Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று பி.ப 3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காணாமல் போன மற்றும் சிறைச்சாலையில் வாடும் உறவுகளதும் விடுதலையையும் நலனையும் வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது.

கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன் வரவேற்புரையையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார செயலாளர் திரு.எஸ்.இளங்கோ தலைமை உரையினையும் ஆற்றினார்.

தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் பிரபல சடத்தரணியுமான திரு கந்தசாமி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் அருட்பணி ராஜ்குமார் , திருமதி பத்மினி சிதம்பரநாதன், கிராமிய உழைப்பாளர் சங்கம் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு மன்றத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.இன்பம், வல்வெட்டித்துறை நகர சபை உபதவிசாளர் திரு சதீஸ் ஆகியோரும் ஆற்றினர்.

நவநீதம்பிள்ளை அம்மையாருக்கான மனு வாசிக்கப்பட்டதை தொடர்ந்து சக்தி அவர்களது நன்றி உரையுடன் ஒன்றுகூடல் நிறைவு பெற்றது.

---------------------

மனு விபரம் :

நவநீதம்பிள்ளை அம்மையார் 

ஆணையாளர் 

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு 

10-12-2013 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் உலக மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தினத்தில், இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழர் தாயகப் பகுதியில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டமைப்புசார் இன அழிப்புத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.

2012, 2013ம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் சிறீலங்கா தொடர்பில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும், மனித உரிமை மீறல்களும் குறைந்துவிடவில்லை மாறாக முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துவருகின்றன. இத்தகைய மனித உரிமைகள் மீறல்களினை வெறுமனே தற்போதைய ஆட்சியாளர்களின் தவறாகவோ ஆட்சிமாற்றம் ஒன்றினூடாவோ இவற்றினைத் திருத்தி விடலாமென நாம் கருதவில்லை. இத்தகைய மனித உரிமைகள் மீறல்களானவை காலாகாலமாக மாறிமாறி இலங்கைத்தீவை ஆட்சி செய்துவரும் ஆட்சியாளர்களின் தமிழின ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாகவே நாம் பார்க்கின்றோம்.

தமிழ் மக்களின் தாயக பூமியானது கீழே விபரிக்கப்படும் முக்கியமான மனித உரிமைகள் மீறல்கள் உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களிற்கும் ஆட்பட்டிருக்கின்றது.

1. தமிழ் மக்களை அவர்களின் சொந்த தாயக பூமியில் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக்கும் நோக்கில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்.

2. தமிழ் மக்களின் தனிப்பட்ட சொந்தக் காணிகள் அரசால் பறிமுதல் செய்யப்படுதல்.

3. இராணுவ ஆக்கிரமிப்பு

4. காலாசார அடையாளங்களை மாற்றும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் கட்டாய சிங்கள பௌத்த மயமாக்கல்.

5. தமிழ் மக்களின் சுதேசிய பொருளாதாரத்தை திட்டமிட்டு அழித்தல்.

6. சட்டவாட்சியின்மை மற்றும் தண்டனை விலக்கு 

2013-02-13 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையானது மேற்கூறப்பட்ட விடயங்களைப் பெருமளவில் உறுதிப்படுத்துகின்றது.

மேற்கூறப்பட்ட விடயங்கள் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் இன்மையினாலே நடைபெறுகின்றது எனப்பார்க்கப்படக்கூடாது மாறாக தமிழ் மக்களின் அடையாளங்களை அழித்து அவர்கள் ஓர் தனித்துவமான தேசமாக இருப்பதனை இல்லாமல் செய்யும் நோக்கிலான திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் என்றே நோக்கப்படல் வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம். இந்நிலையில் வரலாற்று ரீதியாகத் தோற்றுப்போன உள்ளுர் பொறிமுறைபற்றி அழுத்துதல் பயனற்றது. இத்தகைய பின்னணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது..

1. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் பொறுப்புக்கூறல் தொடர்பான அறிக்கை.

2. அண்மையில் வெளிக்கசிந்த ஐக்கிய நாடுகளின் பெற்றி என்பவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை.

3. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22வது அமர்வு தொடர்பான அறிக்கை, குறிப்பாக சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணைக்கான அழைப்பு விடுத்துள்ளமை.

இவ்விடயங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.

இறுதி யுத்தத்தின்போது நடந்தவை தொடர்பில் கூறப்படும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் தம்முடைய பாதுகாப்பதற்கான கடமை என்ற கோட்பாட்டின் கீழான தனது கடமையான தமிழ்த் தேசம் சார்பாகத் தலையிடுவதனைத் தவிர்த்ததன் மூலம் செய்யத்தவறிவிட்டதை சுட்டிக்காட்டுகின்றோம்.

பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல் என்னும் பெயரில் தமிழ்த்தேசம் மீதான இன(ப்படுகொலை) வழிப்புப் போர் அரங்கேறியது. எது எவ்வாறாயினும் யுத்தம் முடிவடைந்து நான்கரை வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும் தமிழ்த் தேசமானது ஓர் கட்டமைப்புசார் இனவழிப்பை தொடர்ந்தும் எதிர்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது

• காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல்.

• சிறையிலுள்ள அரசியல் கைதிகளை உடன்விடுதலை செய்தல்.

• வலிகாமம் வடக்கு, கேப்பாபிலவு, சம்பூர் உள்ளிட்ட வடக்கு கிழக்கு தாயகப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அவர்களது சொந்த இடங்களில் உடனடியாக மீளக்குடியமரச் செய்தல்.

• இனப்படுகொலை உட்பட சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் சுயாதீனமானதும் நம்பகத்தன்மை கொண்டதுமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றினை நடாத்துதல்.

• அழிக்கப்பட்டுவரும் தமிழ்த் தேசத்தைப் காப்பாற்றுவதற்காக பாதுகாப்பதற்கான கடமை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் மக்களின் தாயக பூமியான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஓர் இடைக்கால நிர்வாகம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றல் (இத்தகைய இடைக்கால நிர்வாகமானது கட்டாயமாக தற்போதய இலங்கையின் அரசியல் அமைப்பு கட்டமைப்புக்கு வெளியில் ஏற்படுத்தப்படல் வேண்டும்.)

ஆகியன தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.

இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்த் தேசத்தின் அழிப்பைத்தடுக்க உதவும் என்பதுடன் எதிர்காலத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண உதவும். அத்துடன் காணாமற் போனவர்களது குடும்பங்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் நியாயத்தினைத் பெற்றுக்கொடுப்பதாகவும் அமையும். மேலும் இத்தகைய இடைக்கால நிர்வாக சபையானது பொறுப்புக்கூறல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதற்கு மட்டுமல்லாது இருக்கும் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு உதவும் என நாம் கருதுகின்றோம். 

https://www.facebook.com/tamilnationalpeoplesfront

செ.கஜேந்திரன் 

பொதுச் செயலாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

வி.மணிவண்ணன் 

தேசிய அமைப்பாளர்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

1465307_243026665860351_1363235720_n.jpg
1501844_243089225854095_587475635_n.jpg
1461461_243026662527018_479153689_n.jpg
1462894_242861999210151_1169483648_n.jpg
1456511_242861972543487_287354377_n.jpg
1472969_243026762527008_1774320578_n.jpg
544088_243026672527017_1974967578_n.jpg
1504111_242861909210160_1424296905_n.jpg
1454556_243089275854090_1783927950_n.jpg
 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.