Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படைக்குறைப்புக்கு காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் – மகிந்தவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

cm-speech%20.jpg

வடக்கில், சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும், மக்களின் வாழ்க்கையில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது ஆகியவற்றுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அதிபரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். 

நேற்று நடந்த தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். 

வடக்கு - தெற்கின் இணைப்பிற்கு பாலமாக 'கலர்ஸ் ஒப் கரேச்' நிறுவனத்தின் இரு இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர். 

இதனை மனதிற் கொண்டு வடக்கு மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முன்மாதிரியான முயற்சிகளை எடுக்க வேண்டும். 

போரால் தமிழ்க் குடும்பங்கள் மட்டுமன்றி சிங்களக் குடும்பங்களும் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்துள்ளன. 

எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3 அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

அதில், வன்முறையை விலகி முன்னேற்றல், நாட்டைப் பிரிக்காது முன்னேற்றல், சமஷ்;டி முறையை அனுசரித்து முன்னேறல் போன்ற தேர்தல் கொள்கையை வடக்கு மாகாண மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். 

அந்தவகையில், வடக்கு மாகாண மக்களின் மனநிலையை சிறிலங்கா அதிபர் புரிந்து கொண்டிருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

cm-speech-thellipalai.jpg

ஆகவே வன்முறைகளைக் களைந்து நாட்டை பிரிவினைக்கு உட்படுத்தாது, அதிகாரங்களைப் பகிர்ந்து கூட்டாக இணைந்து வாழ்க்கையை நடத்த வந்துள்ள எம்மக்களின் மனோநிலையை இங்கு வருகை தந்துள்ள சிறிலங்கா அதிபர் புரிந்து கொள்வார் என நம்புகின்றோம். 

எமது தேவைகளைப் புரிந்து இனக்கூற்றுக்கு வித்திடுவார் என்பதுடன், புதியதொரு வாழ்க்கை முறைக்கு வழி கோலுவார் என்றும் எதிர்பார்க்கலாம். 

புற்றுநோய்க்கு ஆளானவர்கள் எவருடைய உதவிகளுமற்ற பரிதாப நிலைக்கு ஆளாகின்றார்கள். தம்மை தாமே பராமரித்துக் கொள்ள முடியாத நிலையை அடைகின்றனர். 

இதனால் மனிதாபிமானமும், சுயகௌரவமும் இழக்கப்படுகின்றது. 

அவ்வாறு சுயகௌரவம் இழக்கப்படும் போதும் மனித அந்தஸ்து குறைக்கப்பட்டு மனிதத்தின் அத்திவாரம் ஆட்டங்காணத் தொடங்குகின்றது. 

வடக்கு மாகாண மக்களின் சுயகௌரவம் சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக இங்கு வருகை தந்துள்ள சிறிலங்கா அதிபருக்கு எடுத்துக்கூற விரும்புகின்றேன். 

ஏனெனில் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்ற ரீதியிலும் நாட்டில் ஆணை பிறப்பிக்கும் சேனைத் தலைவர் என்ற ரீதியிலும் வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் சுயகௌரவத்தைப் பாதிக்கும் வகையிலே இங்கு வாழும் இராணுவத் தலையீடு நோக்கப்படுகின்றது. 

இதனால், பொருளாதார விருத்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதுடன், பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண மக்களின் உள்ளார்ந்த சுயகௌரவமும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

ஏனெனில், இங்கு வாழும் பெரும்பான்மை இராணுவத்தினர் உள்ளூர் வாசிகளின் மொழியை பேசுவதில்லை. 

அத்துடன் மக்களின் மனம் தழுவியவர்களும் இல்லை. கலாசாரத்தில் ஊறியவர்களும் அல்ல. அவர்களின் ஊர்களை சேர்ந்தவர்களும் அல்ல. 

இங்கு இருக்கும் மக்களின் தொகைக்கு ஈடான தொகையில் இராணுவத்தினரின் தொகை இருக்கிறது. 

நாட்டில் பாதுகாப்பு பேணப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் இல்லை. 

ஆனால், வடபகுதி மக்களின் நல உரித்துக்கள், பாதுகாப்பு, சுயகௌரவம் ஆகியவற்றை கருத்திற் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றேன். 

இரண்டுமே பேணப்பட வேண்டும் என்பதை எனது மக்கள் சார்பாக உங்களிடம் கூறிக் கொள்ள விரும்புகிறேன். 

போர் வீரர்கள் தொகையில் குறைப்பு ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பதற்கான கால வரையறை நிர்ணயிக்க வேண்டும். 

எமது மக்கள் உறுதியான மனம் உடையவர்கள். எச்சந்தர்ப்பத்திலும், மக்களின் தேவைகளை வழங்கி முன்னேற வழி வகுப்பது எமது எல்லோரினதும் கடமையாகும். 

சுதந்திரமாகவும், சுபீட்சமாகவும், இந்த நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த விடயங்களை ஆவண செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்' என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140120109807

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.