Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைகளுக்கு மேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடுபொடியாக்கிய தாய் நீங்கள்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
தலைகளுக்கு மேல் தொங்கிய தூக்குக் கயிறுகளை தவிடுபொடியாக்கிய தாய் நீங்கள்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் பாராட்டு 
[Thursday, 2014-02-20 11:46:51]
J-Jayalalitha-IMTC-200seithycom.jpg

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வ்p ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு எடுத்துள்ள அத்துடன் மேலும் எடுக்கப்பபோகின்ற உடனடி நடவடிக்கைகளை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வாழ்த்துகின்றது. மேற்படி நடவடிக்கைளை எவ்வித தாமதமும் இல்லாமல் எடுத்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழகம்ää தமிழீழம் மட்டுமல்லää உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் வாழ்த்தியும் பாராட்டியும் மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் எமது இயக்கம் தங்களை வாழ்த்துகின்றது.

  

“அந்த அப்பாவிகளின் தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்கு கயிறுகளை தவிடுபொடியாக்கிய தாய் நீங்கள்” என்று வாழ்த்துவதிலே எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் மகிழ்ச்சியடைகின்றது. இவ்வாறு முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்;சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன் சாந்தன் பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளடங்கிய ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எடுத்துள்ள முயற்சிகளுக்கு தாமதமற்றதும் சிரத்தை மிகுந்ததுமான செயற்பாடுகளுக்கும் நன்றி தெரிவித்த உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் அனைத்துலக ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் இணைந்து வெளியி;ட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது தூக்கு தண்டனைக்கு ஆளாகி சிறைக் கொட்டடியில் தவித்த எமது தமிழகத்து மற்றும் ஈழத்து உறவுகளான முருகன் சாந்தன் பேரறிவாளன் மூவருடைய தூக்குத் தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவு உலகத் தமிழர்களின் இதயங்களில் தேன்வார்த்தது போன்ற உணர்வை தந்துள்ள இந்த வேளையில் வேலூர் சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்துள்ளது இருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் பூரண நிறைவு ஏற்பட்டுள்ளது.

நமது தமிழக முதல்வர் இதற்;கு முன்னரும் இவ்வாறான நற்காரியங்களை ஆற்றியுள்ளார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. ஏற்கனவே இலங்கையின் போர்க்குற்றத்தைக் கண்டித்தும் மூவர் உயிர் காக்கவும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க எடுத்திருக்கும் நடவடிக்கை உலகத் தமிழர்கள் பாராட்டும் வகையில் அமைந்துள்ள இந்த வேளையில் பலர் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.

இந்த மூவரின் உயிர் காக்கவும் சிறையில் வாடும் இதர நால்வரை மீட்கவும் தமிழக மக்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி இது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏனைய தலைவர்களைப் போல் அல்லாதுää தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களின் தலைகளுக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த தூக்குக் கயிறுகளை அறுத்து எறிந்திருக்கின்றார். இந்த கைகளுக்காக எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துள்ளார்கள்.

எனவே இந்த வேளையில் அந்த தியாகிகளுக்;கும் எமது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறான தீர்ப்புகள் மற்றும் மாற்றங்கள் என்பன நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. எம்மைப் பாதிக்கும் எத்தகைய கொடிதான விடயங்களையும் ஒருமித்த ஒற்றுமையுடனும் உணர்வு கொண்ட போராட்டங்களாலும் தகர்க்க முடியும் என்பதை இந்த உலகுக்கே எமது ஒப்பற்ற தமிழனம் எடுத்துக் காட்டியுள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

மேலும் முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய மத்திய அரசு உடனடியாக நமது ஏழு உறவுகளையும் விடுவிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று எமது கோரிக்கையையும் எமது இயக்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கின்றோம் இறுதியாக மனதில் உறுதியும் தன் செயற்பாடுகளில் நம்பிக்கையையும் கொண்டு தனது முதல்வர் பதவியை வகித்து வரும் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் நிம்மதியாக வாழ்வதற்கு அவசியமான அடிப்படை உரிமைகள் பெற்றுத் தர இந்திய மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற எமது தாழ்மையான வேண்டுகோளையும் அவரிடம் சமர்ப்ப்pக்கின்றோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

btn-back.gif   lg-share-en.gif

http://www.seithy.com/breifNews.php?newsID=104043&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.