Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவில் தமிழ் மொழியை தக்கவைக்கும் முயற்சியில் உலகத்தமிழ்ப் பண்பட்டு இயக்கம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ITC.France_150.jpg

உலகெங்கும் பல நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் தென்னாபிரிக்கா மியன்மார் மொறிசியஸ் கயானா சேசில்ஸ் ரியூனியன் போன்ற நாடுகளில் தமிழ்ப் பெயர்களோடு மட்டும் தான் நமது தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் மூத்தவர்கள் சிறிது தமிழ் மொழியை கற்றிருந்தாலும் வயதில் இளையோருக்கும் அந்த சந்தர்ப்பம் கிட்டவில்லை. இதனால் அந்தந்த நாடுகளில் தமிழ் மொழியின் பயன்பாடு என்பது சிறிது சிறிதாக அற்றுப்போய் வருகின்றது.

  

இவ்வாறான ஒரு பாரிய பிரச்சனையை தமிழ் நாட்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில் தமிழர்களின் பிரச்சனையாக பார்த்த அவர் தமிழ் நாட்டிலிருந்து தமிழ் ஆசிரியர்களை தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தார். மேற்படி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் சிறிது கால செல்ல அந்த முயற்சி அதிகாரிகளினால் கைவிடப்பட்டது.

அன்றிலிருந்த இன்றுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த சிலரிடம் எம்ஜிஆர் செய்ததைப் போன்ற பணியை தொடருங்கள் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அது நிறைவேற்றப்படவிலலை. இருந்தாலும் தென்னாபிரிக்காவில் பலமுள்ள தமிழர் நிறுவனமாக இயங்கிவரும் தென்னாபிரிக்கத் தமிழர் அமைப்புக்களின் சம்மேளனம் இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி செயற்பட்டு வந்தது. இவர்களது இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கவும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் செயற்படத் தொடங்கியது. உலகெங்கும் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணி ஆற்றிவரும் உலகத் தமிழ்பண்பாட்டுக் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கமும் இயக்கத்தின் தமிழ்க் கல்வி பொறுப்பாளர் திரு வி. துரைராஜாவும் இணைந்து தங்கள் கடமையை ஆற்ற ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகமான எஸ். ஆர். எம் பல்கலைக் கழகத்தோடு தொடர்பு கொண்டு தமிழ்க் கல்வியை மேம்படுத்தும் தேவை அதிகமாக உள்ள நாடுகளில் உள்ள தமிழாசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்கும்படி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் திரு துரை கணேசலிங்கமும் திரு துரைராஜாவும் வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பிரதிநிதிகளை தமிழ்நாட்டுக்கு வந்து உடனடியாக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வண்ணம் வேண்டுகோள் விடுத்தது.

இந்த வேண்டுகோளின் அடிப்படையில் கனடாவிலிருந்து திரு துரைராஜாவும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கமும் தமிழ்நாட்டுக்குச் சென்று எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் திரு பொன்னவைக்கோ அவர்களோடும் அவரது போராசிரியர்களோடும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. உலகில் எந்தெந்த நாடுகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு தொலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் நாளை சனிக்கிழமை 25ம் திகதி தென்னாபிரிக்காவின் டேபன் நகரில் நடைபெறவுள்ள மேற்படி டிப்ளோமா பயி;ற்சி நெறியின் அங்குரார்ப்பண விழா நடைபெறவுள்ளது. மேற்படி விழாவிற்கான சகல ஏற்பாடுகளையும் தென்னாபிரிக்காவில் உள்ள தென்னாபிரிக்கத் தமிழர்களின் சம்மேளனம் செய்துள்ளது. மேற்படி தொடக்க விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பாக துணைவேந்தர் டாக்டர் மு. பொன்னவைக்கோ அவர்களும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பாக அதன் தமிழ்க் கல்வி பொறுப்பாளர் திரு வி. துரைராஜா அவர்களும் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்கள்.

மேற்படி அங்குரார்ப்பண விழா சிறப்புற நடைபெற தென்னாபிரிக்க அரசாங்கத்தின் மொழிகள் தொடர்பான திணைக்களமும் தேவையான உதவிகளைச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தென்னாபிரிக்கத் தமிழர் அமைப்புக்களின் சம்மேளனம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மற்றும் தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் ஆகிய மூன்று உயர் நிறுவனங்கள் இணைந்து செயற்படுத்தும் இந்த தமிழாசிரியர்களுக்கான பயிற்சி நெறியானது வெற்றியளிக்க உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என்று உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=102263&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.