாகனங்களை வைத்திருந்த ஒப்பீட்டளவில் சிறிய குற்றச்சாட்டு தொடர்பில்  இப்போது கைது செய்திருக்கிறது. இதை இவர்களின் பல சகாகக்கள் மோசடி செய்ததாக கூறப்படும் கோடிக்கணக்கான பணத்துடன்  ஒப்பிடமுடியாது. ஆனால், இது ஒரு தொடக்கம். பிரதான பிரச்சினை அதனால், பிரதான பிரச்சினையான ஊழலை தாமதமின்றி கையாளத் தொடங்கி முன்னைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளிகளில் சிலருக்கு எதிராக நடவடிக்கையை அரசாங்கம் எடுத்திருப்பதால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உண்மையில் அக்கறையுடன் இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். முன்னைய அரசாங்கத்தின் இரு உறுப்பினர்களுக்குைஎதிரான குற்றச்சாட்டுக்களை மறுதலிப்பது கஷ்டம். ஏனைன்றால் சான்றுகள் ( பதிவுசெய்யப்படாத இரு  மோட்டார் வாகனங்கள் ) கைவசம் இருக்கின்றன. கோடிக்கணக்கான பணமோசடி சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளில் சான்றுகளைப் பெறுவது கஷ்டம். முன்னைய அரசாங்கங்களினால் கடந்த காலத்தில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்பட்ட ஊழல் வழக்குகளில் பல தடவைகள் இடம்பெற்றதைப் போன்று அந்த சிக்கலான வழக்குகள் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு உள்ளாகி இறுதியில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகி விடவும் கூடும். ஆனால், தற்போதைய வழக்குகள் நேரடியானவை சிக்கலற்றவை என்பதால் அவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் விளைவாக, இன்றைய தருணத்தில் அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. குறிப்பாக, முன்னைய அரசாங்கத்தினால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை  இன்னறய அரசாங்கம் கையாளுகின்ற முறை தொடடர்பான விமர்சனங்களைப் பொறுத்தவரையில் நிலைமை இதுவே. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பதாகவும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகவும் ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு விமர்சனம். ஆனால் , தங்களது பொருளாதார இடர்பாடுகள்  சாத்தியமானளவு விரைவாக தணிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள் என்கிற அதேவேளை,  புதிய அரசாங்கம் ஒரு மாத காலத்துக்கு முன்னர்தான் பதவிக்கு வந்தது என்பதையும் குறைந்த முன்னுரிமை கொண்ட துறைகளில் இருந்து உயர்ந்த முன்னுரிமை கொண்ட துறைகளுக்கு வளங்களை  மாற்றிப்பகிர்வதற்கு புதிய வரவு  --  செலவு திட்டம் ஒன்றை  நிறைவேற்ற வேண்டியிருக்கிறது என்பதையும் அவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். வரிக் கட்டமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கு சட்டங்களில் மாற்றம் செய்யவேண்டும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் அது இந்த நேரத்தில் சாத்தியமில்லை. அத்துடன்,  ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அதன் போட்டிக் கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளின் பினபுலத்தில் நோக்கவேண்டியதும் அவசியமாகும்.  நம்பமுடியாத நிவாரணப் பொதிகள் அவற்றில் அடங்கும். சமூகத்தின் மிகவும் நலிவுற்ற குழுக்களுக்கு மாதாந்தம் நலன்புரி கொடுப்பனவு வழங்குவதாகவும் கடன்நிவாரணத் திட்டங்கள் அறிமுகம், மாற்றுத் திறனாளிகளுக்கும் மிகவும் வறுமைப்பட்டவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வரிக்குறைப்பு,  இலட்சக்ணக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சகல தரப்பினருக்கும் சம்பள அதிகரிப்பு, பெருமளவு வெளிநாட்டு முலீடுகளைப் பெறுதல் அல்லது குறுகிய கால வரையறைக்குள் கடன் நிவாரணங்களைப் பெறுதல் என்று பெருவாரியான வாக்குறுதிகளை அந்த கட்சிகள் வழங்கின. கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கையின் ஆற்றல் குறித்த தற்போதைய மதிப்பீடு மற்றும் சர்வதேச உறவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அதனால் அரசாங்கம் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது பாசாங்கத்தனமானதாகும். சாத்தியமான பங்காளிகள் அறகலய போராட்ட இயக்கத்தினால் " முறைமை மாற்றம் " என்று சுருங்கச் சொல்லப்பட்ட ஊழல் நிறைந்த ஆட்சி முறையை முற்று முழுவதுமாக மாற்றவேண்டும் என்ற மக்களின் வேட்கை பாராளுமன்ற தேர்தலிலும் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கக்கூடிய பிரசாரத் தொனிப்பொருளாக தொடர்ந்து விளங்கப்போகிறது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்காளிக்காதவர்களும் கூட ஊழலற்ற ஆட்சிமுறையை விரும்புவதால் இந்த தடவை அந்த கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. மறுபுறத்தில், கடந்த மாதம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கண்டதைப் போன்று மக்கள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களுக்கு அல்லது தங்களுக்கு உதவியவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வாக்களிக்கவும் நாட்டம் காட்டலாம்.  அது உள்ளூர் மட்டத்தில் சலுகைகளைச் செய்திருக்கக்கூடிய முன்னைய அரசாங்க உறுப்பினர்களுக்கு அனுகூலமாக அமையும். எல்பிட்டிய பிரதேச சபையில்  47 சதவீதமான வாக்குகளைக்  கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி அரைவாசி ஆசனங்களைப் பெற்றது. ஆனால், கூடுதல் சதவீதமான வாக்குகளை ஏனைய கட்சிகளே பெற்றன. நாட்டில் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் காணப்படும் நிலைவரங்களும்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை சிக்கலாக்கும். தேசிய மக்கள் சக்தி முன்னர் பெரும்பான்மையினச் சமூகத்தின் மீதே பிரதானமாகக் கவனத்தைக் குவித்தது.  அதன் உயர்மட்டத் தலைவர்களும் அந்த இன, மதப் பின்னணியில் இருந்து வந்தவர்களே. அதனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்ளைப் பொறுத்தரை, தங்கள் மத்தியில் வேலை செய்யாத ஒரு தேசியக் கட்சியை விடவும் தங்களது பிரிவுசார்ந்த நலன்களுக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கே வாக்களிப்பதில் இயல்பாகவே நாட்டம் காட்டுவார்கள். ஆனால், சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது சொந்த அரசியல் தலைவர்கள் மீதும் விரக்தியடைந்திருக்கின்ன. குறிப்பாக அந்த சமூகங்களின் இளம்  தலைமுறையினர் பிரிந்து வாழ்வதை விடவும் பிரதான சமூகத்துடனும் தேசிய பொருளாதாரத்துடனும் இணைந்து வாழ்வதில் முன்னரை விடவும் இப்போது கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். அரசாங்கம் தானாகவே அரசியலமைப்புக்கு திருத்தங்களைச் செய்யும் செயன்முறைகளில் ஈடுபடுவதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கைப்பற்றுவது சாத்தியமில்லை என்பதே  இந்த ஆய்வில் இருந்து பெறக்கூடிய முடிவாகும். அதற்கு சாதாரண பெரும்பான்மை ஒன்று கிடைக்கலாம். ஆனால் அதுவும் நிச்சயமானதல்ல. அதனால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகக்கூடிய கூட்டாகச் செயற்பட்டு சட்டங்களையும் அரசியலமைப்புத் திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்படுமானால் அதுவே நாட்டுக்கு  நல்ல வாய்ப்பாக அமையும். அதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிக்க பிரேமதாச கூறியதைப் போன்று எதிர்க்கட்சிகளுடன்  கலந்தாலோசனை, விட்டுக்கொடுப்பு, கருத்தொருமிப்பு அவசியமாகும். ஊழலும் தண்டனையின்மையும் கோலோச்சிய கடந்த காலத்தைப் போலன்றி ஊழலை முடிவு கட்டுவதற்கு தேவையான சடடங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவது எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை ஒரு அமிலப் பரீட்சையாகும். தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளிகளாக வரக்கூடியவர்களை  இன, மத சிறுபான்மை கட்சிகளில் தேடிக் கொள்ளக்கூடியது சாத்தியம்.   https://www.virakesari.lk/article/198148
    • தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்! SelvamNov 08, 2024 09:27AM அ. குமரேசன் சமூகம், வரலாறு, அரசியல் சார்ந்த நாவல்கள், ஆய்வுத் தொகுப்புகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களில், விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் பற்றி விமர்சிக்கப்படுவது போலவே, அவற்றில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களும் எழுகின்றன.  படைப்புரிமைக்குச் சமமானதுதான் விமர்சன உரிமை. ஆகவே அத்தகைய விமர்சனங்கள் வருவதைத் தடுத்துவிட முடியாது. சொல்லப்படுவது என்ன  என்பதில் வெளிப்படையாக உள்ள அரசியல் போலவே, சொல்லாமல் விடப்படுவது எது என்பதிலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. ஆயினும், என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, உண்மையைத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விமர்சிப்பதே  எனது அணுகுமுறை. அமர அரசியல் தற்போது திரையரங்குகளுக்கு வந்து பெரிய அளவுக்குக் கவனம் பெற்றுள்ள ‘அமரன்’ திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமா சித்தரித்து வந்திருக்கிற, தேச பக்தர்கள், தீவிரவாதிகள் பற்றிய அரசியல் பற்றிய சிந்தனை விரிகிறது. உண்மையாக வாழ்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படத்தைப் பற்றி வந்த எதிர் விமர்சனங்களில், அவரது சாதி அடையாளத்தை மறைத்தது ஏன் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள். தமிழ் சினிமா எப்போதுமே அந்தச் சாதியினரைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதைப் புறக்கணித்து வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு நாளேட்டில் அது ஒரு கட்டுரையாகவே வந்தது. கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான். இப்படி எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாத் தரப்பினரின் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுமானால் ஆரோக்கியமாக இருக்கும். படத்தின்  வெற்றிக் கூட்டத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரே அதை விரும்பவில்லை, தமிழர் என்றும் இந்தியர் என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் முகுந்த்தே விரும்பினார் என்று பெற்றோர் தெரிவித்தார்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ படம் வந்த நேரத்திலும், எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண அனுபவம் கிடைக்கச் செய்தவரது வாழ்க்கையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அவரது சாதி அடையாளம் மறைக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலுமே, நாயகர்கள் வேறு ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் காட்டப்படவில்லை என்பதை இந்த விமர்சகர்கள் மறைத்துவிட்டார்கள். நாட்டிற்குப் பங்களிக்கிற நாயகர்களை எந்தவொரு சாதி வில்லையையும் மாட்டாமல் சித்தரிப்பதையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அந்த நல்லிணக்க மாண்பிற்கு ‘அமரன்’ படம் உண்மையாக இருக்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான். அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நாயகப் பாத்திரங்களாக வைத்த படங்கள் வந்திருக்கின்றன. எனது நினைவு சரியாக இருக்குமானால், ‘வியட்நாம் வீடு’, ‘கௌரவம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ரோஜா’, ‘அந்நியன்’ உள்ளிட்ட அத்தகைய பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சாதியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஆதரித்ததால்தான் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லத் தேவையில்லை.  வீரமும் தியாகமும் மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினருடைய விருப்பத்திற்கும், தமிழக மக்களுடைய நல்லிணக்க வரலாற்றுக்கும் உண்மையாக இருந்தது போல், காஷ்மீர் மக்களுக்கும் ‘அமரன்’ உண்மையாக இருக்க வேண்டாமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு. ஆனந்தன். “அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது” என்று அந்த விமர்சனம் முகுந்த் வரதாராஜன்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்தே தொடங்குகிறது. “ஆனால், ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி  இழிவான அரசியல் செய்யப்படுவது போன்றுதான் இந்தப் படமும் செய்திருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வது போலவும் அழச் செய்வது போலவும் முகுந்த்தின் மரணத்திற்குப் பிறகான காட்சிகளைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது,” என்கிறார் ஆனந்தன். இத்தகைய விமர்சனங்கள் சரிதானா என்று உரசிப் பார்ப்பதற்காகவேனும் படத்தைப் பார்த்தாக வேண்டும். திரைக்கதையைப் பாதுகாப்புத் துறை, முகுந்த்தின் பெற்றோர், அவரது ராணுவ நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் படம் தயாரிக்கப்பட்டது என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மூத்த நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், ராணுவத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப்வாணி தரப்பிலோ, காஷ்மீர் மக்கள் தரப்பிலோ கருத்துக் கேட்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது மக்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து எதிர்ப்பதாகக் காட்டப்படுகிறது. அப்படிக் கல் வீசப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றவாளிக்காகக் கல் வீசியவர்கள் குறைவு. பொதுவாகக் கடந்த காலத்தில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அந்த மக்கள் கல் வீசுவதை 2008ல் ஒரு போராட்ட வடிவமாகக் கையில் எடுத்தார்கள் என்று விமர்சகர் குறிப்பிடுகிறார். ஒரு முகுந்த் மக்களுக்கு உதவிய நல்லவராக இருந்திருக்கலாம், ஆனால், நடவடிக்கைக்காக அங்கே சென்றவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைக்காகச் சிறுவர்களையும் தூக்கிச் சென்றது, பாலியல் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற வன்முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அரசியலாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதன் வலியைத் தாங்க இயலாதவர்களாகவும்  தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த மக்கள் கற்களைக் கையில் எடுத்தார்கள் என்றும் விமர்சகர் சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.  புதிய தணிக்கை இப்படிப்பட்ட ராணுவ வன்கொடுமைகள் தொடர்பாக உலக பொதுமன்னிப்பு நிறுவனத்தின் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆயினும் அம்மாதிரியான தகவல்களை வைத்துக்கொண்டு எளிதாகப் படம் எடுத்துவிட முடியாது. இதைப் பற்றிக் கூறுகிற ஆனந்தன், ஒன்றிய ஆட்சிக்கு மோடி தலைமையில் பாஜக வந்த பிறகு, ராணுவம் தொடர்பான படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் அனுமதி மட்டும் போதாது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2022 பிப்ரவரி 11 அன்று, பெரொஸ் வருண் காந்தி கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், “பாதுகாப்பு தொடர்பான உள்ளடக்கங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதில் உள்ள அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், ஆயுதப் படையினருக்கோ அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ மரியாதைக் குறைவு ஏற்படுத்தப்படாமல் இருப்பதையும், தகவல்கள் உண்மையாக இருப்பதையும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  வகையில் ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதுதான்,” என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்தப் பதில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கட்டுப்பாடுகள் சரி  என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விமர்சனப்பூர்வமாகவும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் மக்களின் துயரங்கள் பற்றியும் படமெடுக்க முனைவோருக்கு இந்த ஆணை தகர்க்க முடியாத முட்டுச் சுவராக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தொடர்பான திரைப்படங்களுக்கும் என்ஓசி கெடுபிடி கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் காட்டிய ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் திரைக்கு வந்திருக்க முடியுமா? மக்களுக்கும் படைப்புக்கும் உண்மையாக இருக்க விரும்பும் படைப்பாளிகள் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு உடன்பட்டுப் போவதை விட, திரையரங்கில் பாப்கார்ன் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள். தேசப்பற்று ராணுவ வீரர், காவல் அதிகாரி போன்ற தனி மனிதர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றின் மீது மரியாதையை ஏற்படுத்துகிற கலையாக்கங்கள் வரவேற்கத்தக்கவை.  ஆனால், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் சந்தை விற்பனைச் சரக்காக்குவது தடையின்றி நடந்து வந்திருக்கிறது. அத்துடன், முன்னுக்கு வருகிற சமூகப் பிரச்சினைகளையும் கூட விற்பனைப் பொருளாக்குகிற வேலையையும் சினிமாவினர் எப்போதுமே செய்துவந்திருக்கிறார்கள். மாற்றத்திற்கான உண்மை அக்கறையுடன் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் படமாக்கங்கள் அரிதாகவே வருகின்றன. அதிலும், (உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ  எதுவானாலும்) படத்தின் நாயகப் பாத்திரம் ராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி, எதிர்நிலைப் பாத்திரம் தீவிரவாதி என்றால் முழுக்க முழுக்க அவனை ஈவிரக்கமற்ற ஒரு சதிகாரன் போலவே காட்டுவதை முந்தைய முன்னணி  நட்சத்திரங்கள் நடித்த படங்களும் செய்து வந்திருக்கின்றன. அவன் தரப்பு நியாயம் எதுவும் பெயரளவும் பேசப்படுவதில்லை. எந்தப் பின்னணியில் அவன் தீவிரவாதிகளின் பக்கம் இணைந்தான் என்பதும் விளக்கப்படுவதில்லை. ஒருவேளை நாயகப் பாத்திரமே தீவிரவாதி என்றால் இவை சொல்லப்படலாம். ஆனால், அப்படியொரு நாயகப் பாத்திரத்துடன் படம் பண்ணுவதற்கு யார் துணிவார்? எந்தவொரு குற்றச் செயல் தொடர்பாகவும் கைது செய்யப்படுகிறவர்களை, அவர்கள் குற்றவாளிகள்  என்று அரசாங்கம்  சொல்லிவிட்டது என்பதற்காக நீதிமன்றம் ஏற்பதில்லை. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பையும் கேட்டுவிட்டுத்தான் தீர்ப்புக்குப் போகிறது, போக வேண்டும். (நீதிக் கோட்பாட்டின்படி சொல்கிறேன். பணபலமோ அதிகாரத் தொடர்போ ஆள்வலிமையோ இல்லாத அப்பாவிகள் பலர் தங்கள் தரப்பை வலுவாக முன்வைக்க முடியாமல் குற்றவாளிகளாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது தனிக்கதை.) ஆனால், நம்மூர் சினிமாக்கள், எதிர்க் கதாபாத்திரங்களுக்குத்  தீவிரவாதி அங்கியை மாட்டிவிட்டால் அவர்கள் தரப்பிலோ, போராடும் மக்கள் தரப்பிலோ நியாயம் இருப்பதாக ஒப்புக்குக்கூட காட்டுவதில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாகவே, அடக்குமுறைக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். நியாயங்கள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்றாவது சொல்ல வேண்டும், அந்தக் குறைந்தபட்ச நடுநிலை கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் ஓவியத்தில் இந்தப் பாரம்பரியம் விசுவாசமாகப் பின்பற்றப்படுவதன் விளைவு என்ன? உண்மை நிகழ்வு ஒன்றை சாட்சிக்கு அழைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியின் ஊடகக் கலைத்துறை மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாகப் பயிற்சியளிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒருநாள் மாணவர்கள்  ஒரு பெரிய பையில் வைத்திருந்த ஓவியத் தாள்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். சென்னையின் சில அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 100 குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அவை. அந்த ஓவியங்கள் அனைத்திலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, தாடி வைத்திருந்த, மீசை இல்லாத, குல்லா அணிந்த, நீண்ட கறுப்பு அங்கியுடன் கையில் துப்பாக்கி பிடித்திருந்த உருவம் வரையப்பட்டிருந்தது. “தீவிரவாதியின் படம் வரைக” என்று கேட்கப்பட்டபோது அத்தனை பேரும் இவ்வாறு வரைந்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் தெரிவித்தார்கள். அந்த உருவம் யாரைப் பிரதிபலிக்கிறது என்று எவரும் புரிந்துகொள்ளலாம். அந்த 100 குழந்தைகளில் ஒரு சிறுபான்மை சமயம் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் இருந்தார்கள். இப்படியொரு பிம்பத்தை அவர்களின் மனங்களில் பதிய வைத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கிருப்பதை மறுக்க முடியுமா? தேசப்பற்று என்றால் அது ராணுவ வீரர் அல்லது காவல்துறை அதிகாரியின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை யார் செய்தது? பருவநிலை சவால்களை எதிர்கொண்டு வயலில் இறங்கும் வேளாண் பணியில், போராடுகிற வேறு தொழிலாளர்களுக்காகத் தமது ஒரு நாள் ஊதியத்தை இழந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழமைப் பணியில், மயக்கும் மதவெறிப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து ஒற்றுமையைப் பேணும் நல்லிணக்கப் பணியில், சாதி ஆணவத்துக்கு எதிராகத் தோள் சேரும் சமூகநீதிப் பணியில், மாணவர்களுக்காகப் பொழுதை அர்ப்பணிக்கும் ஆசிரியப் பணியில், தொற்று வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளைத் தொட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் செவிலியப் பணியில், தாக்குதல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகப் பணியில், கடும் மழையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் மின் பணியில், வெள்ளச் சாலையிலும் பேருந்தை இயக்கும் போக்குவரத்துப் பணியில், பேச்சும் இணையமும் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் தொலைத்தொடர்புப் பணியில், பில் போட வேண்டாமென்றால் வரி தள்ளுபடி என்று சொல்வதைத் தள்ளிவிட்டு பில் போட்டே பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் பணியில்…. இன்னும் நாட்டின் ரத்த ஓட்டமாக இருக்கும் அத்தனை பணிகளிலும் துடிப்பது தேசப்பற்றுதான். ராணுவ வீரர்களோடும் காவல்துறையினரோடும் நில்லாமல் இப்படிப்பட்ட பணிகளையும் பாருங்கள் சினிமாவினரே, வெற்றிப் படங்களுக்கான அருமையான கதைகள் கிடைக்கும். இல்லையேல், மனித உரிமை முழக்கங்கள் படப்பிடிப்புக் கூடங்களிலும் உரக்க ஒலிப்பதை நாடு கேட்கிற நாள் வரத்தான் செய்யும்.     https://minnambalam.com/featured-article/amaran-movie-politics-patriotism-speacial-article-on-kumaresan/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.