Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமற்போனோரில் 110 பேர் நேற்று இறந்தவர்களாகப் பதிவு; பாதுகாப்பு அமைச்சு இரகசிய நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sr.jpg

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடத்தப்படும் பதிவு நடவடிக்கையில் நேற்று 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்துவிட்டனர் எனக் கருதிப்பதிவுகளை மேற்கொண்டனர்.

காணாமற் போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவி னரால் (ரி.ஐ.டி) கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் பதிவு நடவடிக்கையில் கலந்து கொண்ட 426 பேரில் 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்து விட்டார்கள் எனக் கருதி பதிவுகள் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

பகிரங்கப்படுத்தப்படாத 
பதிவு நடவடிக்கை
காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மறுபுறத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் இந்தப் பதிவு நடவடிக்கை பகிரங்கப்படுத்தப்படாமல் கரைச்சிப் பிரதேச சபையின் கூட்டுறவு மண்டபத்தில் நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் மூலம் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இறுதிப் போரில் காணாமற்போனவர்களின் தேவைகள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் நடத்திய விசாரணைகளுக்கு அமைய 426 குடும்பங்கள் இனங்காணப்பட்டதாகவும், அந்தக் குடும்பங்களே நேற்று பதிவுக்கு அழைக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம சேவையாளர்கள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களுக்கு அமைவாக தம்மிடம் ஒரு வாரத்துக்கு முன்னர் சிலர் வந்து பதிவுகளை மேற்கொண்டதாகவும், அவர்கள் நேற்று (நேற்று முன்தினம்) எமது வீடுகளுக்கு வருகை தந்து இன்று (நேற்று) பதிவுக்காக வருமாறு தெரிவித்திருந்ததாகவும் அதற்கு அமையவே தாம் வருகை தந்தாகவும் அங்கு வந்த மக்கள் தெரிவித்தனர்.

நீதி சமாதானத்துக்கான அமைச்சு, அரச நிர்வாக அலுவல்கள் அமைச்சு, அரசபாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர்களுக்கான அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு, வேலைவாய்ப்பு பணியகம், ஆள்பதிவு திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம் என்பன நேற்றைய இந்தப் பதிவு நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தன.

ஆசை வார்த்தைகள் 
அங்குன் தாராளம்

காணாமற்போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்தால் பல்வேறு உதவிகள் வழங்கப்படும் என்று மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. நஷ்டஈடு மற்றும் வீட்டு வசதி, கடன்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மக்களிடம் கூறப்பட்டு காணாமற் போனவர்களை இறந்தவர்களாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கை அங்கு முன்னெடுக்கப்பட்டது.

இதனால் 110 பேர் காணா மற்போன தமது உறவுகள் இறந்தவர்கள் எனக் கருதி பதிவு செய்துள்ளனர். இவர்களில் 7 பேருக்கு நேற்றே தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் காசோலை வழங்கும் நிகழ்வில் ஜனாதி பதியின் புதல்வரும் நாடாளு மன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்­ கலந்து கொண்டார்.

அத்துடன் பங்குபற்றிய 426 குடும்பங்களுக்கும் 10 கிலோ நிறையுள்ள உலர் உணவுப்பொதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த நடவடிக்கை தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண விடம் வினவிய போது, புலிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்கள், அவர்களால் காணா மற்போகச் செய்யப்பட்டவர்கள், அவர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும் பங்களுக்கே உதவிகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குழப்பும் நடவடிக்கையா ?
இந்த நடவடிக்கை மாவட்டச் செயலகத்தின் அருகிலுள்ள கூட்டுறவு மண்டபத்தில் முன் னெடுக்கப்பட்ட வேளையில், மாவட்டச் செயலகத்தில் ஆணைக்குழுவின் அமர்வு இடம்பெற்றது.

ஆணைக்குழுவின் அமர்வுக்கு அழைக்கப்பட்ட 41 பேரில் 27 பேரே நேற்றைய தினம் அமர்வில் கலந்து கொண்டனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுக்குச் சென்றதால் ஏனையோர் கலந்து கொள்ளாமல் விட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ் வெல் பராக்கிரம பரணகமவிடம் வினவியபோது, இது தொடர்பில் தனக்குத் தெரியா தெனவும், வெளியில் இடம் பெறும் எந்தவொரு விடயத்துக்கும் நான் பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=163852588921188053

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.