Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் சமர்

Featured Replies

சம்பூரை நோக்கி படையினர் தாக்குதல்.

சம்ப+ரிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகைளை நோக்கி இன்று காலை முதல் ஸ்ரீலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.last update 10:01

பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறி எறிகணைகள் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நோக்கி ஏவப்படுவதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குலை மேற் கொண்டிருப்பதாக தெரியவருகிறது

http://www.athirvu.com/index.php?option=co...id=409&Itemid=1

பட்ட அடி காணாது போல சும்மா போற பாம்பை பிடித்து கோவணத்துக்குள் விடப்போகிறார் மகிந்த

ஓ...இவங்களுக்கு

என்ன வேலை...

அப்பாவி சனத்தை

சாகடிச்சுப் போட்டு

புலி எண்டு சொல்லுவினம்...

புலுகள்..அலி...

ரம்புக்கல்ல...

புளுக...பிபிசி...அதை..

ஆகா..ஓகோன்னு..

செய்தி..போடும்...

இதுக்கெல்லாம்

என்று

முடிவு வருமோ....???

''அவர் தான் சொல்லனும்...''

சம்பூர் சமரில் 20 பொதுமக்கள் பலி- 3 போராளிகள் வீரச்சாவு: பதில் நடவடிக்கையில் 11 இராணுவத்தினர் பலி

[திங்கட்கிழமை, 28 ஓகஸ்ட் 2006, 15:03 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் முப்படைகளுடன் மும்முனையில் பாரிய அளவிலான வலிந்த இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா இராணுவத்தினர் இன்று தொடங்கியுள்ளனர். இதில் 20 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். புலிகளின் பதில் நடவடிக்கையில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 79 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆட்டிலெறி, பீரங்கிக்குண்டுகள், பல்குழல் ரொக்கட் குண்டுகள், மோட்டர் எறிகணைகளை செறிவாக வீசிக்கொண்டு கிபீர்-மிக் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவாறு இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நகர்வு முயற்சியினை சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொள்ளத் தொடங்கினர்.

டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சிறிலங்கா இராணுவத்தினர் பச்சனூர்-தோப்பூர் ஆகிய இருமுனைகளில் இந்நகர்வைத் தொடங்கினர். தொடர்ந்து தோப்பூர் மற்றும் கிளத்திமுனையூடாக விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளுக்கு நகர முயன்றபோது போது சிறிலங்கா இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தீவிர பதில் தாக்குதலை நடத்தத் தொடங்கினர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ஆதரவாக இலக்கந்தையிலிருந்து சிறிலங்கா கடற்படையினரும் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் இன்றைய வலிந்த தாக்குதல் நடவடிக்கையையடுத்து மூதூர் கிழக்கின் பள்ளிக்குடியிருப்பு- கணேசபுரம்-பாட்டாளிபுரம்-சேனையூர் உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர். ஆனால் அந்த மக்கள் நல்லூரை சென்றடைந்தபோது நல்லூர் பகுதியில் செறிவான ஆட்டிலெறி, ரொக்கட் குண்டுகள் மற்றும் கிபீர் விமானக் குண்டுத் தாக்குதல்கள் இராணுவத்தினரால் வீசப்பட்டன. மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து செல்ல முடியாதவாறு இலங்கைத்துறை முகத்துவாரம் பாலம் மீது சிறிலங்கா விமானப் படையின் கிபீர் குண்டுத்தாக்குதல் நடத்தி பாலத்தை கடுமையாக சேதப்படுத்தினர். இதையடுத்து அங்கிருந்து மக்கள் மீளவும் பாட்டாளிபுரத்துக்குத் திரும்பினர். பாட்டாளிபுரத்துக்கு அந்த மக்கள் சென்றபோது அக்கிராமம் மீது தொடர்ச்சியாக ஆட்டிலெறி, ரொக்கட் குண்டுகள் மற்றும் கிபீர் விமானக் குண்டுத் தாக்குதல்கள் பாரிய அளவில் நடத்தப்பட்டன. இதில் 20 பொதுமக்கள் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். 26 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்தும் அங்கு வாழும் மக்கள் அழிவுகளை எதிர்கொண்டுள்ளனர் என்று திருகோனமலை மாவட்ட அரசியல்துறைப் பெ?றுப்பாளர் சி. எழிலன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மகிந்தபுரம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட நகர்வு முயற்சியானது இன்று காலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

மூதூர் 64 ஆம் கட்டை, கட்டைப்பறிச்சான், செல்வநகர்ப் பகுதிகளில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினரும் இராணுவத் தளபாடங்களும் குவிக்கப்பட்டுவருவதாகவும், நோயாளர் காவு வண்டிகள் அப்பகுதிகளுக்குச் சென்று திருகோணமலை நகர்ப்பகுதிக்கு திரும்புவதாக திருமலை நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் இன்றைய வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிரான பதில் நடவடிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 3 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். 5 போராளிகள் காயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல் நடவடிக்கையில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 79 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று திருகோணமலையிலிருந்து ஏ.எஃப்.பி. எனப்படும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 49 பேர் திருகோணமலை மருத்துவமனையிலும் 30 பேர் பொலநறுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"சிறிலங்காவின் ஆக்கிரமிப்பில் உள்ள திருகோணமலை துறைமுகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான விடுதலைப் புலிகளின் சம்பூர் முகாமை கைப்பற்றும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்படுவதாக" சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது சம்பூர் துறைமுகத்தை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருந்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

"திருகோணமலை கடற்படை தளத்தைப் பாதுகாப்பதற்காக மூதூர், கட்டைபறிச்சான், சம்பூர், தோப்பூர் ஆகியவற்றை மீள ஆக்கிரமிக்க வேண்டியதுள்ளது" என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்திருந்த இராணுவ அதிகாரிகள், "சம்பூரில் உள்ள விடுதலைப் புலிகளின் பாரிய ஆட்டிலறித் தளத்தை அழிக்கவே இத்தாக்குதல் நடத்தப்படுகிறது" என்று கூறியுள்ளனர்.

"கடந்த 12 மணிநேரத்துக்கும் மேலாக தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சிறிலங்கா அரசாங்கமானது ஒரு முழு அளவிலான யுத்தத்தை தொடங்க முயற்சிக்கிறது" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகம் மீது இரண்டாம் உலகப் போரில் ஐப்பான் குண்டு போட முயற்சித்து போட முடியாது போய்விட்டது. ஆனால் முதன் முதலாக கடற்படைத்தளத்துக்குள் விடுதலைப் புலிகள்தான் குண்டுகள் வீசியிருக்கின்றனர்.

உலக நாடுகள் எல்லாம் இலங்கை இனப் பிரச்சனைகளில் தலையிட்டுள்ள நிலையில் திருகோணமலை துறைமுகத்தை விடுதலைப் புலிகள் கைப்பற்றிவிட்டால் உலக நாடுகளின் தற்போதைய போக்கு மாறும் என்ற நிலையில்தான் விடுதலைப் புலிகளின் சம்பூர் முகாம் குறித்து மகிந்த ராஜபக்ச கிலி கொண்டு சர்வதேச சமூகத்திடம் பகிரங்க கோரிக்கை விடுத்திருக்கிறார். அந்த அச்சத்துடனேயே தற்போது வலிந்த தாக்குதலையும் மகிந்த ராஜபக்ச நடத்தி வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.eelampage.com/?cn=28482

வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளுக்கும் எனது வீரவணக்கம்.

தமிழீழத்தின் உதயத்தின்; ஆரம்பம். மாவீரரே உயிர்நீத்த உத்தமரே உமக்கெமது வீர வணக்கங்கள்.

ஈழத்திலிருந்து

ஐhனா

சம்பூர் சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: எழிலன்

[செவ்வாய்க்கிழமை, 29 ஓகஸ்ட் 2006, 08:41 ஈழம்] [ம.சேரமான்]

சம்பூரில் சமரில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

கனடா தமிழ்ச்சோலை வானொலிக்கு சி.எழிலன் இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் இதைத் தெரிவித்துள்ளார்.

சி. எழிலன் கூறியுள்ளதாவது:

எங்களது கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பிரதேசம் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டுமாயின் கட்டைப்பறிச்சன் தொடக்கம் மகிந்தபுரம் வரைக்கும் தரைவழியில் பாரிய நகர்வை மேற்கொள்வதோடு பெருந்தொகையான இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் இராணுவத்தினர் தொடங்கியுள்ள வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கையில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

எமது தரப்பில் 10 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர்.

திருகோணமலை கடற்படைத் தளம் மீது எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட மேலதிக விவரங்களை தற்போது வெளியிட இயலாது என்றார் எழிலன்.

http://www.eelampage.com/?cn=28511

சம்பூர் சமரும் சிறிலங்கா இராணுவத்தின் பொய்களும்: கொழும்பு ஆங்கில ஊடகத்தில் அம்பலம்

[செவ்வாய்க்கிழமை, 29 ஓகஸ்ட் 2006, 08:37 ஈழம்] [ச.விமலராஜா]

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்க் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் பொய்கள்- முரண்பாடுகளை கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது.

- விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

- திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தை பாதுகாக்க நாங்களே மேற்கொண்ட தாக்குதல் என்கிறன்றனர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அமைச்சர் கேகலிய ரம்புக்வெல.

- சம்பூர்தான் பிரதான இலக்கு என்கிறார் கேகலிய ரம்புக்வெல

- கட்டைப்பறிச்சான், மூதூர், தோப்பூர் (இவை இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பவை) மற்றும் சம்பூரை மீள எடுக்க வேண்டியதுள்ளது(!)தான் என்கிறார் சரத் பொன்சேகா

இத்தகைய முரண்பாடுகளையும் பொய்களையும் உள்ளடக்கியதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேட்டில் சம்பூர் சமர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள செய்தி:

யுத்த களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளத்தை போராளிகள் தாக்குதவற்கு தளமாக உள்ள சம்பூரை நிர்மூலமாக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறுகையில், 11 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் படையினர் தொடர்பான எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று படையினர் சிகிச்சை பெற்று வரும் பொலநறுவ மற்றும் கந்தளாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட படையினர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோர் கொழும்புக்கு வான்வழியே கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் தரப்பிலான இழப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

எம்மிடம் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாவது:

படையினரது நடவடிக்கையால் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பூரில் ஊடுருவ படையினர் முயற்சித்த வலிந்த தாக்குதல் நடவடிக்கை இது. மும்முனைகளிலிருந்து இராணுவம் முன்னேற முயற்சித்தனர்.

மகிந்தபுரம், தோப்பூர், பாதனூர் ஆகிய இடங்களிலிருந்து தாக்குதலைத் தொடங்கினர். இலக்கந்தையிலிருந்து கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர்.

பல்குழல் எறிகணை மற்றும் கிபீர் விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்களை பொதுமக்கள் மீது படையினர் நடத்தினர். இதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் இளந்திரையன்.

இருப்பினும் சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், படையினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் மூதூர், தோப்பூர் ஆகிய மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பூரில் தாக்குதல் நடத்துவதால் அதனை நிர்மூலமாக்கும் நடவடிக்கை இது என்றார்.

பிரிக்கேடியர் சமரசிங்க கூறுகையில், தோப்பூர் மற்றும் செல்வநகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விடுதலைப் புலிகளின் சம்பூரிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பதில் தாக்குதல் நடத்தும் நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

சம்பூரில் போராளிகளின் நிலைகள் மீதான முப்படைகளும் இணைந்து முழு அளவிலான தாக்குதலை நடத்துகின்றன. படையினர் மீது மேலதிக தாக்குதல்களை தடுக்கவேண்டிய அவசியமிருக்கிறது என்றும் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

யுத்தகளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளம் ஆகியவற்றைப் பாதுகாக்க இராணுவம், கடற்படை, முப்படைகளும் இணைந்து தாக்க்தலை நடத்தி வருவதாக நாட்டின் இராணுவ உயர் அதிகாரியான இராணுவ தளபதி சரத் பொன்சேகா, அசோசியேற் பிரசுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தென்பகுதியில் உள்ள 4 கிராமங்களை படையினர் மீதான ஆர்ட்டிலறி மற்றும் மோர்ட்டார் தாக்குதலுக்காக கலகக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

"திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளத்தைப் பாதுகாப்பதற்காக மூதூர், கட்டைப்பறிச்சான், சம்பூர், தோப்பூர் ஆகியவற்றை மீள எடுப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

"துறைமுகம் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினால் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விநியோகப்பாதை பாதிக்கப்படும்" என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கிழக்குப் பிரதேசத்தில் யுத்தகள முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை கடற்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மைக்காலத்தில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். திருகோணமலை துறைமுகத்திற்குள் ஊடுருவ கடற்புலிகள் ஊடுருவியுள்ளனர் என்று டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.eelampage.com/?cn=28509

  • தொடங்கியவர்

சம்பூர் சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: எழிலன்

சம்பூரில் சமரில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

கனடா தமிழ்ச்சோலை வானொலிக்கு சி.எழிலன் இன்று செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில் இதைத் தெரிவித்துள்ளார்.

சி. எழிலன் கூறியுள்ளதாவது:

எங்களது கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பிரதேசம் மீது சிறிலங்கா இராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்ற வேண்டுமாயின் கட்டைப்பறிச்சன் தொடக்கம் மகிந்தபுரம் வரைக்கும் தரைவழியில் பாரிய நகர்வை மேற்கொள்வதோடு பெருந்தொகையான இழப்பையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி முதல் இராணுவத்தினர் தொடங்கியுள்ள வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதல் நடவடிக்கையில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

எமது தரப்பில் 10 போராளிகள் வீரச்சாவை தழுவியுள்ளனர்.

திருகோணமலை கடற்படைத் தளம் மீது எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்படுகிறதா என்பது உள்ளிட்ட மேலதிக விவரங்களை தற்போது வெளியிட இயலாது என்றார் எழிலன்

http://www.eelampage.com/?cn=28511

  • தொடங்கியவர்

சம்பூர் சமரும் சிறிலங்கா இராணுவத்தின் பொய்களும்: கொழும்பு ஆங்கில ஊடகத்தில் அம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் உள்ள சம்பூரைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்க் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வரும் பொய்கள்- முரண்பாடுகளை கொழும்பு ஆங்கில ஊடகம் அம்லப்படுத்தியுள்ளது.

- விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

- திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படைத் தளத்தை பாதுகாக்க நாங்களே மேற்கொண்ட தாக்குதல் என்கிறன்றனர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அமைச்சர் கேகலிய ரம்புக்வெல.

- சம்பூர்தான் பிரதான இலக்கு என்கிறார் கேகலிய ரம்புக்வெல

- கட்டைப்பறிச்சான், மூதூர், தோப்பூர் (இவை இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பவை) மற்றும் சம்பூரை மீள எடுக்க வேண்டியதுள்ளது(!)தான் என்கிறார் சரத் பொன்சேகா

இத்தகைய முரண்பாடுகளையும் பொய்களையும் உள்ளடக்கியதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேட்டில் சம்பூர் சமர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள செய்தி:

யுத்த களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சம்பூர் பகுதியில் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளத்தை போராளிகள் தாக்குதவற்கு தளமாக உள்ள சம்பூரை நிர்மூலமாக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறுகையில், 11 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் படையினர் தொடர்பான எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று படையினர் சிகிச்சை பெற்று வரும் பொலநறுவ மற்றும் கந்தளாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட படையினர் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளோர் கொழும்புக்கு வான்வழியே கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது.

விடுதலைப் புலிகளின் தரப்பிலான இழப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

எம்மிடம் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கூறியதாவது:

படையினரது நடவடிக்கையால் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பூரில் ஊடுருவ படையினர் முயற்சித்த வலிந்த தாக்குதல் நடவடிக்கை இது. மும்முனைகளிலிருந்து இராணுவம் முன்னேற முயற்சித்தனர்.

மகிந்தபுரம், தோப்பூர், பாதனூர் ஆகிய இடங்களிலிருந்து தாக்குதலைத் தொடங்கினர். இலக்கந்தையிலிருந்து கடற்படையினரும் தாக்குதல் நடத்தினர்.

பல்குழல் எறிகணை மற்றும் கிபீர் விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்களை பொதுமக்கள் மீது படையினர் நடத்தினர். இதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 26 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார் இளந்திரையன்.

இருப்பினும் சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், படையினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் மூதூர், தோப்பூர் ஆகிய மக்கள் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சம்பூரில் தாக்குதல் நடத்துவதால் அதனை நிர்மூலமாக்கும் நடவடிக்கை இது என்றார்.

பிரிக்கேடியர் சமரசிங்க கூறுகையில், தோப்பூர் மற்றும் செல்வநகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விடுதலைப் புலிகளின் சம்பூரிலிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பதில் தாக்குதல் நடத்தும் நிலைக்கு படையினர் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

சம்பூரில் போராளிகளின் நிலைகள் மீதான முப்படைகளும் இணைந்து முழு அளவிலான தாக்குதலை நடத்துகின்றன. படையினர் மீது மேலதிக தாக்குதல்களை தடுக்கவேண்டிய அவசியமிருக்கிறது என்றும் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

யுத்தகளத்தில் முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளம் ஆகியவற்றைப் பாதுகாக்க இராணுவம், கடற்படை, முப்படைகளும் இணைந்து தாக்க்தலை நடத்தி வருவதாக நாட்டின் இராணுவ உயர் அதிகாரியான இராணுவ தளபதி சரத் பொன்சேகா, அசோசியேற் பிரசுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தென்பகுதியில் உள்ள 4 கிராமங்களை படையினர் மீதான ஆர்ட்டிலறி மற்றும் மோர்ட்டார் தாக்குதலுக்காக கலகக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

"திருகோணமலை துறைமுகம் மற்றும் கடற்படை தளத்தைப் பாதுகாப்பதற்காக மூதூர், கட்டைப்பறிச்சான், சம்பூர், தோப்பூர் ஆகியவற்றை மீள எடுப்பதற்காக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக" சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

"துறைமுகம் மீது போராளிகள் தாக்குதல் நடத்தினால் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விநியோகப்பாதை பாதிக்கப்படும்" என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கிழக்குப் பிரதேசத்தில் யுத்தகள முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை கடற்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அண்மைக்காலத்தில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளனர். திருகோணமலை துறைமுகத்திற்குள் ஊடுருவ கடற்புலிகள் ஊடுருவியுள்ளனர் என்று டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=28509

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.