Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவாவில் வழங்கிய உறுதிமொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை - சம்பந்தர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் ஜெனிவாவில் நடக்க இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் இலங்கை அரசு மீது அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணை கடுமையானதாக இருக்கும் என்றும் அது வெற்றி பெறுவதற்கு உலக நாடுகளின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் என்றும் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலை வரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

"அமெரிக்காவால் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை கடுமையாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அந்தப் பிரேரணை  வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தீர்வைப் பெற்றுத்தரக்கூடியதாக அமைய வேண்டும் என நாம் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்பு நாடுகளுடனும் நாம் பேச்சு நடத்தவுள்ளோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் தமக்கு எதிராகக் கடுமையான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளமையை இலங்கை அரசு நன்றாக உணர்ந்துவிட்டது.

இந்த நிலையில், அந்தப் பிரேரணையைத் தடுப்பதற்கு - தோற்கடிப்பதற்கு ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகளுடன் அரசு இரக சியமான முறையில் பேச்சுகளை நடத்தத் தொடங்கியுள்ளது. எனினும், சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் இந்தக் கடுமையான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வைக்கும்.

அரசு முட்டுக்கட்டை 

வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்று நான்கு மாதங் கள் நிறைவடைந்துவிட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடமாகாணசபை உள்ளது. ஆனால், இந்த மாகாண சபையை முறையாக இயங்கவிடாமல் மஹிந்த அரசு தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுடன் வடக்கு முதல்வர் பேச்சு நடத்தியிருக்கின்றார். இந்தப் பேச்சின் போது வடமாகாண சபை பிரதம செயலாளரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்றும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் ஏனைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவேன் என்றும் வடக்கு முதல்வரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். ஆனால், அவர் உறுதியளித்த விடயங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆளுகைக்குள் இருக் கும் வடக்கு மாகாணசபை இலங்கையிலுள்ள ஏனைய மாகாண சபைகளுக்கு முன் மாதிரியாக இருந்துவிடும் என்ற அச்சத்தால் இந்த மாகாண சபைக்குத் தொடர்ந்து முட்டுக் கட்டைகளைப் போட்டுவரு கின்றது மஹிந்த அரசு.

தமிழர் ஒற்றுமையாக போராடவேண்டும்

இலங்கை அரசு எம் மீது தொடர்ந்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து வருவதால் அதற்கெதிராக தமிழர் நாம் ஒற்றுமையாக இருந்து ஜனநாயக வழியில் போராட வேண்டும்.

கிராமங்கள், பிரதேசங்கள், மாவட்டங்கள் ரீதியில் பரப்புரைகளை நாம் முன்னெடுக்கவேண்டும்.

கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை, மாகாணசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக வும் அவதானத்துடன் இருக்க வேண்டும். எமக்கெதிராக சதி வலைகளைச் செய்ய சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

அண்மையில் கூட்டமைப் பின் ஆளுகைக்குட்பட்ட உள் ளூராட்சி சபைகளின் வரவு -செலவுத் திட்டங்கள் இந்தச் சதி வேலைகளால் தோற்கடிக்கப் பட்டுள்ளன. இனியும் நாம் இதற்கு இடமளிக்கக்கூடாது - என்றார்.

தமிழரசுக் கட்சியின் இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, பொன். செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளையோ அன்றேல் 2013 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளையோ அர­சாங்கம் இது­வரை நிறை­வேற்­ற­வில்லை. அதே­போன்று வட­மா­காண சபையின் சீரான இயக்­கத்­துக்கு உத­வு­வ­தாக ஜனா­தி­பதி அளித்த உறு­தி­மொ­ழி­களும் இது­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப் பின் தலை­வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

மாகாண சபையை முறை­யாக இயங்கச் செய்ய மத்­திய அர­சுடன் ஒத்­து­ழைக்கத் தயா­ராக இருப்­ப­தாக நாங்கள் அர­சுக்கு சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­தினோம்.முத­ல­மைச்சர் ஜனா­தி­ப­தி­யுடன் நேரில் சென்று சந்­தித்து பேச்சு நடத்­தினார். ஜனா­தி­ப­திக்கும் முத­ல­மைச்­ச­ருக்­கு­மி­டையில் சில முடி­வுகள் எடுக்­கப்­பட்­டன. அவற்றை உட­ன­டி­யாக நிறை­வேற்­று­வ­தாக ஜனா­தி­பதி வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்தார். ஆனால், இவை எது­வுமே நிறை­வேற்­றப்­ப­ட­வி ல்லை என்றார்.

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் பொது­மக்­களின் காணிகள் பல சுவீ­க­ரிக்­கப்­பட் ­டுள்­ளன. தொடர்ந்து சுவீ­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. பாரம்­ப­ரி­ய­மாக மக்கள் வாழ்ந்த காணி­களில் அவர்கள் தொட ர்ந்து வாழ வழி­யில்­லாத நிலைமை காண ப்­ப­டு­கின்­றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் தொழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யாது மிகுந்த கஷ்­டங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­றனர். இரா­ணு­வத்­தி­னரின் நட­வ­டிக்­கைகள் இவ ற்­றுக்குப் பெரும் இடை­யூ­றாக இருந்து வரு­கின்­றன.

கடற்றொ­ழிலை மேற்­கொள்ள முடி­யா­ த­வர்­க­ளாக மீன­வர்கள் கஷ்­டங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­தலை செய்­வ­தற்­கான அறி­கு­றி­க ளைக் காண முடி­ய­வில்லை எனவும் தெரிவித்தார்.

அதி­க­ரித்­துள்ள இரா­ணுவப் பிர­சன்­ன த்தை குறைத்து சிவில் அதி­கா­ரி­களின் செயற்­பா­டு­களை அதி­க­ரிக்க வேண்டும். வட­மா­காண சபையை முறை­யாக கொண்டு நடத்த முடி­யாத சூழ்­நி­லையே உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது குறித்து நாம் அதீத கவனம் செலுத்தி வருகிறோம். இனப்பிரச்சினைக்கான அர சியல் தீர்வு தொடர்பிலும் இழுத்தடிக் கப்பட்டு வருகின்றது. எமது இலக்குகள் குறித்து நாம் எப்போதும் கவனம் செலுத் தியே வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. உயர் ஸ்தானிகர் தனது நேரடிக் கவனத்தை செலுத்தியுள்ளார். ஜெனீவா கூட்டத் தொடர் தொடர்பில் தேவைப் படும் சந்தர்ப்பங்களில் தேவையான விளக்கங்களை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் கூறினார்.

ஜெனீவாவில் வழங்கிய உறுதிமொழிகளை மகிந்த நிறைவேற்றவில்லை -  சம்பந்தர்:-

26-01-2014 - 01:51

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102229/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.