Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகம் -02 -முற்போக்கு முகம் கொண்டஈழத்து தமிழ் இலக்கியம்-கிழக்கு ஈழம் திருகோணமலை (திருமலை கா.சிவபாலன்)

Featured Replies

polyelephant.jpgதிருகோணமலை மாவட்டம் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்த அளவில் மிக முற்போக்கான ஒருமாவட்டமாக திகழ்ந்திருக்கின்றது எனலாம். இதற்கு எண்பிற்பாக ஈழத்தின் முதல் நாவல் எனச் சில்லையூர் செல்வராஜன் போன்ற சிலராலும், சித்திலெப்பை அவர்களின்

’அசென்பேயிண்ட சரித்திரம்’ நாவலுக்கு அடுத்த இரண்டாவது நாவலென கமாலுதீன் போன்ற வேறு சிலராலும் கூறப்படும் ’ஊசோன்பாலாந்தைகதை’ எனும் நாவல்(1891) திருகோணமலை பெரிய கடையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி அவர்கள் எழுதியதும், தமிழ் கூறும் நல்லுலகின் முதலாவது வரலாற்று நாவல் எனக் கூறப்படும்  'மோகனாங்கி 'யைப்(1895) படைத்த தி.த.சரவணமுத்துப் பிள்ளையைப்(1867-1922) பெற்றெடுத்த மண்ணும், புதுக்கவிதை எனும் வடிவம் தமிழில் சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கிய காலங்களில் நா.பிச்சைமூர்த்தி, எஸ்.வைத்தீஸ்வரன், வேணுகோபாலன் ஆகியோருடனெ எழுதத் தொடங்கியவரும், 1960 ஜனவரி 'எழுத்து' இதழில் 'நான்' எனும் கவிதை மூலம் அறிமுகம் ஆனவரும், புதுக்கவிதை பிதாமகர்களுல் ஒருவருமான தர் மு. சிவராம்(பிரேமிள்)-1939-1997, வாழ்ந்ததும், இந்த மண்ணில் தான். இவர் 1967 லேயே தமிழில் சிறுகதையின் திருமூலர் என அறியப்பட்ட மெளனியின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு நீண்டதொரு முன்னுரையை எழுதியிருந்தார்.

அடுத்த கட்டமாக நாம் முற்போக்கு முகம்கொண்ட இலக்கியம் எந்தவிதத்தில் திருமலையில் கால்பதித்தது என்பதைப் பார்ப்போம்.உண்மையில் முற்போக்கு, நற்போக்குவாதங்கள் 1950 வாக்கில் தொடங்க, 1892 இலேயே நவீனத்துவ சிந்தனைகளில் ஒன்றான பெண்ணுருமை பற்றிய தி.த.சரவணமுத்துப்பிள்ளையின் 'தத்தைவிடுதூது' எனும் கவிதை நூலும், ஈழத்தில் தமிழில் முதல் பெண்ணுருமைப் பத்திரிகையான 'மாதர்மதிமாலிகை' தையல் நாயகி என்பவரை ஆசிரியராகக் கொண்டு திருகோணமலையிலிருந்து வெளியானது.

திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் 1919ஆம் ஆண்டுஸ்தாபிக்கப்பட்டு, 1930ஆம் ஆண்டுவரை செயற்பட்டதாக ஊகிக்க முடிகிறது. இதுவே ஈழத்தில் பெண்விடுதலைக்காகவும், விழிப்புண்ர்ச்சிக்காகவும் தோன்றிய முதற்சங்கம் என்பதும் குறிப்பிடற்தக்கது.
திருகோணமலையின் புகழ்பூத்த தமிழ் அறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை(1863-1922) அவர்களின் இளவலான சரவணமுத்துப்பிள்ளையின் சீர்திருத்த ஈடுபாட்டிற்கு அழியாத சின்னமாகவிளங்குவதே 'தத்தைவிடு தூது' எனலாம். 1892 இல்சென்னையில் பதிப்பித்து வெளியிடப்பட்ட இந் நூலினையிட்டு மிகச் சிறந்த திறணாய்வாளரான பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள், தமது 'ஈழத்து இலக்கிய முன்னோடிகள்' எனும் நூலில் எழுதியிருப்பதை கீழே தருகிறோம்.

'….சமுதாயத்தில் நடப்பியலில் காணும் சாதாரண நிகழ்சியொன்றினைக் கவிப்பொருளாகக் கொண்டு, மரபு வழிப் பிரபந்தங்களினின்றும் வேறுபட்ட ஒரு நூலை இயற்றியிருக்கிறார் ஆசிரியர். பெற்றோரால் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் காதலியை விபரிக்கும் போக்கிலே பொதுவாக வேதமது காலத்துச் சமுதாயத்திலே காணப்பட்ட பெண்களின் அவலநிலையைத் துல்லியமாக பாடுகிறார். சம்பிரதாயமான திருமண முறையின் பாதகத் தன்மையினை உணர்சிச் செறிவுடன் பாடுகிறார். மரபுவழிச் செய்யுள்களில் பொதுவாகக் காணப்படாத வேகம் இதிலே வெளிப்படையாகவே தென்படுகிறது '

கூட்டிற் பசுங்கிளிபோற்
கோதையரை எப்பொழுதும்
வீட்டிலடைத்து வைக்கும்
விரகிலருக்கு யாதுரைப்போம்
பூட்டித் திறந்தெடுக்கும்
பொருளாகக் கருதினரோ
”கேட்டார்  நகைப்பதுவும்
கேட்டிலரோ பைங்கிளியே
கிஞ்சுவாய்ப் பைந்தொடிபாற்
கிளித்தாய் பசுங்கிளியே”

”கண்ணைமறைத் தேகொடு போய்க்
காட்டில் விடும் புஞையைப்போல்
பெண்ணை  மனையடைத்துப்
பின்னொருவர் கைக்கொடுப்பர்
கண்ணால்முன் கண்டுமிலர்
காதலர் சொற் கேட்டுமிலர்
எண்ணாது மெண்ணி
இருந்தயர்வார் மங்கையர்கள்
இக்கொடுமைக் கியாது
செய்வம் இசையாய் பசுங்கிளியே”

“தன்மனைக்கோர் பசுவேண்டின்
தாம்பலகாற் பார்த்திருந்தும்
பின்னும் துணிவிலராய்ப்
பேதுறுதல் மாந்தர் குணம்
என்னை மணவினையேல்
இமைப் பொழுதிலேமுடிப்பார்
சின்னப் பதுமை கொடு
சிறார் செய்மணம் போலுமரோ”
தெரிவையவட்கிம்மாற்றஞ்
சீர்கிளியே கூறுதியால் ’

பாடல்களைப் பதம் பார்ப்பதற்காக இங்கு தரப்பட்ட மூன்று செய்யுள்கள் நூலின் நவீன நோக்கையும், போக்கையும் நன்கு உணர்த்துவனவாய் உள்ளன. நாவலாசிரியர் வேதநாயகம்பிள்ளை காலத்தில் இருந்து உறையூர் அமிர்தம்பிள்ளை [1845-1899], நரசிம்மலு நாயுடு முதலியோர் பெண்கள் முன்னேற்றம்  பற்றி எழுதிவந்தனர். அவற்றில் பெரும்பாலானவை நீதிபோதிக்கும் முறையில் அமைந்தன.

அத்தகைய சூழ்நிலையிலே பெண்விடுதலைப் பொருளை கவித்துவ ஆற்றலுடன் வினோத பெண் பிரபந்தமாக இயற்றிய சரவணமுத்துப் பிள்ளை நினைவு கூரவேண்டியவரே. கூர்ந்து ஆராயும் போது சுப்பிரமணிய பாரதியார் 'தத்தைவிடுதூது 'பிரபந்தத்தை படித்திருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது. 'சுயசரிதை', 'புதுமைப்பெண் ','பெண்விடுதலை ' முதலிய பாடல்களிலே பாரதி கூறியிருப்பனவற்றையும், கூறியிருக்கும் முறைமையையும் உற்று நோக்கினால் அவனுக்கு முற்படப்பாடிய கவிஞருள் சரவணமுத்துப் பிள்ளையே சொல்லிலும், பொருளிலும் பாரதிக்கு அணியராய்க் காணப்படுகிறார். சென்னையிலிருந்து ஸ்ரீநிலையம் அச்சியந்திரசாலையில் 1892 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட ’தத்தைவிடுதூதில்’ வரும் சில சொற்றொடர்களின் எதிரொலியைப் பாரதிவாக்கிற் கேட்கலாம்.எனினும் இதுதனியே ஆராய வேண்டியது. தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்த கட்டுரைகளையும், நூல்களையும் ஓய்விலா ஊக்க உணர்ச்சியுடன் வாசித்த பாரதி இந்நூலைப் படித்திருப்பார் என்று துணிதல் தவறாகாது ’.

(கைலாசபதி, கலாநிதி.கா, ’ஈழத்து இலக்கியமுன்னோடிகள் , 2001,  ' தமிழ்நாடும் ஈழத்துச் சான்றோரும் ',தம்பிலுவில் வித்துவான் க.செபரத்தினம்-2005, மணிமேகலை பிரசுரத்தில் குறிப்பிட்டவாறு) ஈழம் கிழக்கு பல்கலைக்கழக தமிழ்பேராசிரியர் செ.யோகராசா அவர்கள் அண்மையில் வெளியிட்ட கருத்தின்படி, பாரதியார் சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் சென்னையில் தமிழ் ஆசானாகத் திகழ்ந்த அதேகல்லூரிக்கு விஜயம் செய்திருக்கிறார் எனவே நிச்சயமாக அவர் பிள்ளையவர்களின் படைப்புக்கள் பற்றி அறிந்திருப்பார் எனக் கூறியுள்ளதையும் மனம் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

மேற்குநாடுகளில் 1879 ஆம் ஆண்டில் பெண்ணுருமை வேகம் பெறக்காரணமாயிருந்த ஹென்றிக் இப்சனின் 'பொம்மைவீடு' வெளிவந்தது. இந்நூல் அண்மையில் நோர்வேயில் 'பெண்பாவை' என்ற பெயரில் திருகோணமலை கா.சிவபாலன் அவர்களால் மீண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.

சரவணமுத்துப்பிள்ளை அவர்களைப் போலவே திருகோணமலையைப் பொறுத்த அளவில் நீண்டகாலத்துக்கு முன்னே மரபுவழிக் கவிதைகளை எழுதிய கவிஞர்களே முற்போக்கான கருத்துக்களை கூறி வந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் கழகப் புலவர் பெ.போ.சிவசேகரனார், கவிஞர் தாமரைத் தீவான்(சோ.இராஜேந்திரன்), திருக்கோணமலைக் கவிராயர் (தா.சி.வில்வராஜன்) எனத் தொடர்ந்து பின்னர் வ.அ,இராசரத்தினம், அருள்சுப்பிரமணியம், ஈழவாணன்,சி.சிவசேகரம்,திருமலைநவம், பாலசுகுமார், சித்திராநாகநாதன் என்று தொடர்ந்து இன்றைய தலைமுறைதிருமலை, கிண்ணியா, மூதூர் கவிஞர்கள் வரை நீண்டதொரு பரம்பரை முற்போக்கான கருத்துக்களை தங்கள் கவிதை,சிறுகதை,நாவல்கள்மூலம் கூறிவந்திருக்கின்றனர்.  இனி இவர்களின் தனிப்பட்ட சில படைப்புக்களைப் பார்ப்போம்.

siva%202.PNG(தொடரும்…..)
-திருமலைகா.சிவபாலன்

 

http://tamilnorsk.com/index.php/business/item/315-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-02-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D

 

 

Edited by நியானி

இணைப்புக்கு மிக்க நன்றி சிறிலிங்கம்.  ஈழத்து இலக்கிய முன்னோடிகளில் இன்னாசித்தம்பியும் பிரேமிளும் தனி முத்திரை பதித்தவர்கள் . உங்கள் மூலம் பல அறிய தகவல்களை அறிய ஆவலாக இருக்கின்றேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.