Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு மட்டும் பரிசு வழங்கும் விக்னேஸ்வரனின் முயற்சியை தோற்கடித்து விட்டனராம் சிறைச்சாலை அதிகாரிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cm-14.jpg

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்க வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சியை வெலிக்கடைச் சிறைச்சாலை அதிகாரிகள் முறியடித்து விட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், சி.வி.விக்னேஸ்வரன், வெலிக்கடை,மகசின் சிறைச்சாலையிலும், பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்து வருகிறார். 

அரசியல் கைதகளை சந்தித்துப் பேசிசுவதற்காக முதல்வர் விக்னேஸ்வரன், நேற்று வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குச் சென்றார். 

பொங்கலை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்குவதற்காக அவர் உடை மற்றும் இனிப்புப் பலகாரங்கள் அடங்கிய பரிசுப் பொதிகளுடன் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்ற முதல்வர் விக்னேஸ்வரன், அரசியல் கைதிகளுக்கு மட்டும் அவற்றைக் கொடுத்து சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 

ஆனால், அவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு மட்டும் பரிசுப் பொருட்களை கொடுத்து சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சிறைச்சாலை அதிகாரிகள் மறுத்து விட்டனர். 

வேண்டுமானால், எல்லா இந்து அரசியல் கைதிகளுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கலாம் என்று அவர்கள் கூறியதை அடுத்து அதற்கு முதல்வர் விக்னேஸ்வரன் இணங்கியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. 

அரசியல் கைதிகளை தனியாக சந்திப்பதற்கு அமைச்சரின் அனுமதி தேவை என்றும், அவர் வெளிநாடு சென்றுள்ளதால் தான், முதல்வர் விக்னேஸ்வரனால் தனியாக தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்க முடியாது போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைக் கொல்ல முயன்ற பெண் கைதிகளுக்கு மட்டுமே வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் புடவைகளை அன்பளிப்பு செய்ததாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதேவேளை, வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்ட பின்னர், சிறைச்சாலைக்கு வெளியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முதல்வர் விக்னேனஸ்வரன், 

“மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 70 பேரை மட்டுமே சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. 

சகலரையும் ஒரே நேரத்தில் சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஏழு அல்லது எட்டு பேர் அடங்கிய குழுக்களாகவே இவர்களை நாம் சந்தித்தோம். 

பெண் அரசியல் கைதிகள் நால்வரை சந்தித்தோம். தமக்கான வசதிகள் சிறைச்சாலைக்குள் செய்து கொடுக்கப்படுவதில்லை என்று அவர்கள் எம்மிடம் முறையிட்டனர். 

அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. 

அவர்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளோர், விளக்கமறியல் கைதிகள், வழக்கு தொடரப்பட்டோர் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டோர் என்று பல வகையான தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். 

அரசியல் கைதிகள் பலருக்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. 

சிறிலங்கா அதிபரை கடந்த 2ம் நாள் சந்தித்த போது இந்த கைதிகளின் விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்தேன். 

அவர், அரசியல் கைதிகளின் முழு விபரங்களையும் என்னிடம் கேட்டார். முழு விபரங்களுடன் தமது செயலர் லலித் வீரதுங்கவை சந்திக்குமாறும் அவர் தெரிவித்தார். 

வழக்குகளுக்கு முகம்கொடுத்திருக்கின்ற அரசியல்கைதிகள் தங்களுக்கு சட்டவாளர்களின் ஆதரவு போதுமானதாக இல்லையென்றும் சட்டவாளர்களின் உதவியைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டனர். 

அத்துடன், பெண் அரசியல் கைதிகளில் நால்வரை மட்டுமே சந்திக்க முடிந்தது. 

அதில் ஒரு பெண் கைதியின் கணவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். 

அவருக்கு எவ்விதமான வருமானமும் இல்லாமையினால் சவர்க்காரம் கூட வாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாக தெரிவித்தார். 

அரசியல் கைதிகளை சுதந்திரமாகவே நாம் சந்தித்தோம். எந்தவிதமான இடையூறுகளும் இருக்கவில்லை. 

அரசியல் கைதிகள் சகலரையும் ஒரே நேரத்தில் சந்திக்க வேண்டுமாயின் அமைச்சரின் அனுமதி தேவை. அமைச்சர் தற்போது நாட்டில் இல்லை. 

அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களுக்கு நிவாரணம் பெற்று கொடுக்க முயற்சிப்போம். 

இது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் செயலரைச் சந்தித்து விபரங்களை கொடுப்போம்.”என்று அவர் மேலும் தெரிவித்தார். 

அதேவேளை, முதல்வர்சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலி, பூசாவில் உள்ள தடுப்பு முகாமுக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளவுள்ளார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140113109769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.