Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது !

Featured Replies

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது !

தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்துவிட்டதாக சிங்களம் முரசுகொட்டிய வேளை, சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரே அன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.

தனது முன்றாண்டு முதற்தவணைக்கால அரசவையினை நிறைவு செய்,து இரண்டாம் தவணை காலத்திற்கான முதலாம் அரசவையினை அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நா.தமிழீழ அரசாங்கம் கூட்டியிருந்தது.

டிசெம்பர் 6-7-8ம் நாட்களில் கூடியிருந்த இந்த அமர்வில் ஒரு தொகுதி உறுப்பினர்கள் சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் இருந்து தொலைத்  தொடர்பு தொழிநுட்ப வாயிலாக கலந்து கொண்டிருந்தனர்.

அரசவை அமர்வு, செயலமர்வு என இடம்பெற்றிருந்த இந்நாட்களில் விவாதங்கள் ,கருத்துப்பட்டறைகள், தீர்மானங்கள், சிறப்புரைகள் என பல்வேறு விடயங்கள் நிகழ்விற்கு வலுவூட்டி இடம்பெற்றிருந்தன.

அங்குராப்பண நிகழ்வு :

அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் தமிழீழ விடுதலைக்கான தங்களது தோழமை உரையினை வழங்கியிருந்தனர்.

தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் ஈழவிடுதலைக்கான தமிழக மக்களது தோழமைச்செய்தியினை காவிவந்திருந்தனர்.

உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அவர்களும் சிறப்புரையினை வழங்கியிருந்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைக்குழுப் பிரதிநிதிகள் மற்றும் மேற்சபை உறுப்பினர்களது உரைகளும் இடம்பெற்றிருந்தன.

Mr. Robert Evans (Former Member of European Parliament –   Senator TGTE),Mr. Johari Abdul (Member of Malaysian Parliament, Sungai Patani, Malaysia, Chair of "Malaysian Parliament Caucus Displaced Tamils in Sri Lanka"),Mr. Troels Ravn (Member of the Denmark Parliament -The Social Democratic Party) , Mr. Vijeyan Moorgan ( from Mauritius),  Mr. Jeffrey Robertson QC ஆகிய அனைத்துலப் பிரமுகர்களது கருத்துரைகள் ஈழவிடுதலைக்கான ஆதரவுத்தளத்திற்கு உற்சாகத்தினை தந்திருந்தது.

அரசவை அமர்வு :

கலாநிதி தவேந்திரா அம்பலவாணர் அவர்களை அவைத் தலைவராகவும், தில்லை நடராஜா அவர்களை பிரதி  அவைத்தலைவராகவும், இரகசிய வாக்கெடுப்பின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்திருந்தனர்.

விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதமராக  மக்கள் பிரதிநிதிகள் ஏகமனதாக தேர்வு செய்திருந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் தங்களது அறிமுக கருத்துரைகளை வழங்கியிருந்ததோடு, அரசவை விவாதங்களிலும் பங்கெடுத்து அரசவை பண்புக்கும் மரபுக்கும் வலுவூட்டியிருந்தனர்.

பொதுநலவாயத்தில் இருந்து சிறிலங்காவினை இடைநிறுத்தக் கோரும் தீர்மானம் மற்றும் தென் ஆப்ரிக்காவினால முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நிராகரிக்கும் தீர்மானம் உட்பட தீர்மானங்கள் பலவும், அரசவை நிறைவு நாள் அமர்வில் நிறைவேற்றப்பட்டிருந்தன.

செயலமர்வு :

பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா ,பேராசிரியன் மணிவண்ணன் ஆகியோர் செயலமர்வு பட்டறையினை நடத்தியிருந்தனர்.

நாடுகடந்த தமிழர் அரசியல் , மனித உரிமைகளும் இனப்படுகொலைக்கான நீதிகோரலும், மாறிவரும் இந்து சமுத்திர பூகோள அரசியலும் எமது வெளியுறவுக் கொள்கையும் உட்பட பல்வேறு தொனிபொருட்களில் இச்செயலமர்வுப்பட்றைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த மூன்று நாள் அமர்விலும் தமிழ் சமூக அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் ,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கெடுத்து ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு வலுவூட்டியிருந்தனர்.

 

நாதம் ஊடகசேவை

http://naathamnews.com/?p=219

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.