Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தசாமி கமலேந்திரனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆதவன்
வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான கந்தசாமி கமலேந்திரனை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் kandasamy-kamalendran_0.jpgஎஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.
 
நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் தானியல் றெக்சியன் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கடந்த வருடம்  நவம்பர் 26 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் அவரது வீட்டில் இருந்து சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மேற்படி கொலைச்  சம்பவத்தையடுத்து பிரதானமாக குற்றம் சாட்டப்பட்ட வடக்கு மாகாணசபையின்  எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கைது செய்யப்ட்டார்.
 
இதேவேளை றெக்சியனின் மனைவியும் ஆட்டோ சாரதி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வழக்கு எடுக்கப்பட்டதோடு கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.