Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்மில் பலர் அடுத்த தேர்­த­லுக்­கான வேலைகளை செய்­கின்­றார்­களே தவிர - அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக இல்லை! - சி.வி. விக்கினேஸ்வரன்

Featured Replies

 வட மாகாண தமிழ் பேசும் மக்கள் இன வேறு­பா­டின்றி மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் வாழ்ந்து வரு­ப­வர்கள் என உலகம் எம்மை போற்றும் அள­விற்கு எமது நட­வ­டிக்­கைகள் இருக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையில் அமைய அடிப்படையில் பணியாற்றிய அட்ட வணைப்படுத்தப்படாத பதவி அணி யினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடை பெற்றது;. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 

அங்கு அவர் தொடர்ந்து உரையற்றுகையில்:

அமைச்சர் ரிசாட்டும் அவ­ரது இளைய சகோ­தரர் பாணியில் எம் எல்­லோ­ருக்கும் நல்­லதோர் எடுத்­துக்­காட்­டாக இருப்பார் என எண்­ணு­கின்றேன்.

கத்­தோ­லிக்க – முஸ்லிம் பிரச்­சினை. தமிழர், முஸ்லிம் பிரச்­சனை, சிங்­க­ளவர் முஸ்லிம் பிரச்­ச­ினைகள், சிங்­க­ளவர், தமிழர் பிரச்­ச­ினைகள் என்று வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­களில் பல­வி­த­மான பிரச்­சி­னைகள் எழுந்து வரு­வதை நாம் காண்­கின்றோம்.

எமது மத்­திய அரசின் அமைச்சர் ரிசாட் பதி­யுதீன் நினைத்தால் அவற்றை நீதியும் நியா­ய­மு­மான முறையில் தீர்த்து வைக்­கலாம் என்­பது எனது கருத்து. அதற்கு காரணம் உல­கத்தில் உள்ள பலம் வாய்ந்த 500 முஸ்­லிம்­களில் அவ­ரை­யும் ஒரு­வ­ராக தெரிவு செய்­துள்­ளனர். எனவே அவ­ரு­டைய செல்­வாக்கை அதி­லி­ருந்து ஊகித்­துக்­கொள்­ளலாம்.

இன்று இந்த தொழி­லா­ளர்­களின் பிரச்சினை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு நாம் ஒன்­று­சேர்ந்­த­துபோல் தொடர்ந்தும் பல பிரச்­ச­ினை­களை தீர்த்து வைக்க அமைச்சர் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

இன்­றைய கால­கட்­டத்தல் அடுத்த தேர்­த­லுக்­காக எம்மில் பலர் வேலை செய்­கின்­றார்­களே தவிர இந்த தேர்­தலில் எமக்கு வாக்­க­ளித்­த­வா­க­ளுக்கு நாம் அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக எமது நட­வ­டிக்­கைகள் அமை­கின்­றதா என்­பதில் சந்­தே­க­மா­கவே உள்­ளது.

ஜன­வரி இரண்டாம் திகதி ஜனா­தி­ப­தியை சந்­தித்­த­போது ஊழி­யர்­களின் நிய­ம­னங்கள் தொடர்பில் பொது­வாக ஆரா­ய்ந்­தி­ருந்தேன். அதற்கு அவர் தகை­மைகள் குறைந்­த­வர்கள் முன்னர் வேலைக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்­தாலும் உரிய தகை­மை­களை தற்­போது பெற­வேண்டும் என கூறி­யி­ருந்தார். தகை­மைகள் குறைந்­த­வர்க­ளையும் தகை­மைகள் கூடி­ய­வர்­க­ளையும் ஒரே சேவையில் வைத்­தி­ருக்க முடி­யாது எனவும் அவர் கூறி­யி­ருந்தார்.

எனினும் மேற்­படி குறைந்த தகை­மைகள் என கூறப்­ப­டு­ப­வர்கள் பல­வ­ருட கால அனு­ப­வத்தின் நிமிர்த்தம் தமது தகை­மை­களை அனு­பவ ரீதி­யாக கூட்­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­ப­தனை எடுத்­துக்­காட்டி ஒரு குறிப்­பிட்ட காலத்­தினுள் ஒப்­பந்த தொழி­லா­ளர்­க­ளாக கட­மை­யாற்­றி­ய­வர்­களை நிரந்­தர சேவைக்குள் உள்­வாங்க வேண்டும் என கூறினேன். இதன் நிமிர்த்தம் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு தனது செய­லா­ள­ருக்கு அறி­வுரை வழங்­கினார். இவ் விடயம் எமது ஆளு­ன­ருக்கும் தெரியப்­ப­டுத்­தப்­பட்­டது என அறி­கின்றேன்.

இதன்­ப­டியே தொழிற்­சங்க போராட்­டமும் சென்ற மாதம் 7 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்­டது என அறி­கின்றேன். ஏனெனில் இந்த கால­கட்­டத்தில் தான் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாலும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளாலும் இந்த ஆர்ப்­பாட்டம் சம்­பந்­த­மாக எனக்கு தெரியப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு எமது வட மாகாண சுகா­தார அமைச்­சரை வேண்­டிக்­கொண்டேன். அதற்கு அமைச்சர் கால­தா­ம­த­மின்றி மறு­நாளே எமது அமைச்­சர்கள் கூட்­டத்தில் இது பற்றி தெரிவித்து அதற்கு மறுநாள் மாகா­ண­சபை கூட்­டத்தில் பத­வியை நிரந்­த­ர­மாக்­கு­வ­தற்கு பிரே­ரணை கொண்டு வந்­தி­ருந்தார். இப் பிரே­ரணை ஆளும் கட்சி எதிர்க்­கட்சி என்ற பாகு­பா­டின்றி நிறை­வேற்­றப்­பட்டு ஆளு­னரின் ஒப்­பு­த­லையும் பெற்­றது. ஆளு­ன­ருக்கு இது சார்­பாக நன்­றியை தெரிவித்­துக்­கொள்­கின்றேன்.

அத்­துடன் இன்­றைய நிகழ் வில் அமைச்சர் ரிசாட்பதி­யுதீன் பங்­கேற்­றி­ருப்­பது மன மகிழ்ச் சியை தருகின்றது. அவரது சகோதரர் வட மாகாண சபையில் எமக்கு பலவித அனுசரணை களை வழங்கி வருகின்றார். அண்மையில் மாகாண சபையில் நாம் கொண்டு வந்த பிரேரணைகள் சிலவற்றுக்கு அவை திருத்தப்பட்ட பின் தனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளார். அந்தவகையில் தனது இளைய சகோதரர் போன்றே அமைச்சரும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார் என எண்ணுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=102997&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.