Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிப்பிற்குள்ளான வடக்கு பாடசாலைகளை மீளக்கட்டி வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதிப்பிற்குள்ளான வடக்கு பாடசாலைகளை மீளக்கட்டி வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வடமாகாணசபை அங்கீகாரம்: 

[Wednesday, 2014-02-19 11:51:21]
usa-flag-seithy-150.jpg

யுத்த பாதிப்பிற்குள்ளான வடக்கு பாடசாலைகளை மீளக்கட்டி வழங்கும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு வடமாகாணசபை அங்கீகாரம் வழங்கவுள்ளது. வன்னியிலுள்ள மூன்று பாடசாலைகளை சர்வதேச தரத்தில் புனரமைக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் முயற்சிக்கு இலங்கை அரசின் மத்திய அமைச்சரவை ஏற்படுத்தியிருக்கின்ற நெருக்கடிக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று தெரிவித்து வடக்கு மாகாண சபையில்; இன்று விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

  

வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வு நேற்றையதினம் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. முக்கியமாக வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளான முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள துணுக்காய் பாடசாலை, மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத்திரபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சர்வதேச தரத்திலான பாடசாலைகளாக புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்கத்தூதரகம் முன்வந்திருந்தது. இருப்பினும் அமெரிக்க இராணுவம் இந்த விடயத்தில் தலையிடுவதாகத் தெரிவித்து இந்தத் திட்டத்தை நிறுத்தவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் சிபார்சில் மத்திய அமைச்சரவை இதனை தடுத்திருந்தது.

இந்த விடயம் தொடர்பிலான முன்மொழிவை முன்வைத்த அவைத் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான சி.வி.கே.சிவஞானம் குறித்த திட்டம் ஏற்கனவே பரிசீலிக்கப்பட்டபோது இலங்கை மத்திய அரசின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் ஒப்புதல் வழங்கியிருந்தார். ஆனாலும் வடக்கில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியினை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் மத்திய அரசு எடுத்துள்ள கடும்போக்கு தொடர்பில் வடக்கு மாகாண சபை கவலை வெளியிடுவதாக தெரிவித்த சி.வி.கே சிவஞானம் இதனை நிறைவேற்ற முன்வருமாறு அமெரிக்கத் தூதரகத்துக்கும்; வடமாகாண சபை சார்பில் ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கும் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.குறித்த பிரேரணை ஆதரித்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வழிமொழிய ஏகமனதாக அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

btn-back.gif   lg-share-en.gif

 

http://www.seithy.com/breifNews.php?newsID=103965&category=TamilNews&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.