Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயிகளின் உயர்வுக்காக பாடுபடுவோம்; விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் உறுதியளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் உள்ள விவசாயிகள் பொருளாதார நிலையில் உயர்வடைந்தால் தான் நாடு முன்னேற்றம்பெறும் எனவே அந்த முன்னேற்றத்திற்கு நிட்சயமாக  நாங்கள் கைகொடுப்போம் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்தார்.

உள்ளூர் உருளைக்கிழங்கினை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு  (சதோச) விற்பனை செய்யும் நிகழ்வு நீர்வேலி கரந்தன் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடுபட்ட விவசாயிகளின் முகத்தில் இன்று சிரிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்களின் உயர்வுக்கு நாம் கட்சி பேதமின்றி உழைப்போம்.

விதை கிழங்குகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டிருந்தேன். அதன் போது
உருளைக்கிழங்கை விற்கும் போது ஒரு நியாயமான விலையை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் அதேபோல உள்ளூர் அறுவடை செய்யும் காலத்தில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கான தீர்வையினை உயர்த்துவதற்கான வாய்ப்பு இருக்குமாக இருந்தால் உள்ளூர் செய்கைகளுக்கான கேள்வி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் எங்களிடம்  கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.


இருப்பினும் நினைத்ததற்கு மாறாக சில நிர்வாக ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டன. எனினும் முன்னர் ஒரு காலத்தில் மாகாணத்திற்குரியவையாக இருந்த கமநலசேவைகள் திணைக்களங்கள்  தற்போது மத்திய அரசின் பொருளாதார அமைச்சின் கீழ் பொருத்தமற்றவிதத்தில் இருந்து வருகின்றன.

எனவே விவசாயிகளின் தேவைகளையும் ஒரு புறம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் போதும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து பொருளாதார ரீதியில் மேலும் உயர்வடைவதற்கும் வடக்கு மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழ் கமநலசேவைகள் கொண்டுவரப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.

எனினும் நாம் அதற்கான முயற்சிகளில் நிட்சயமாக ஈடுபடுவோம். ஏற்கனவே அதற்கான சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் தற்போது உள்ள நடைமுறையினால் எமது விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உண்மையான விடயம். அண்மையில் உருளைக்கிழங்கினை விவசாயிகள் அறுவடை செய்த பின்னர் தாங்களாகவே குறைந்த விலைக்கும் 10 வீத கழிவுடனும் விற்பனை செய்துள்ளனர்.

எனினும் இவர்களால் அறுவடை செய்து நீண்டநாட்களுக்கு வைத்திருக்க முடியாது. எனவே குறித்த விடயம் தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இருப்பினும் இது மத்திய அரசின் திட்டம் என்பதால் எமது விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு கட்சி பேதங்கள் இன்றி வடக்கு மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

எனினும் முன்னர் சதோச நிறுவனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் கிலோ ஒன்றிற்கு 65ரூபா வீதம் கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையிலேயே வழங்குவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டியமையால் 70 ரூபாவிற்கு ஒரு கிலோ உருளைக்கிழங்கினை குறித்த நிறுவனத்திற்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன் கொள்வனவில் 10 வீத கழிவும் அறவிடப்படவில்லை. கிழங்கு கொடுக்கப்படும் சாக்கிற்கும் 30 ரூபா வழங்குவதாகவும் சதொச நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
 

எனவே இது எமது விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பான சூழல் .மனம் தளராது அதிகளவில் இனிவரும் காலங்களில் ஈடுபட வேண்டும். இன்னும் அதிக விலைக்கு விற்பதற்கும் நாம் வழிஏற்படுத்திக் கொடுப்போம்.

நான் சிறுவனாக இருந்த பொழுது எமது ஊரில் கார் ஓட்டிச் செல்பவர்கள் மிளகாய்  கன்று வைத்திருந்தவர்கள்  தான் எனவே அந்த அளவிற்கு எமது விவசாயிகள் பொருளாதார ரீதியில் உயர்வடைந்திருந்தனர். இன்று  காலம் மாறி மிகவும் கஸ்ரமான நிலைக்கும் வங்கிகளில் கடன்வாங்கி தள்ளாடும் நிலைக்கும்  போயுள்ளனர்.

விவசாயிகள் நிமிர்ந்தால் தான் எமது நாடும் முன்னேறும். எனவே நிட்சயமாக நாங்கள் அவர்களுக்குக் கைகொடுப்போம் என்றார்.
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=540312619503276823#sthash.ICzRzYhV.dpuf

Edited by பிழம்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.