Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் சாபக்கேடு - செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் சாபக்கேடு - செல்வரட்னம் சிறிதரன்:-

08 பெப்ரவரி 2014

இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக முப்பது வருடங்களாக மோசமான ஒரு யுத்த நிலைமை நீடித்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். எண்ணற்றவர்கள் அவயவங்களை இழந்தும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இதைவிட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வசித்து வந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் அடியோடு பெயர்த்து வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்டபோதும், யுத்தச் சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் பல்வகையான அவமானங்களுக்கு ஆளாகி சுயகௌரவம், தன்மானம் என்வற்றை இழக்கவும் நேரிட்டிருந்தது. இவ்வாறான கொடுமைகளுகு;கு மத்தியில் இந்த இடப்பெயர்வு ஒரு சமூகத்தின் கட்டமைப்பையே குலைத்து நாசமாக்கியிருக்கின்றது.

பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள இந்த யுத்த கால வடுக்கள் சாதாரணமானவையல்ல. அந்தப் பாதிப்பை அனுபவித்தவர்களினால் மட்டுமே, அவற்றினால் ஏற்பட்டுள்ள துன்பங்களையம் கஸ்டங்களையும் புரிந்து கொள்ள முடியும். இந்த ரணங்கள் இலகுவில் ஆறிவிடமாட்டாது. அதற்குக் காலம் தேவை. நீண்டகாலம் தேவை.

இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நன்கு உணர்ந்திருக்கின்றார் போல தெரிகின்றது. உணர்ந்தது மட்டுமல்லாமல், இந்த யுத்த வடுக்கள் ஆறுவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் தேவை என்றும் அவர் கூறியிருக்கின்றார். அது மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும், யுத்தம் முடிவடைந்ததன் பி;ன்னர் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்துவதற்கான கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்திருந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இன்னும் கால அவகாசம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். இதற்கு இன்னும் ஒரு வருடம் செல்லும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க யுத்த மோதல்கள் மோசமாக இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்டவரல்ல. யுத்தம் நடைபெற்ற போது வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஓர் உயர்நிலை அதிகாரியாகவோ அல்லது சாதாரண அரசாங்க அதிகரிரயாகவோகூட அவர் இந்தப் பிரதேசங்களில் வாழ்ந்தவரல்ல. ஆனால் யுத்த வடுக்கள் ஆறுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும். எவ்வளவு காலம் தேவை என்பதை அவர் கூறியிருக்கின்றார்.

நல்லிணக்கத்திற்கான முயற்சியின் நிலைமை

அடுத்த மாதம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு முகம் கொடுப்பதற்குரிய அரசுக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்கும் முயற்சியில் அராங்கத் தரப்பில் அவர் இறங்கியிருக்கின்றார்;. அதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதேபோன்று அரசாங்கமும் பல்வேறு வழிகளில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது. அந்த வகையில் இறுதி யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்பதைக் காட்டுவதற்கும் இராணுவத்த்pன் நடவடிக்கைகள் நியாயமானவை என்பதைத் தெளிவுபடுத்துவதற்குமாக அரசாங்கம் காணொளி ஆவணம் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அந்த ஆவணத்தி;ல் கருத்துரைத்தபோதே, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க யுத்த வடுக்கள் மறைவதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் தேவை என சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று பறைசாட்டப்பட்டு, விடுதலைப்புலிகளுடன் பொது மக்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகத் தமிழ் மக்களுக்கு எதிராகவே இறுதி யுத்தம் தொடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த யத்தத்த்pல் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று அரச புள்ளிவிபரத் தகவல்களை ஆதாரம் காட்டி, மன்னார் ஆயர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள். யுத்த மோதல்களின் போது, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நீலிக் கண்ணீர் வடித்து, யுத்த பிரதேசத்தில் மோதல் தவிர்ப்பு பகுதி – நோ பயர் ஸோன் என்ற பாதுகாப்பு வலயத்தை அரசு உருவாக்கியிருந்தது. ஆனால், அரச தரப்பினரால், விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதாகக் கூறி, எறிகணைகள் மழையென அந்தப் பிரதேசத்தின் உள்ளே பொழியப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கணக்கு வழக்கின்றி அங்க மடிந்து போனார்கள்.

நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, வைத்தியாசலைகள் மீது வான் தாக்குதல்களும் எறிகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. பொதுமக்கள் என்றும் பாராமல் நிராயுதபாணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது என்றெல்லாம் போர்முனையில் கண்கண்ட சாட்சிகளாக இருந்து உயிர் தப்பியுள்ளவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால், இந்த யுத்த வடுக்களில் இருந்து மீள்வதற்கு இன்னும் பத்து வருடங்கள் தேவையென்று யுத்தம் நடத்தியவர்கள் சார்பிலிருந்து கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. யுத்தத்தில் சிக்கி, யுத்த அழிவுகளை நேரில் கண்டு மனம் பதைபதைத்துப் போய் இன்னும் அந்த மனத்தாக்கங்கள், மன வடுக்களில் இருந்து மீளாதவர்கள் இந்த வடுக்கள் எப்போது தீரம் என்பதுபற்றி கருத்து வெளியிடவில்லை. யுத்த வடுக்களைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் மௌனமாக இருக்கின்றார்கள். ஆனால் உலக நாடுகளின் ஆதரவோடு மோசமான யுத்த தாக்குதல்களைத் தொடுத்து, அதில் வெற்றி கண்ட தரப்பினர் யுத்த வடுக்கள் பற்றி பேசுகின்றார்கள். யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரச தரப்பு முயற்சிகளின் இலட்சணம் இப்படித்தான் இருக்கின்றது.

வலிகாமம் வடக்கின் மீள்குடியேற்றம்

இறுதி யுத்தத்தினால் மட்டுமல்லாமல், அதற்கு முந்திய காலப்பகுதியிலும் யுத்தச் சூழல் காரணமாக வடபகுதி மக்கள் மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தார்கள். அவற்றில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் இடப்பெயர்வு முக்கியமானது. வலிகாமம் வடக்கு இடம்பெயர்வு என்று சொல்வதிலும் பார்க்க, அந்த மக்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டார்கள் என்பதே சரியானதாகும்.

யாழ் குடாநாட்டின் வளம் கொழிக்கும் பிரதேசமாகிய வலிகாமம் வடக்கில் அமைந்துள்ள பலாலி விமனப்படைத்தளம் மற்றும் காங்கேசன்துறை கடற்படைத் தளம் என்பவற்றின் பாதுகாப்புக்காக அதன் அயலில் உள்ள மிகவும் பரந்தவொரு பிரதேசமாகிய வலிகாமம் வடக்கில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்டார்கள். யாழ் குடாநாட்டில் நிலைகொண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்த படையினருக்குத் தேவையான வளங்களை விநியோக்கின்ற கேந்திர நிலையங்களாக அப்போது காங்கேசன்துறை துறைமுகமும், பலாலி விமானப்படைத் தளமுமே விளங்கின. கடல் வழியாக காங்கேசன்துறைக்கும், வான் வழியாக பலாலி விமான தளத்தி;ற்கும் இராணுவத்திற்குத் தேவையான உணவு மற்றும் அததியாவசிய பொருட்கள் என்பவற்றுடன், அவர்களுக்கான இராணுவ தளபாடங்கள், வெடிப்பொருட்கள் ஆயுதங்கள் என்பன கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதியில் இருந்து விநியோகிக்கப்பட்டு வந்தன.

இராணுவத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்காக அவர்களது முகாம்களைத் தாக்கியதுடன், இராணுவத்தினரின் நடமாட்டங்களின் போது அவர்களை வழிமறித்தும் தாக்குதல்களைத் தொடுத்து வந்த விடுதலைப்புலிகள் இராணுவத்தினருக்கான விநியோக மார்க்கங்கள், விநியோகத் தளங்களையும் தாக்கத் தொடங்கியிருந்தார்கள். இதன் காரணமாக காங்கேசன்துறை துறைமுகப் பகுதியையும், பலாலி விமானத்தளப் பகுதியையும் உள்ளடக்;கிய பரந்தவொரு பிரதேசத்தை அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்து அங்கிருந்த மக்களை அரசு வெளியேற்றியிருந்தது.

இவ்வாறு வலிகாமம் வடக்குப் பிரதேச மக்கள் வெளியேற்றப்பட்டு சுமார் இருபது வருடங்களின் பின்னர் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், யுத்தம் முடிவடைந்து இப்போது ஐந்து வருடங்களாகப் போகின்றது. இன்னும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தை முழுமையாக அரசாங்கம் பொதுமக்களிடம் திருப்பிக் கொடுக்கவில்லை. இப்போது அதியுயர் பாதுகாப்பு வலயம் என்று எதுவுமே கிடையாது என்று அடித்துக் கூறிக்கொண்டே, வலிகாமம் வடக்கு பிரதேச்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் எவரையும் செல்லவிடாமல் தடை செய்திருக்கின்றது. பத்தாயிரம் குடும்பங்களின் வாழ் நிலமாகிய அந்தப் பிரதேசத்தில் இராணுவத்தினரை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்காக, அங்குள்ள பொதுக்கட்டிடங்கள், பொதுமக்களின் வீடுகள் என்பவற்றை நிர்மூலமாக்கி, இராணுவத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பாக இடம் மாற்றம் பெற்றுள்ள இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களைத் தந்தால், அந்த மக்களை மீள்குடியேற்ற முடியும் என்று அறிவித்திருக்கின்றார்.

அஙகு இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டிய குடும்பங்களின் சரியான எண்ணிக்கை மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்து முகாம்களில் இருப்பவர்கள், உறவினர் நண்பர்களது வீடுகளில் இருப்பவர்கள், இடம்பெயர்ந்து உள் மாவட்டத்தில் இருப்பவர்கள். இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களில் வாழ்ந்து வருபவர்கள், உண்மையாகவே சொந்தக் காணிகளுக்குத் திரும்பி வருவதற்குத் தயாராக இருப்பவர்கள், மீள்குடியேற விரும்பாதவர்கள் என பலதரப்பட்ட வகையில் இடம்பெயர்ந்தவர்களின் விபரங்களைத் திரட்டி தகவல் தந்தால் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும், பலாலி விமானத்தளம் ஆகியவற்றின் தேவைக்குப் போக மிஞ்சிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்ற முடியும் என்று இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது யாழ் மாவட்ட இராணுவ தளபதி தெரிவித்திருக்கின்றார்.

அது மட்டுமல்ல. வலி வடக்கிலிருந்து இடம்பெரய்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதால், மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ, போராட்டங்களை நடத்தவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே விடுக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் சரியான முறையில் செவிசாய்க்காத காரதணத்த்pனால் தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. அந்தப் போராட்டங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போயிருக்கின்றது. அதைவிட, தங்களைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காகத் தமது காணிகளைத் திருப்பி;த் தரவேண்டும் எனக்கோரி ஆயிரக்கணக்கானவர்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்திருக்கின்றார்கள். இந்த வழக்குகள் நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கின்றன. இதைவிட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடம்பெயர்ந்த மக்களைப் படிப்படியாக அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே அந்தக் காணிகளுக்குச் சொந்தம் கொண்டாடி இராணுவத்தினர் விடாப்பிடியாக அங்கு நிலைகொண்டிருக்கின்றார்கள்.

தரவுகள் ஆவணப் பதிவுகள் அவசியம்

யுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற மாறாத வடுக்கள், பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்கள், இன்னும் மீள்குடியேற்றப்பட வேண்டிய இடம்பெரய்ந்த மக்களின் சரியான எண்ணிக்கை அவர்கள் பற்றிய ஏனைய விபரங்கள் பற்றிய சரியான தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

யுத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் பற்றிய உண்மையான தகவல்கள் பற்றிய ஆவணங்கள் இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை. யுத்த வெற்றியை அரசியல் முதலீடாகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற இந்த அரசாங்கம் அந்த வெற்றிக்குப் பாதிப்பு ஏற்படுத்தத்தக்க வகையிலான யுத்த பாதிப்புகள் பற்றிய உண்மையான தகவல்களை வெளிப்படுத்த விரும்பமாட்டாது. எனவே பாதிப்புகள் பற்றிய உண்மையான விபரங்கள் அரசாங்கத்திடம் இருக்கும் என்று எதிர்பார்;க்கவும் முடியாது.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், அவர்களுக்காகப் பணியாற்றுகின்ற பல்வேறு நிறுவனங்கள், அமைப்புக்கள் மற்றும், அந்த மக்களின் அரசியல் தலைமைகள் இந்த விபரங்களைத் திரட்டியிருக்க வேண்டும். இதுபற்றிய ஆவணங்கள், விவரணங்கள் என காலத்தின் தேவைக்கு எற்ற வகையில் அவர்கள் தமது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க பணியை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் இதுவரையிலும் மேற்கொண்டதாகத் தகவல் இல்லை.

இறுதி யுததத்தின் போது என்ன நடந்தது, என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன, இறுதி யுத்தத்திற்கு முன்னர் ஏற்பட்டிருந்த இழப்புகள் என்ன மாதிரியானவை அவற்றின் உண்மையான விபரங்கள் என்ன என்பது பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் தர்பபில் எதுவுமே இல்லையென்று சொல்லும் அளவிலேயே நிலைமை காணப்படுகின்றது.

தங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டிருந்தது என்பதை சனல் 4, சிஎன்என், பிபிசி போன்ற சர்வதேச ஊடக நிறுவனங்களிடமிருந்தே அறிந்து கொள்ள வேண்டிய அவல நிலையிலேயே போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேச மக்களும், அவர்கள் சார்ந்த அமைப்புக்களும், அந்த மக்களின் அரசியல் தலைமைகளும் இருக்கின்றன. இது பாரதூரமானது. கவலக்குரியது. கவலைக்குரியது மட்டுமல்ல, ஒரு வகையில் கண்டனத்திற்கும் உரியது என்றே சொல்ல வேண்டும்.

இலங்கை அரசும் அதன் ஆயுதப்;படைகளும் இறுதி யுத்தத்தின்போது மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தனர், சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய வகையில் நடந்து கொண்டிருந்தனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பக்கள், ஐநா மன்றம் மட்டுமல்லாமல், சர்வதேச நாடுகளும் குற்றம் சுமத்தியிருக்கின்றன. அமெரிக்க தொடரச்சியாக கடந்த இரண்டு வருடங்களாக இதனை மையப்படுத்தி ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வந்திருக்கின்றது. மூன்றாவது தடவையாக இந்த வருடமும் இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றது.

ஆனால் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பி;ல் இருந்து இதுவிடயத்தில் போதிய பங்களிப்பு செய்யப்படவில்லை என்றே குறிப்பிட வேண்டியிருக்கின்றது. ஏனெனில் கடந்த வருடங்களில் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் என்றிருந்த குற்றச்சாட்டுக்கள், இனப்படுகொலை இடம்பெற்றிருக்கின்றது என்று சுட்டி;காட்டும் அளவிற்கு முன்னே;றறமடைந்திருக்கின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைவர்களோ இனப்படுகொலை நடைபெற்றது என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்கே அஞ்சுகின்றார்கள். அவ்வாறு குறிப்பிடுவதென்றால் அதற்குப் போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும். அவ்வாறான ஆதாரங்கள் இல்லாமல் அவ்வாறு குறிப்பிட முடியாது என கூறுகின்றார்கள். ஏனெனில் இனப்படுகொலை என்பது சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும் என்றும் அவர்கள் அச்சமூட்டியிருக்கின்றார்கள்.
முப்பது வருடங்களாக இடம்பெற்ற மோசமான யுத்தத்தின்போது, தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ள மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றதா இல்லையா என்பதை ஆராயந்து பார்ப்பதற்குக் கூட பாதிக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைவர்கள் ஆயத்தமாக இருந்திருக்கவில்லை.

இலங்கை அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஆறு தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு வந்தள்ளார்கள். படிப்படியாக அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரிக்கப்பட்டு வந்து அவர்களின் நடமர்டுதவற்கான சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், உயிர்வாழ்வதற்கான சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் யார் எவர் என்றில்லாமல் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படடி;ருக்கின்றார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், குடிமக்கள் என்ற இறைமையுடைய தமிழ் மக்களின் பூர்வீக காணி நிலங்கள் சட்டத்தின் துணைகொண்டு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த பிரதேசங்களில் அவர்களுடைய கலை கலாசார, மத உரிமைகள் வெளிப்படையாகவே பாதிக்கத்தக்க வகையில் அதிகார பலத்தைக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மிகவும் நீளமான ஒரு பட்டியலே இருக்கும்போது, அந்தப் பாதிப்புகள் பற்றிய தகவல்கள், தரவுகள், ஆவணங்கள் என்பவற்றைத் தமது எதிர்காலத் தேவைக்காக, தமது பதிவுகளுக்காகக்கூட அவசியம் என்பதை சம்பந்தப்பட்வர்கள் உணராதிருப்பதும், அதுகுறித்து அக்கறை செலுத்தாமலிருப்பதும் தமிழ் மக்களின் சாபக்கேடு என்றே எண்ண வேண்டியிருக்கின்றது.

தங்கள் தேவைகளுக்காகத் தாங்களே செயற்பட வேண்டியது அவசியம். தங்களுடைய உரிமைகளுக்காகத் தாங்களே குரல் கொடுக்க வேண்டும், தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தாங்களே மேற்கொள்ள வேண்டும் என்ற நியதியை மறந்து போவது நல்லதல்ல. எல்லாவற்றையும் வெளியார் தங்களுக்குப் பெற்றுத் தருவார்கள் என்று வாய்ப்பேச்சில் வீரம் காட்டுவதும், வாளாவிருப்பதும் விமோசனத்திற்கு ஒருபோதும் வழிவகுக்கமாட்டாது. தங்களுக்காகத் தாங்களே பாடுபட்டால்தான் பலன்கள் கிடைக்கும் என்பதை உணர்ந்து இனிமேலாவது செயற்பட முயற்சிக்க வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102799/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.