Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் எல்லை மீறி நட்புறவு கொண்டால் ஐ.நா.கூட்டத்தில் சீனாவின் ஆதரவை இழக்கவேண்டி வரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MonksprotestUNreportMay32011.jpg

இலங்கை அர­சாங்கம் இந்­தி­யா­வுடன் எல்லை மீறி நட்­பு­ற­வினை ஏற்­ப­டுத்­திக்­கொண்டால் மார்ச் மாதம் நடை­பெறும் ஐ.நா. கூட்­டத்தில் சீனாவின் ஆத­ரவை இழக்க வேண்டி நேரிடும் எனவே, நண்பன் யார்? எதி­ரியார்? என்­ப­தனை அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்­டு­மென எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் இலங்­கைக்கு எதி­ராக அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்­கா­கவே ஐ.நா.வின் அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யாளர் சாலோகா பெயானி இங்கு வந்­துள்ளார் என்றும் அவ்­வி­யக்கம் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச்­செ­ய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்,

யுத்தக் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரிக்கும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் இலங்­கையை நிறுத்­து­வ­தற்­கான சர்­வ­தேச சதி­கா­ரர்­களின் நட­வ­டிக்­கைகள் தற்­போது உச்­ச­நி­லையைக் கண்­டுள்­ளது. அதற்­காக ஆரம்­பத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை இங்கு வந்து மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­களை சுமத்­தி­ய­தோடு, ஐ.நா. கூட்­டத்தில் இலங்­கைக்கு எதி­ராக அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இதன் பின்னர் பிரிட்டிஷ் பிர­தமர் இங்கு வந்து சர்­வ­தேச விசா­ரணை தேவை­யென்றார். சனல் 4 ஊட­க­வி­ய­லா­ளர்­களின் வரு­கையும் இலங்­கைக்கு எதி­ரான நான்­கா­வது படத்தை இயக்­கு­வ­தற்கே ஆகும். தற்­போது ஐ.நா.வின் அக­தி­க­ளுக்­கான விசேட அறிக்­கை­யா­ளரின் வரு­கையும் அவர் ஐ.நா.வில் சமர்ப்­பிக்கும் அறிக்­கையும் எமக்கு எதி­ரா­ன­தா­கவே இருக்கும்.

இந்­தியப் பிர­தமர் மன்­மோ­கன்சிங் இங்கு வந்­தாலும் அவரும் எதி­ரான கருத்­து­க­ளையே வெளி­யி­டுவார். உள்­ளூரில் இந்த சர்­வ­தேச சதி­கா­ரர்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உத்­வே­கத்தைக் கொடுக்கும் விதத்தில் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான கருத்­து­களை பாரா­ளு­மன்­றத்­துக்­குள்ளும் அதற்கு வெளி­யேயும் கூறி வரு­கி­றது.

அமெ­ரிக்­காவும் சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் எனக் கூறி­யுள்­ளது. எதிர்­வரும் மார்ச் மாதத்தில் நடை­பெ­ற­வுள்ள ஐ.நா. கூட்­டத்­தொ­டரில் மீண்டும் எமக்­கெ­தி­ராக பிரே­ரணை முன்­வைக்­கப்­பட்டு சர்­வ­தேச யுத்­தக்­குற்ற விசா­ரணை தேவை என்­பது நிறை­வேற்­றப்­படும். அதற்­கான சர்­வ­தேச சதி­கா­ரர்­களின் முயற்­சிகள் தற்­போது உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ளன.

ஐ.நா. கூட்­டத்தில் எமக்­கெ­தி­ரான சர்­வ­தேச விசா­ரணை நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் அது ஐ.நா. பாது­காப்பு சபையில் நிறை­வேற்­றப்­படும். அங்கு இது நிறை­வேற்­றிய பின்னர் இலங்கை அர­சாங்கம் எதிர்த்­தாலும் வேறொரு நாட்டில் சர்­வ­தேச விசா­ர­ணைகள் நடத்­தப்­படும்.

அதன் பின்னர் ஆபத்­தான நெருக்­க­டி­களை சந்­திக்க வேண்டி வரும். எனவே அர­சாங்கம் இதற்கு முகங்­கொ­டுக்கத் தயா­ராக வேண்டும். ஐ.நா. பாது­காப்புச் சபையில் எமக்­கெ­தி­ரான பிரே­ரணை கொண்டு வரும்­போது சீனாவும் ரஷ்யாவும் அதனை எதிர்க்கும். ஆனால் அரசாங்கம் எல்லை மீறி, இந்தியாவுடன் நட்புறவுகளை வளர்த்துக்கொண்டால் சீனா எம்மை கைவிடும் வாய்ப்பு உள்ளது.

எனவே, அரசாங்கம் நண்பன் யார்? எதிரி யாரென்பதை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டுமென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10395:2013-12-06-10-28-39&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்ச்சி நிரலை எப்படி எடுத்து விடுகிறார்...நீங்கள் விரும்பியோ அல்லது விரும்பா விட்டாலும் இதுதான் உங்கள் road map

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் தெரிந்து வைத்திருப்பதால்தான் நாலாயிரம் பேருக்கு அவசரமாக இராஜ‌தந்திர அந்தஸ்தை வழங்கிவிட்டார்கள்..! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.