Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள இராணுவத்தின் ஏற்பாட்டில் வன்னியில் விபச்சார நிலையங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

ஒரு இனத்தினைப் பூண்டோடு அழிக்க வேண்டுமாயின் அந்த இனத்தினை உருவாக்கிப் பெருக்கக்கூடிய பெண்களைச் சீரழித்து இனத்தின் கலாசாரக் கட்டமைப்புக்களையும் முற்றாக அழக்க இன்று சிங்களம், தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது.

போரால் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட தமிழ் மக்களின் கலாசாரக் கட்டமைப்புக்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து சிங்களம் தாயகத்தில் பல்வேறு கங்கரியங்களை ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக வன்னிப் பகுதியில் சிங்களக் காடையர்கள் போரால் கணவனை இழந்த தமிழ்ப் பெண்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்போராளிகளையும் இலக்குவைத்து நவின வடிவிலான இனச்சுத்திகரிப்பினைச் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

சிங்களத்தின் நயவஞ்சக வலையில் எமது தமிழ் உறவுகள் வறுமையின் கோரப்பிடியினால் சிக்கிக்கொண்டுள்ளனர். இதனால் வன்னியில் சில கிராங்களில் பகிரங்கமாகவே பாலியல் தொழில் நடைபெற்றுவருகின்ற அதிர்ச்சியூட்டுகின்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

சிங்கள இராணுவம் களமமைத்துக் கொடுத்துள்ள இப்பொண்கள் மீது குடாநாடு உள்ளிட்ட தாயகப்பகுதியில் வசிக்கின்ற பல தமிழ் ஆசாமிகளின் பார்வையும் திரும்பியுள்ளது. இதேபோல் தென்னிலங்கையிலும் சர்வதேச நாடுகளிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாக வன்னியிலிருந்து அழைத்துச் செல்லப்படுகின்ற பலபெண்களையும் சிங்களம் விபச்சாரத்தில் ஈடுபடுத்திவருகின்றது.

இதன் வெளிப்பாடே அன்மையில்; தெனிலங்கையில் பெண் போராளி ஒருவர் தீக்காயங்களுடன் சடலமாக மீடகப்பட்ட சம்பவமாகும். இதுபோன்ற பல தற்கொலைச் சம்பவங்களும் தற்கொலை முயற்சிகளும் வன்னியில் தினமும் இடம்பெற்றுவருகின்றன. வறுமையின் பிடியில் சிக்குண்டுள்ள தமிழ் பெண்களை சிங்களம் இனங்கண்டு வேட்டையாடிவருகின்றது.

இதனால் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் பாதிப்படைவதுடன் தமிழ்க் கலாசாரக் கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்டுகின்றன.  இலங்கைத்தீவில் தமிழ் மக்களில் கலாசாரக் கட்டமைப்புக்கள் சிதைக்கப்பட்டு தமிழ் இனச்சுத்திகரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.

இதனால் தாயகத் தமிழ் மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளதுடன் தமிழ் பெண்களைச் சீரழித்து இனஅழிப்பினை தாயகத்தில் சிங்களம் செய்யவருகின்றது.

எனவே எமது இனத்தினைப் பாதுகாத்து தமிழ்ப் பொண்களின் எதிர்காலத்தினை மேம்படுத்துவதற்கு புலம்யெர்ந்து வாழுகின்ற எமது உறவுகள் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்யமுன்வர வேண்டும்.

இதேபோல் தமிழ் இழைஞர்கள் தத்தமது கிராமங்களில் இத்தகைய சம்பவங்களைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். தவறின் எமது இனத்தினைச் சிங்களம் வேட்டையாடிக் கொன்றுகுவித்து இனக்கலப்பினைச் செய்து அழித்துவிடும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் .

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.