Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ் மொழி புறக்கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா காட்சிப்படுத்தல்களில் தமிழ் மொழிக்கு இடம்ளிக்கப்பட்டிருக்காமை தொடர்பில் பட்டம்பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச ரீதியாகப் புகழ்பெற்றுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறித்து புலம்பெயர் உறவுகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

univer2.jpg

யாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகியது. இரு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பட்டமளிப்பு விழா இன்றும் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்புக்காக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இந்த வளைவில் யாழ்.பல்கலைக்கழகத்தின் இலட்சினையிலுள்ள நந்தியின் படம் இரண்டு பக்கங்களிலும் அச்சிடப்பட்டிருந்ததுடன் நந்திச் சின்னமும் பொறிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதில் எந்த இடத்திலும் தமிழ் மொழி இடம்பெற்றிருக்கவில்லை. முற்றுமுழுதாக ஆங்கில மொழியிலேயே பதாகை அச்சிடப்பட்டிருந்தது. மேலும், பட்டமளிப்பு இடம்பெற்ற பிரதான மண்டபமாகிய கைலாசபதி கலையரங்கில் கட்டப்பட்டிருந்த பதாகையிலும் தனியே ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டிருந்தது.

univer4.jpg

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்தச் செயற்பாடு குறித்து பலரும் கவலை வெளியிட்டனர். கடந்த காலங்களில் தமிழ் மொழிக்கு பெயர் போன யாழ்.பல்கலைக்கழகத்தில் இப்படியான செயற்பாடு இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

univer1.jpg

இதேவேளை, பொங்குதமிழ் என்ற பெரும் மக்கள் எழுச்சி மூலமாக உலக நாடுகளில் தமிழ் மக்கள் தொடர்பான பெரு மதிப்பை ஏற்படுத்திய யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை கண்டனத்திற்குரியது என்றும் தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் முகப்புத்தகத்திலும் இது தொடர்பாக கடும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண சபையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று சங்கதி24 சுட்டிக்காட்டியிருந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.