Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில அபகரிப்பு தொடர்பான சாட்சியங்கள் வேண்டும்! பிரித்தானியத் தமிழர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

வட-கிழக்கில் உள்ள தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை சுதந்திரம் பெற்ற நாள்முதலாகவே, இலங்கையரசு தமிழ் மக்களிடமிருந்து பறிமுதல் செய்தவண்ணம் இருக்கிறது. குறிப்பாக, போருக்கு பின்னைய காலகட்டத்தில் நில-அபகரிப்பு பன்மடங்கு பெருகி, தமிழ் மக்களது அரசியல், சமூக-பொருளாதார நலன்களுக்கு பெரும் பாதிப்புக்களை விளைவித்துக் கொண்டிருக்கிறது . இதனால் தமிழ் மக்கள் இன்று வரை பாரிய விளைவுகளை சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் கிழக்கு மகாணத்தில் ஆரம்பமான இந்த நில அபகரிப்பானது அதி உயர் பாதுகாப்பு வலையம், சிறப்பு பொருளாதார வலையம், பௌத்த மத வழிபாட்டு ஸ்தலங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், அரசுதவியுடன் நடக்கும் குடியேற்றங்கள் என பல்வேறு பரிணாமங்களில் இற்றை வரை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது;

வாழ்வாதாராமான் நிலம் இன்றி ஒரு இனம் தன்னைத் தக்க வைத்த்துக் கொள்ள முடியாது. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அங்குள்ள தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உட்படுத்தப்பட்டு, முடிவில் இலங்கைத் தீவினில் தமிழினம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுவிடும். நம்மினம் தற்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த பேரபாயத்தை தமிழ் மக்கள் ஒன்றினைந்து உடனடியாக எதிர் கொண்டு போராடவேண்டும்.

தமிழ் பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்படுதலை உடனே தடுத்து நிறுத்த, அதற்கெதிரான சாட்சியங்களை சேகரிப்பதில் பிரித்தானியத் தமிழர் பேரவை முழு வீச்சுடன் களத்தினில் இறங்கியுள்ளது,

தமிழ் மக்கள் அனைவரையும் தம்மோடு ஒருங்கிணைந்து நில அபகரிப்பு பற்றிய தகுந்த ஆதாரங்களை சேகரிப்பதற்கு கை கொடுத்து உதவுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர் பூர்வீகக் கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊர்ச் சங்கங்கள் இதில் மிகுந்த கவனமெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இது சம்பந்தமாக மக்களிடம் உள்ள படங்கள், ஒளிப்பதிவுகள், சாட்சி அறிக்கைகள், ஆகியவற்றை கீழ் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். மேலதிக தொடர்புகளுக்கு;

மின்னஞ்சல்:: admin@tamilsforum.com

தொலைபேசி: South East London, 07517461685 

Northeast London , 07940114059, Northwest London, 07814484938

Southwest London ,07907712060, Outer London,07533381189 ,07927023912

நன்றி

பிரித்தானியத் தமிழர் பேரவை

 

http://www.sankathi24.com/news/37252/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.