Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் - பா.உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

35350795de278ef4ee97759e2f581527.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜரொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.
 
அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புணாணை கிழக்கு பகுதியில் திட்டமிட்ட வகையில் இராணுவத்தினாலும், பௌத்த பிக்கு ஒருவராலும் 39 சிங்கள குடும்பங்கள் குறியேற்றப்பட்டுள்ளன.
 
இவ்வேளை 1990ம் ஆண்டுக்கு முன் இப்பகுதியில் 5 சிங்கள குடும்பங்களே இருந்துள்ளன. இவர்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து கடவத்தை என்னும் பகுதியில் குடியேறியுள்ளனர். இவர்களுக்கு அரசாங்கத்தால் காணி, வீடு என்பன வழங்கப்பட்டதாகவும், பல வருடம் இடம்பெயர்ந்ததற்கான நிவாரணமும் வழங்கப்பட்டதாகவும் அறிகின்றேன்.
 
ஆனால் இராணுவத்தினதும், பௌத்த பிக்குவினதும் ஏற்பாட்டில் வேறு மாவட்டத்தை சேர்ந்த 39 சிங்கள குடும்பங்கள் அத்துமீறி இங்கு குடியேறியுள்ளனர். இவர்களை இப்பகுதியில் இருந்து வெளியேற்றுவதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் நடவடிக்கை மேற்கொண்டு உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
 
அத்தோடு தமிழ் மக்கள் தங்களது பூர்வீக வாழிடங்களில் குடியேறுவதற்கு செல்கின்றனர். இவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மக்களின் காணிகளில் இரணுவ முகாம் இருப்பதால் இம்மக்கள் குடியேற முடியாது திண்டாடுகின்றனர். இங்குள்ள இராணுவமும், பௌத்த பிக்குவும் தங்களை விரட்டுவதாகவும் கூறுகின்றனர். இதுசார்பாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தமிழ் மக்கள் எவ்வித தங்கு தடையின்றி மீள்குடியேற உதவுமாறு வேண்டுகின்றேன்.
 
மேலும், இங்குள்ள பௌத்த பிக்கு விநாயகர் ஆலயத்தின் காணியை சுவீகரித்துக் கொண்டிருப்பதால் இக்காணியையும் பெற்று கொடுக்குமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றேன். நடவடிக்கைக்கான பதிலை அன்பாக கோருகின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=181652657817485197

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.