Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் கருத்துச் சுதந்திரமும் இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான சுதந்திரமும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sri_lanka_lion.jpg

கடந்த வார ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக இரண்டு விவகாரங்கள் காணப்பட்டன. ஒன்று முன்னணி ஊடக நிறுவகம் ஒன்றுக்கு எதிராக மங்கள சமரவீர வழக்குத் தொடுத்துள்ளமை. இரண்டாவது ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பெருமைப்படுத்துகின்ற அல்லது அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடுகின்ற எவரையும் சிறிலங்கா அரசாங்கமானது தடைசெய்யும் என்கின்ற அறிவிப்பு. 

Sundayleader-%20tribunal.jpg

சிறிலங்காவில் ஊடக சுதந்திரம் என்பது தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தனிப்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் மங்கள சமரவீர, முன்னணி ஊடக நிறுவகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமை தொடர்பில் சிலர் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ள அதேவேளையில், இந்த ஊடகமானது தொழில்சார் ஒருமைப்பாட்டை மதித்துச் செயற்படுகிறதா என சிலர் கேள்வியெழுப்புகின்றனர். 

கடந்த வாரம் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாளை முன்னிட்டு புலிகள் அமைப்பை புகழ்ந்தோ அல்லது அதற்கு ஆதரவாகவோ செய்தி வழங்கும் எந்தவொரு ஊடகங்களும் தனிநபர்களும் தடைசெய்யப்படுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இறந்தவர்களை நினைவுகூருவதென்பது அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கும் புலிகள் அமைப்பை புகழ்ந்துரைப்பதற்கும் இடையில் தெளிவான வேறுபாடு காணப்படுகின்றது என்பது ஒருசாராரின் கருத்தாகும். 

இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்காவில் உள்ள சில அரசியற் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பு உறுப்பினர்கள் 'சண்டே லீடர்' ஊடகத்திடம் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

மனோ கணேசன் - ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர்: 

ஊடகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியற் பிரச்சினைகளுக்கு அரசியற் தீர்வுகள் காணப்பட வேண்டும். ஆனால் இது இதன் எல்லைகளை மீறிச் செல்லக்கூடாது. மாவீரர்களை நினைவுகூருகின்றவர்களைத் தடைசெய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் பயனற்றவை. ஒரு தரப்பினரின் தேசிய கதாநாயகர்கள் மறுதரப்பின் எதிரியாக இருப்பது பொதுவானதாகும். 

ஜே.வி.பி கிளர்ச்சிக் காலத்தில் அதாவது 1971 தொடக்கம் 1987 வரை சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள், சிறிலங்கா அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் எனக் கருதப்பட்டனர். இந்நிலையில் சிறிலங்கா அரசுக்கு எதிரான கிளர்ச்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஜே.வி.பி தலைவர்களை நினைவுகூருவதற்கு ஜே.வி.பிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் ஏன் அனுமதி வழங்கக் கூடாது? 

இறந்தவர்களை நினைவுகூருவதற்கும் நினைவஞ்சலிகளை நடாத்துவதற்கும் யாருக்கு அனுமதி வழங்க முடியும் அல்லது யாருக்கு அனுமதி வழங்க முடியாது என்பதைத் தீர்மானிப்பதில் எந்தவொரு இனப் பாரபட்சமும் இருக்கக் கூடாது. 

சுனில் கண்டுனேற்றி – ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்: 

ஒருபுறத்தே சிறிலங்கா அரசாங்கமானது தான் பெற்றுக் கொண்ட போர் வெற்றியைக் கொண்டாடும் அதேவேளையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இறந்த புலி உறுப்பினர்களை நினைவுகூருகின்றனர். இது இனமுரண்பாட்டை மீளவும் நிலைநாட்டுகின்றது. கடந்த காலத்தில் ஏற்பட்ட உணர்ச்சி மிக்க எந்தவொரு நிகழ்வுகளிலும் இருதரப்பினரும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறான உணர்ச்சி மிக்க நிகழ்வுகள் மோதல்கள் எந்த வடிவத்திலும் உருவாக வழிவகுக்கும். 

தற்போது போர் என்பது வரலாற்றின் ஒரு பகுதியாகிவிட்டது. இதனை மீண்டும் மீண்டும் நினைவுகூராது, நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளில் ஈடுபடவேண்டும். இறந்து போன கடந்தகாலப் பிரச்சினைகளை விடுத்து எதிர்கால விடயங்களை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்கா அரசாங்கமானது தனது அரசியல் அதிகாரத்தை தனிப்பட்டவர்களின் உரிமைகளையும் தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தையும் மீறுவதற்குப் பயன்படுத்தினால் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இனப் பாகுபாடுகளைத் தூண்டும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது. இந்தப் பிரச்சினைகளை வெற்றி கொள்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

இதேவேளையில், இனப் பாகுபாடுகளைத் தூண்டி மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு கிழக்கில் செயற்படும் முக்கிய அரசியற் குழுக்கள் செயற்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இதற்கு ஊடகங்களும் உடந்தையாக இருக்கக்கூடாது.மங்கள சமரவீர, சிறிலங்காவின் முன்னணி ஊடகத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளதானது, வேறுபட்ட முரண்பாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. 

விக்கிரமபாகு கருணாரட்ன – நவ சம சமாஜக் கட்சியின் தலைவர்: 

பொதுமக்களைப் பாதிக்கின்ற அரசியல்வாதியின் செயலை விமர்சிக்கின்ற அல்லது வினவுகின்ற சுதந்திரத்தை ஊடகங்கள் கொண்டுள்ளன. தனிப்பட்ட ஒருவரை ஊடகங்கள் அவமானப்படுத்தி அல்லது பிழையான விதத்தில் செய்தி வெளியிட்டால், குறித்த ஊடக நிறுவனத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர் வழக்குத் தாக்கல் செய்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி நாட்டின் கிளர்ச்சிக் குழுக்கள் எனக் கூறப்பட்டதுடன், பயங்கரவாத அமைப்பு எனவும் முத்திரை குத்தப்பட்டனர். தமிழ் மக்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தமது தலைவர் என ஏற்றுக் கொண்டது போல் ஜே.வி.பி தனது தலைவராக ஏற்றுக் கொண்ட றோகன விஜயவீர படுகொலை செய்யப்பட்ட போது அவரை நினைவுகூருவதற்கு ஜே.வி.பிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் இறந்து போன தமது தலைவரை நினைவுகூருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இனங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்கள் பிழையாக நடாத்தப்படக் கூடாது. 

ஜெகன் பெரேரா – தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர்: 

இங்கு கூறப்படும் விவகாரமானது ஜனநாயம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கும் சுயாதீன நீதிச்சேவைக்கும் இடையிலான உறவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. குறித்த ஊடகத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா இந்த ஊடகம் தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படும் ஊடகமா போன்றவை ஆராயப்பட வேண்டும். 

ஒருபுறத்தே ஜனநாயக நாடொன்றில் செயற்படும் நீதிச் சேவையானது ஊடக சுதந்திரம் தொடர்பாகக் கருத்திலெடுக்கும் அதேவேளையில் மறுபுறத்தே அரசியல்வாதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள அவதூறு போன்ற இரு விடயங்களைக் கருத்திலெடுக்கும் போது சட்டத்தின் பிரகாரம் பாரபட்சமற்ற நீதியை வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பொதுவாக, அரசியல் வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஊடகங்களின் கவனத்திற்குட்படுவதென்பது வழமையானதாகும். இவர்கள் ஊடகங்களின் கருத்துக்களை சகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும். சுதந்திரத்திற்கான விலையை இவர்கள் செலுத்துவதற்கு விருப்பங்கொண்டவர்களாக இருக்க வேண்டும். 

நீதிமன்றின் தீர்ப்பானது சாதகமாக இருக்காவிட்டாலும் கூட அவற்றை ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டியது ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும். இந்த நாட்டில் வாழும் ஒரு சாராரின் அவாக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதை நான் நம்புகிறேன். 

பாக்கியசோதி சரவணமுத்து – மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்று இயக்குனர்: 

நாட்டிலுள்ள முதன்மையான ஊடக நிறுவகத்திற்கு எதிராக மங்கள சமரவீர ஏன் வழக்குத் தாக்கல் செய்தார் என்பதற்கான காரணம் எனக்குத் தெரியாது. இதனால் நான் இது தொடர்பில் எனது கருத்துக்களை இங்கு கூறமுடியாது. எனினும், ஊடக சுதந்திரம் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் புகழப்படக் கூடாது என்பது எனது கருத்தாகும். ஆனால் புலிகளைப் புகழ்வதற்கும் இறந்த புலிகளை நினைவுகூருவதற்கும் இடையில் இரு வேறு எண்ணக்கருக்கள் உள்ளன என்பதையும் இவை இரண்டும் தவறாக மொழிபெயர்க்கப்படக் கூடாது என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை நினைவுகூருகின்ற உரிமை எல்லோருக்கும் உண்டு. 

ரவி கருணாநாயக்க – ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்: 

மங்கள சமரவீர, ஊடக நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்குத் தொடுத்ததானது அவரது தனிப்பட்ட விடயமாகும். இது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. இது தேவையற்ற பிரச்சினையை உருவாக்குகின்ற அவசியமற்ற ஒன்றாகும் என்பதே எனது கருத்தாகும். நீதிமன்றில் வழக்கைத் தொடுத்தவர், குறித்த ஊடகத்தின் தலைவரின் நண்பராவார். இந்நிலையில் இந்த விவகாரமானது நீதிமன்றுக்கு வெளியே தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

புலிகள் அமைப்பிலிருந்து இறந்து போனவர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதானது மிகவும் விமர்சனத்திற்குரிய ஒன்றாகும். சிறிலங்கா அரசாங்கமானது முன்னாள் புலி உறுப்பினர்களான பி.பிள்ளையான், கருணா அம்மான் போன்றவர்களைத் தனது நலனுக்காக தன்னுடன் இணைத்திருக்கும் இந்நிலையில், இந்த அரசாங்கமானது புலிகளைப் புகழவேண்டாம், புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என பொதுவாகவும் ஊடகத்திடம் அறிவுறுத்தியுள்ளதானது எந்தவகையில் நியாயமானது? தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் போற்றப்படக் கூடாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். 

நிசாந்த சிறி வர்ணசிங்க – ஜாதிக ஹெலஉறுமயவின் தேசிய இணைப்பாளர்: 

ஊடக சுதந்திரத்தில் மங்கள சமரவீர போன்று வேறெவரும் தலையிடவில்லை. ஊடக நிறுவகம் ஒன்றின் தலைவரை மங்கள சமரவீர நீதிமன்றில் முன்னிறுத்தியதானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். தனக்கெதிராக அல்லது தனது நலன்களுக்கு எதிராக ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைக்கின்ற போது அதனைத் தாங்கிக் கொள்ள இயலாத ஒருவராக மங்கள சமரவீர உள்ளார் என்பது இங்கு தெளிவாகிறது. 

நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பை ஊடகம் ஒன்றில் புகழாராம் சூட்டுவதை எவரும் நியாயப்படுத்த முடியாது. நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக வேலுப்பிள்ளை பிரபாகரனைத் துதி பாடுகின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது அது சார்ந்த அரச சார்பற்ற நிறுவனம் அல்லது ஊடகங்கள் புலிகளை ஆதரித்து கருத்துக்களை அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடும் போது நாட்டில் பயங்கரவாதக் கருத்தை தூண்டுகின்றவர்களை எதிர்த்து அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும். 

சரிதா ஹெரத் - மக்கள் தொடர்பு ஊடகங்கள் மற்றும் தகவற்துறை அமைச்சின் நிரந்தரச் செயலர்: 

இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊடகத்திற்கும் ஊடக சுதந்திரம் பிரயோகிக்கப்படுகிறது. ஊடகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்படும் போது இதனை எதிர்க்கட்சியினர் மிகைப்படுத்துவது வழமையானதாகும். எனினும் தற்போது மங்கள சமரவீர, முன்னணி ஊடகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதன் மூலம் இதில் எதிர்க்கட்சி நேரடியாகத் தொடர்புபட்டுள்ள நிலையில், எவரும் இது தொடர்பில் கேள்வி எழுப்ப முன்வரவில்லை. 

புலிகள் அமைப்புப் போன்று நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக ஊடகங்களோ அல்லது தனிப்பட்டவர்களோ ஏன் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற கேள்வி நிலவுகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் மனித உரிமைகளை மீறிய தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு அங்கீகாரத்தைக் கொடுப்பதற்கு எவரும் முன்வரக்கூடாது.

 

http://www.puthinappalakai.com/view.php?20131202109551

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.