Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் ஸ்ரீலங்கா டெஸ்ட் தொடர்

Featured Replies

முதல் நாள் முடிவில் பங்களாதேஷிற்கு எதிராக இலங்கை முன்னிலை

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2014

 

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது டெஸ்ற் போட்டியின் முதல் நாள் முடிவில் இலங்கை அணி முழுமையான முன்னிலையைப் பெற்றுள்ளது.

ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றது.

முதலாவது விக்கெட்டுக்காக 35 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும் அதன் பின்னர் விக்கெட்டுக்களை இழந்த அவ்வணி 4 விக்கெட்டுக்களை இழந்து 59 ஓட்டங்களுடன் தடுமாறியது. 5ஆவது விக்கெட்டுக்காக ஷகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம் இருவரும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும்  அதன் பின்னர் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டன.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிக்கூர் ரஹீம் 61 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும்  சொஹக் கஸி 42 ஓட்டங்களையும்  ஷம்சுர் ரஹ்மான் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

வேறு எந்த வீரரும் இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ஷமின்ட எரங்க 4 விக்கெட்டுக்களையும்  சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும்  ரங்கன ஹேரத் 2 விக்கெட்டுக்களையும்  அஞ்சலோ மத்தியூஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய நாள் ஆட்டம் முடிவடையும் போது விக்கெட் இழப்பின்றி 60 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.கௌஷால் சில்வா மற்றும் திமுத் கருணாரத்ன ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 30 மற்றும் 28 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98174-2014-01-27-11-40-12.html

  • தொடங்கியவர்

இலங்கை முன்னிலை : கவுஷல் சில்வா சதம்
ஜனவரி 28, 2014.
 

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கவுஷல் சில்வா முதல் சதம் அடிக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 143 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

 

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 232 ரன்களுக்கு ஆல்–அவுட்டானது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்திருந்தது.

சில்வா சதம்:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஹசைன் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கருணாரத்னே அரை சதம்(53), கடந்து அவுட்டானார். மறுபக்கம் கவுஷல் சில்வா, டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்தார். சங்ககரா 75 ரன்களில் அவுட்டானார். சாகிப் ‘சுழலில்’ சில்வா (139), சண்டிமால் (40) சிக்கினர்.  இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 375 ரன்கள் எடுத்து, 143 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜெயவர்தனா (42) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேச அணி சார்பில் சாகிப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/01/1390928158/KaushalSilvasrilanka.html

  • தொடங்கியவர்

3ஆம் நாள் முடிவில் பங்களாதேஷிற்கு எதிராக வெற்றியை நோக்கி இலங்கை

புதன்கிழமை, 29 ஜனவரி

பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ற் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இலங்கை அணி இனிங்ஸ் வெற்றியொன்றை நோக்கிப் பயணித்துள்ளது.

 

5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களுடன் இன்றைய நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 730 ஓட்டங்களுடன் தனது இனிங்ஸை இடைநிறுத்தியது. 6ஆவது விக்கெட்டுக்காக மஹேல ஜெயவர்தன, அஞ்சலோ மத்தியூஸ் இருவரும் 179 ஓட்டங்களைப் பகிர்ந்ததோடு 7வது விக்கெட்டுக்காக மஹேல ஜெயவர்தன, கித்துருவன் விதானகே இருவரும் 175 பந்துகளில் பிரிக்கப்படாத 176 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தனது 7ஆவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்த மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்காமல் 203 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா  139 ஓட்டங்களையும் தனது கன்னிச்சதத்தைப் பூர்த்தி செய்த கித்துருவன் விதானகே ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களையும்  அஞ்சலோ மத்தியூஸ் 86 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 75 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 53 ஓட்டங்களையும்  டினேஷ் சந்திமால் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும்  சொஹக் கஸி 2 விக்கெட்டுக்களையும்  அல் அமின் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 498 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி இன்றைய நாள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணியின் அதிரடி வீரர் தமிம் இக்பாலின் விக்கெட்டை ரங்கன ஹேரத் கைப்பற்றினார்.

ஷேரே பங்களா மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பங்களாதேஷ் அணி 232 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதன்படி, 9 விக்கெட்டுக்கள் கைவசமுள்ள நிலையில் இனிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு பங்களாதேஷ் அணிக்கு இன்னமும் 463 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98430-3-------.html

  • தொடங்கியவர்

பங்களாதேஷிற்கு எதிராக இலங்கைக்கு இன்னிங்ஸ் வெற்றி
வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014 13:38

 

பங்களாதேஷிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றிவரும் இலங்கை அணி, தனது முதலாவது டெஸ்ட்; போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஷேரே பங்களா மைதானத்தில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பித்த இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்பிக்கூர் ரஹீம் 61 ஓட்டங்களையும் ஷகிப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும் சொஹக் கஸி 42 ஓட்டங்களையும் ஷம்சுர் ரஹ்மான் 33 ஓட்டங்களையும் பெற, அவ்வணி 232 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக ஷமின்ட எரங்க 04 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 03 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத் 02 விக்கெட்டுக்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 02 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன ஆட்டம் இழக்காமல் 203 ஓட்டங்களையும் கௌஷால் சில்வா 139 ஓட்டங்களையும் கித்துருவன் விதானகே ஆட்டம் இழக்காமல் 103 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 86 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 75 ஓட்டங்களையும் பெற, அவ்வணி 06 விக்கெட்டுக்களை இழந்து 730 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஷகிப் அல் ஹசன் 03 விக்கெட்டுக்களையும் சொஹக் கஸி 02 விக்கெட்டுக்களையும் அல் அமின் ஹொசைன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் மொமினுல் ஹக் 50 ஓட்டங்களையும் அல் அமின் ஹொசைன்  ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களையும் நசீர் ஹொசைன் 29 ஓட்டங்களையும் பெற, அவ்வணி 250 ஓட்டங்களுக்கே ஆட்டம் இழந்தது. இதன்படி அவ்வணி ஓர் இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 05 விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 03 விக்கெட்டுக்களையும் ரங்கன ஹேரத், ஷமின்ட எரங்க இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக இலங்கையின் மஹேல ஜெயவர்தன தெரிவானார்.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/98498-2014-01-30-08-12-55.html

  • தொடங்கியவர்

சங்காவின் துடுப்பாட்டம் கைகொடுக்க இலங்கை அணி வலுவான நிலையில்

இலங்­கை -­ பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி வலுவான நிலையை நோக்கி நகர்கின்றது.

பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அவ் அணியுடன் 2 டெஸ்ட், 2 இரு­பது -20 மற்றும் 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

மிர்பூரில் இடம்பெற்ற  முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
அந்தவகையில் இன்று சிட்டகொங்கில் இடம்பெற்ற இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 39 ஓட்டங்களைப் பெற்றபோது முதலாவது விக்கெட்டை பறிகொடுத்தது.
இந்நிலையில் களம் புகுந்த குமார் சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றார். அவர் ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
சங்கக்காரவிற்கு மறுமுனையில் இருந்து மஹேல ஜயவர்தன சிறந்த பங்களிப்பு வழங்க, இலங்கை அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 72 ஓட்டங்களையும் கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போது குமார் சங்கக்கார 160 ஓட்டங்களுடனும் விதானகே ஓட்டமெதனையும் பெறாது ஆடுகளத்திலுள்ளனர்.

 

http://www.virakesari.lk/?q=node/361217

  • தொடங்கியவர்

சங்ககரா சதம்: இலங்கை அபாரம்

 

பிப்ரவரி 04, 2014

 

.சிட்டகாங்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சங்ககரா சதம் கடக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் 314 ரன்கள் குவித்தது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை  வென்றது. இரண்டாவது போட்டி நேற்று சிட்டகாங்கில் துவங்கியது. ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

‘டாப்–ஆர்டர்’ ஏமாற்றம்:

இலங்கை அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. சில்வா (11), கருணாரத்னே (31) ஏமாற்றினர். பின் இணைந்த சங்ககரா, ஜெயவர்தனா ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. முகமதுல்லா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சங்ககரா, டெஸ்ட் அரங்கில் 34வது சதத்தை பதிவு செய்தார். 3வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தபோது, ஜெர்வர்தனா 72 ரன்களில் அவுட்டானார். சாகிப் ‘சுழலில்’ சண்டிமால் (27), மாத்யூஸ் (5) அடுத்தடுத்து சிக்கினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. சங்ககரா (160) அவுட்டாகாமல் இருந்தார்.

34:

நேற்றைய ஆட்டத்தில் இலங்கையின் சங்ககரா 34வது சதத்தை எட்டினார். இதன் மூலம், தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களில் அதிக சதம் அடித்தவர் என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்து சக வீரர் ஜெயவர்தனா (33), வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (29) உள்ளனர்.

 

Sangakkara-box1_zpsb886a211.jpg

 

 

http://sports.dinamalar.com/2014/02/1391533273/Sangakkarasrilanka.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சங்கா முச்சதம்: இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 587 ஓட்டங்கள்

இலங்­கை -­ பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குமார் சங்கக்கார அபாரமாக ஆடி முச்சதம் குவிக்க இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ஓட்டங்களை பெற்றுள்ளது.

sanga1_zps6b993dc7.jpg

பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அவ் அணியுடன் 2 டெஸ்ட், 2 இரு­பது -20 மற்றும் 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

மிர்பூரில் இடம்பெற்ற  முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

178237_zps617d6686.jpg
அந்தவகையில் நேற்று சிட்டகொங்கில் ஆரம்பமாகிய இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக அபாரமாக ஆடிய குமார் சங்கக்கார 319 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் டெஸ்ட் போட்டியில் தனது அதிகூடிய ஓட்டப்பெறுதியையும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் சதமடித்த சங்கா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய சதமடித்த (34 சதம்) முதலாவது இலங்கை வீரர்என்ற பெருமையையும் சர்வதேச ரீதியில் அதிகூடிய சதமடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.

ஏனைய வீரர்கள் சோபிக்காத போதிலும் மஹேல ஜெயவர்தன 72 ஓட்டங்களையும் விதானகே 35 ஓட்டங்களையும் அஜந்த மென்டிஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் சகிப் அல்ஹசன் 5 விக்கெட்டுகளையும் நஸீர் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்ஒரு விக்கெட்டை இழந்து 86 ஓட்டங்களைப்பெற்றுள்ளது. பந்து வீச்சில் லக்மல் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

ஆடுகளத்தில் ரஹ்மான் 45 ஓட்டங்களுடனும் இம்ருல் ஹைஸ் 36 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

 

http://www.virakesari.lk/?q=node/361239

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டத்தை பங்களாதேஷ் சமப்படுத்தவே போராடவேண்டியிருக்கும். முதல் இன்னிங்ஸில் இன்னமும் 9 விக்கட்டுகள் கைவசம் உள்ள நிலையில் மேலும் 301 ஒட்டங்களைப் பெற்றாலே மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸுக்காக இலங்கையை ஆடவைக்க முடியும். பலோ-ஒன் செய்தால் இலங்கை நான்காம் நாள் ஆட்டம் முடிவதற்கு முன்னரே வெற்றிபெற்று விடும்.

  • தொடங்கியவர்

ம் பார்ப்போம் நாளைக்கு என்ன நடக்குது என்று :D

  • தொடங்கியவர்

போராடுகின்றது பங்களாதேஷ்; 3 நாள் முடிவில் இலங்கை ஆதிக்கம்
வியாழக்கிழமை, 06 பெப்ரவரி

 

பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று. பங்களாதேஷ் அணி முழுமையாக துடுப்பாடியது. இரட்டைச்சத இணைப்பாட்டம் மூலம் 400 ஓட்டங்களை தாண்டியுள்ளது. இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக சம்சூர்  ரஹ்மான், இம்ருள் கயேஸ் ஆகியோர் இணைந்து 232 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். சம்சூர் ரஹ்மான் 106 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை, இம்ருள் கயேஸ் 115 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.  இரண்டாவது போட்டியில் விளயாடும் சம்சூர் ரஹ்மானின் முதற் சதம் என்பதுடன், 2 1/2 வருடங்களின் பின் மீண்டும் அணிக்குள் வந்த இம்ருள் கயேஸின் இரண்டாவது சதம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு விக்கெட், 86 ஓட்டங்கள் என்ற நிலையில் இன்று ஆரம்பித்த பங்களாதேஷ் அணி இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 409 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. சகிப் அல் ஹசன் 50 ஓட்டங்களையும், நசிர் ஹொசைன் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் 4 விக்கெட்களை கைப்பற்றி அஜந்த மென்டிஸ் தன் மீள்வருகையை பதிவு செய்துள்ளார். டில்ருவான் பெரேரா 3 விக்கெட்களைக் கைப்பற்றிக்கொண்டார்.

இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில் 587 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் குமார்சங்ககார 319 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மஹேல ஜெயவர்தன 72 ஓட்டங்களையும், அஜந்த மென்டிஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். கீத்ருவான் விதானகே 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் சகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார். நசிர் ஹொசைன் 2 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார்.

பங்களாதேஷ் அணி தொடர்ச்சியா இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடும் நிலையில் இருந்து தப்பித்துள்ளமையினால் இலங்கை அணி இந்த போட்டியில் வெல்ல போராட வேண்டிய நிலை இருக்கும். இலங்கை அணி தோல்வி என்ற நிலையில் இருந்து தப்பித்து விட்டது என்று சொல்லக் கூடியதாக இருந்தாலும், பங்களாதேஷ் அணி இந்த போட்டியை சமப்படுத்தக் கூடிய நிலையில் இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/99318---3-----.html

  • கருத்துக்கள உறவுகள்

பலோ-ஒன் அய்த் தவிர்த்துக் கொண்ட பங்களாதேஷ் அணிக்கும். நூறு ஓட்டங்களைக் குவித்த இம்ருல் கயிஸ் மற்றும் சம்சுர் ரஹ்மான் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா கிழிஞ்சுது

  • தொடங்கியவர்

சாதனைகள் பல படைத்த சங்காவுக்கு ஜனாதிபதி வாழ்த்து


பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாடி சாதனைகள் பலவுடன் சதங்களை பெற்ற இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இதில் குமார் சங்கக்கார சிறப்பாக துடுப்பெடுத்தாடி சாதனைகள் பலவுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதலாவது முச்சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த முச்சதம் மூலம் டெஸ்ட் அரங்கில் தனது அதிகூடிய ஓட்டப்பெறுதியையும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இதேவேளை சங்கா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய சதமடித்த (35 சதம்) முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் சர்வதேச ரீதியில் அதிகூடிய சதமடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.
இந்நிலையில் இலங்கை அணியின் இன்றைய 2அவது இன்னிங்ஸில் சங்கக்கார 105 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்ததோடு ஒரு டெஸ்ட் தொடரில் 424 ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதற்கு முன்னர் கிரஹாம் கூச்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இங்கிலாந்து அணியின் கிரஹாம் கூச், 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்களையும், 2வது இன்னிங்ஸில் 123 ஓட்டங்களையும் (மொத்தம் 456) குவித்தார், அவர்தான் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்.
இவருக்கு அடுத்தபடியாக ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மூன்று சதமும், மற்றொரு இன்னிங்ஸில் மற்றொரு சதமும் அடித்த 2வது வீரர் என்ற பெருமைக்குரியவானார் சங்கக்கார.

இருப்பினும் இன்னும் 33 ஓட்டங்கள் எடுத்திருந்தாலும், கூச்சின் சாதனையை மிஞ்சியிருக்கலாம்.

இவ்வாறு  சாதனைகள் பல படைத்த குமார் சங்கக்காரவுக்கு சர்வதேச ரீதியில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சங்காவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/?q=node/361284


சங்ககரா சதம்: இலங்கை ஆதிக்கம்

 

பிப்ரவரி 07, 2014.சிட்டகாங்:

 

சிட்டகாங் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சிலும், சங்ககரா சதம் அடிக்க, இலங்கை அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இலங்கை வென்றது. இரண்டாவது டெஸ்ட் சிட்டகாங்கில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 587 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 8 விக்கெட்டுக்கு 409 ரன்கள் எடுத்திருந்தது.

மெண்டிஸ் துல்லியம்:

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணியின் மகமதுல்லா (30), அல்–அமின் ஹொசைன் (9), மெண்டிஸ் ‘சுழலில்’ பெவிலியன் திரும்பினர். முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 426 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.  இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட் கைப்பற்றினார்.

சங்ககரா அபாரம்:

பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னே (15), குசால் சில்வா (29), ஜெயவர்தனா (11) ஏமாற்றினர். பின் இணைந்த சங்ககரா, சண்டிமால் ஜோடி அசத்தியது. சங்ககரா, டெஸ்ட் அரங்கில் தனது 35வது சதத்தை பதிவு செய்தார். நான்காவது விக்கெட்டுக்கு 145 ரன்கள் சேர்த்த போது, சோஹக் காஜி பந்தில் சங்ககரா (105) அவுட்டானார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால், டெஸ்ட் வரலாற்றில் தனது 3வது சதம் அடித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. சண்டிமால் (100), கேப்டன் மாத்யூஸ் (43) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கு:

பின், 467 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கோடு வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து, 455 ரன்கள் பின்தங்கி இருந்தது. தமிம் இக்பால் (7), ஷம்சுர் ரஹ்மான் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால், இலங்கை அணி பந்துவீச்சை, வங்கதேச பேட்ஸ்மேன்கள் சமாளித்தால் மட்டுமே, தோல்வியில் இருந்து தப்ப முடியும்.

இரண்டாவது வீரர்

முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்த இலங்கையின் சங்ககரா, 2வது இன்னிங்சில் 105 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில், ஒரே போட்டியில், ‘டிரிபிள் செஞ்சுரி’ + சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக 1990ல் லார்ட்சில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், இங்கிலாந்து வீரர் கிரகாம் கூச், முதல் இன்னிங்சில் 333, 2வது இன்னிங்சில் 123 ரன்கள் எடுத்தார்.

மூன்றாவது இடம்

முதல் இன்னிங்சில் 319 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் சங்ககரா, இரண்டாவது இன்னிங்சில் 105 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒரு டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், மூன்றாவது இடம் பிடித்தார். இவர், இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 424 ரன்கள் எடுத்தார். முதலிரண்டு இடங்களில் இங்கிலாந்தின் கிரகாம் கூச் (333+123=456 ரன், எதிர்–இந்தியா, இடம்–லார்ட்ஸ், 1990), ஆஸ்திரேலியாவின் மார்க் டெய்லர் (334*+92=426 ரன், எதிர்–பாகிஸ்தான், இடம்–பெஷாவர், 1998)

ஐந்தாவது இடம்

சிட்டகாங் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இலங்கை வீரர் சங்ககரா, டெஸ்ட் அரங்கில் தனது 35வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (34 சதம்), வெஸ்ட் இண்டீசின் லாராவை (34 சதம்) பின்தள்ளி 5வது இடம் பிடித்தார். முதல் நான்கு இடங்களில் இந்தியாவின் சச்சின் (51 சதம்), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (45), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41), இந்தியாவின் டிராவிட் (36) ஆகியோர் உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/02/1391793135/Sangakkarasrilanka.html

 

  • தொடங்கியவர்

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை

இலங்­கை -­ பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடரை இலங்கை அணி 1-0 என கைப்பற்றியது.

பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அவ் அணியுடன் 2 டெஸ்ட், 2 இரு­பது -20 மற்றும் 3 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

மிர்பூரில் இடம்பெற்ற  முதலாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் இலங்கை அணி முன்னிலை பெற்றது.

அந்தவகையில் கடந்த 4 ஆம் திகதி சிட்டகொங்கில் ஆரம்பமாகிய இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைய இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இப் போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடரின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/?q=node/361294

  • தொடங்கியவர்

பங்களாதேஷிடம் போராடி வென்றது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் இருபது-20 போட்டியில் இலங்கை அணி 2 ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகளை கொண்ட இருபது-20 தொடரின் இன்றைய முதல் போட்டி சிட்டங்கொங்கில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க குலசேகர 31 ஓட்டங்களை பெற்றார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் மோர்டாசா, சகில் ஹல் ஹசான் மற்றும் அரபாத் சனி ஆகியோர்; தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 169 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று இரு ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ் அணியில் தமிம் இக்பால் 30, ரஹ்மான் 22, அனாமுல் 58, சகிபுல் ஹசான் 26 ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் குலசேகர இரு விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு போட்டியின் ஆட்டநாயகனாக குசேல் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/?q=node/361411
 

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் அணியை போராடி வென்ற இலங்கை தொடரை கைப்பற்றியது

சிட்டகொங் மைதானத்தில் இன்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு- 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்தவகையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன் அடிப்படையில் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது பங்களாதேஷ். இவ்வணியில் அனாமுல் ஹக் 24 ஓட்டங்களையும் ஸபீர் ஹ{சைன் 26 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற குலகேசர மற்றும் சச்சித்திர சேனாநாயக ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம் முடியாத இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன ஆட்டமிழந்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க டில்சான் 3, சந்திமால் 3, ஏஞ்சலோ பெரேரா 4, மெத்தியூஸ் 2, குலசேகர 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க குமார் சங்கக்கார மற்றும் திசர பெரேரா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இலங்கை போராடி வெற்றி பெற்றது.

குமார் சங்கக்கார 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை பெற்றார். மேலும் இறுதிப் பந்தில் வெற்றிக்கு இரு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது சச்சித்திர சேனாநாயக நான்கு ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


இப்போட்டியின் ஆட்டநாயகனாக திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாக நுவான் குலசேகல தெரிவு செய்யப்பட்டார்.

இத்தொடரை பொறுத்த வரையில் பங்களாதேஷ் அணி தரவரிசையில் பத்தாவது இடத்தில் காணப்பட்டாலும் கூட முதலாவது இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு சவாலளிக்கு வகையில் சமபலத்துடன் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/?q=node/361454

  • தொடங்கியவர்

போராடி வெற்றி பெற்றது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. வெற்றியின் விளிம்பு வரை வந்த பங்களாதேஷ் 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்நிலையில் மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணியும் முஸ்பிகுர் ரஹீம் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் டாக்காவில் இன்று பலப்பரீட்சை நடத்தின.

டாக்காவில் மழை பெய்தமையால் போட்டி தாமதமாகி ஆரம்பமானதோடு 43 ஓவர்;களாக மட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பங்களாதேஷ் முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 180 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டில்சான 3 ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க அடுத்து வந்த சங்கக்காரவும் 8 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். மறுமுனையில் இருந்த மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசேல் ஜனித் பெரேரா 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய சந்திமால் 13, அசான் பிரியன்ஜன் 6, மெத்தியூஸ் 3, கித்துருவன் விதானகே 7, குலசேகல 0, என சொற்ப ஓட்டங்களுடன் பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு தாக்குபிடிக்காமல் வந்த வேகத்தில் அரங்கு திரும்பினர்.

இதன்போது களம்கண்ட திசரபெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாட இவருடன் கைகோர்த்த சச்சித்திர சேனாநாயக 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களம் கண்ட மாலிங்கவும் ஓட்டம் எதனையும் பெறாது ஆட்டமிழக்க அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்ததோடு அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ரூபெல் ஹ{சைன், சகிப் ஹல் ஹசான் மற்றும் அரபாத் சனி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 181 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்று 13 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அனாமுல் ஹக் மாலிங்க வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.  பின்னர் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சம்சூர் ரஹ்மானுடன் முமினுள் ஹக் கைகோர்த்தார். இருவரும் நிதானமாக துடுப்பெடுத்தாடி 79 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது முமினுள் ஹக்  44 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார். அரைச் சதத்தை கடந்து நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த சம்சூர் ரஹ்மான் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சகிப் ஹல் ஹசன் 3, நாசீர் ஹ{சைன் 8, மஹமுதுல்லா 0 என சொற்ப ஓட்டங்களுடன் ஏமாற்றமளிக்க களத்தில் இருந்த அணித் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் நிதானமாக துடுப்பெடுத்தாடிய போதும் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் பங்களாதேஷ் அணி 39.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மெத்தியூஸ் 3 விக்கெட்டுகளையும், சச்சித்திர சேனாநாயக இரு விக்கெட்டுகளையும் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட அணியின் வீரர் திசர பெரேரா போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/?q=node/361534

  • தொடங்கியவர்

61 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இலங்கை


பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டாவது போட்டியில் சங்கக்காரவின் சதத்துடன் 61 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி டாக்காவில் இடம்பெற்றது.

பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ் அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டுள்ள நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய டில்சான் மற்றும் குசேல் ஜனித் பெரேரா ஆகியோர் தலா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க அடுத்த களமிறங்கிய சங்கக்காரவுடன் சந்திமால் இணைந்தார்.

சங்கக்கார நிதானமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்க சந்திமால் 9 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

பின்னர் களத்தில் இருந்த சங்கக்காரவுடன் அசான் பிரியன்ஜன் கைகோர்த்தார். இருவரும் நான்காவது விக்கெட்டுக்காக துடுப்பெடுத்தாடி இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்றிருந்த போது அரைச் சதத்தை கடந்த பிரியன்ஜன் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் மெத்தியூஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாட மறுமுனையில் இருந்த சங்கக்கார 102 பந்துகளில் 102 ஓட்டங்களை கடந்து ஒருநாள் அரங்கில் 17 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

சங்கக்கார 128 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க அதிரடியில் மிரட்டிய மெத்தியூஸ் 39 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது களத்தில் இருந்தால். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய திசர பெரேரா இன்றைய போட்டியில் எவ்வித ஓட்டங்களுடன் பெறாது ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் ரூபெல் ஹ{சைன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 290 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் 43 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 228 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 61 ஓட்டங்களால் தோல்வியை தழுவியதோடு தொடரையும் பறிகொடுத்தது.


அணியின் துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் மாத்திரம் 79 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து
ஏமாற்றமளித்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க, சேனாநாயக, திசர பெரேரா மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

துடுப்பாட்டத்தில் அசத்திய நட்டசத்திர வீரர் குமார் சங்கக்கார போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

 

http://www.virakesari.lk/?q=node/361604

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சங்கா, டில்சான் நீக்கம்

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டியில் டில்சான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக டில்சான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக திரிமன்னே இணைக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த டில்சான் இன்று நாடு திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம்திகதி பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகளில் மஹேல ஜெயவர்தன மற்றும் சத்துரங்க டி சில்வா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.
http://www.virakesari.lk/?q=node/361615

  • தொடங்கியவர்

கோப்பை வென்றது இலங்கை: குசால் பெரேரா சதம்
பிப்ரவரி 22, 2014.
 

 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், குசால் பெரேரா சதம் அடித்து கைகொடுக்க, இலங்கை அணி  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி, கோப்பை வென்றது. சொந்த மண்ணில் சோபிக்கத்தவறிய வங்கதேச அணி, ‘ஹாட்ரிக்’ தோல்வியை பதிவு செய்தது.     

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இலங்கை அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். முதன்முறையாக தில்ஷன், சங்ககரா, மகிளா ஜெயவர்தனா இல்லாமல் இலங்கை அணி களமிறங்கியது.           

மோமினுல் அரைசதம்: வங்கதேச அணிக்கு அனாமுல் ஹக் (2) ஏமாற்றினார். மற்றொரு துவக்க வீரர் ஷம்சுர் ரஹ்மான் (25) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மோமினுல் ஹக், ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 60 ரன்கள் எடுத்த போது ‘ரன்-அவுட்’ ஆனார். ‘மிடில்-ஆர்டரில்’ வந்த கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (30), நயீம் இஸ்லாம் (32), நாசிர் ஹொசைன் (38) ஓரளவு கைகொடுத்தனர். மகமதுல்லா (5) ஏமாற்றினார். மூன்று சிக்சர் விளாசிய சோஹக் காஜி (23) ஆறுதல் அளித்தார்.           

வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்தது. ஷபியுல் இஸ்லாம் (15), அராபத் சன்னி (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் தமிகா பிரசாத் 3, சுரங்கா லக்மல் 2 விக்கெட் கைப்பற்றினர்.      

குசால் சதம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு லஹிரு திரிமன்னே (18) ஏமாற்றினார். அடுத்து வந்த விதானகே (9) நிலைக்கவில்லை. பின் இணைந்த குசால் பெரேரா, சண்டிமால் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. அபாரமாக ஆடிய குசால் பெரேரா, ஒருநாள் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால், 11வது அரைசதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்த போது குசால் பெரேரா (106) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய சண்டிமால் (64) நம்பிக்கை தந்தார்.     

நயீம் இஸ்லாம் வீசிய 48வது ஓவரில், சிக்சர் அடித்த கேப்டன் மாத்யூஸ், அணியின் வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மாத்யூஸ் (20), ஆஷான் பிரியன்ஜன் (22) அவுட்டாகாமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ருபெல் ஹொசைன், மகமதுல்லா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.     

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் குசால் பெரேரா வென்றார்.

 

 

http://sports.dinamalar.com/2014/02/1393089384/KusalPereraSriLankaBangladeshOneDayCricket.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.