Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்விக் குறியாகியுள்ள விடுதலை - செல்வரட்னம் சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக் குறியாகியுள்ள விடுதலை - செல்வரட்னம் சிறிதரன்

22 பெப்ரவரி 2014

perarivalan-santhan-murugan-nalini-rober

ராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனை வழங்கப்பட்டவரகள் விவகாரம் உலக அளவில் தலைப்புச் செய்தியாகியிருக்கின்றது. பாரதப் பிரதமராக இருந்து, ஒரு தேர்தலைச் சந்தித்திருந்தபோது, வேட்பாளராக மக்கள் முன்னால் சென்றிருந்த வேளை, தமிழ் நாட்டில் வைத்து ராஜிவ் காந்தி மிகவும் துணிகரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இது ஓர் அரசியல் கொலை. பிராந்திய வல்லரசாகிய இந்தியப் பெருநாட்டின் முக்கிய தலைவராகக் கருதப்பட்ட இவருடைய கொலை, பிராந்திய சர்வதேச அரசியல் கொலையாகக் கணிப்பிடப்பட்டிருந்தது.

இரண்டு தசாப்தத்துக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளும் நீதிமன்ற விசாரணைகளும் நடைபெற்றிருந்தன. இந்தக் கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு இந்திய நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆயினும் கருணை மனு நடவடிக்கையின் மூலம் இந்த வழகக்pன் எதிரிகள் 7 பேரில் மூன்று பேரின் விவகாரம் இன்று இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்திய ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருணை மனு தொடர்பில் வெளிப்படையான முடிவு ஒன்றை அறிவிக்கத் தவறியதன் விளைவை இப்போது இந்திய மத்திய அரசாங்கம் சிக்கலான ஒரு விடயமாக எதிர்கொண்டிருப்பதையே காண முடிகின்றது. தண்டனை வழங்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதிக்குச் செய்யப்பட்ட கருணை மனுவின் மூலம், இந்த விவகாரம், நீதிமன்ற விசாரணைகளில் இருந்து அரசியல் அரங்கில் பிரவேசித்திருந்தது. ஆயினும் அரசியலரங்கில் நிலவிய அசாதாரணமான மௌன நிலையையடுத்து, அது மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரப்பட்டிருந்தது. இந்த விடயத்தைப் பரிசீலனை செய்த நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றியது. ஆயினும் கருணை மனு தொடர்பில் காட்டப்பட வேண்டிய கருணையை மேலும் வெளிப்படுத்தும் வகையில் போலும், தமிழக அரசு விரும்பினால் தண்டனை வழங்கப்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் பரிந்துரைத்திருந்தது.

மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைத் தண்டனைமயாக மாற்றிய நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்வது தொடர்பில், இவ்வாறு தமிழக அரசை தொடர்புப் படுத்தியதன் மூலம், நீதித்துறையில் இருந்து அரசியல் அரங்கிற்கு இந்தப் பந்து வீசப்பட்டிருந்தது. தனது அரங்கில் வந்து விழுந்த பந்தை பலரும் எதிர்பார்த்திருந்த வகையில் கையாண்டிருந்தார். தூக்குத் தண்டனையில் இருந்து ஆயுட்காலச் சிறைத்தண்டனைக்கு தண்டனை குறைக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு சபையில் முடிவு செய்து, அது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்தார்.

ஆயினும் தூக்குத் தண்டனை குறைப்பு என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு மீதான மீள்சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்திருப்பதனால், அந்த மனு தொடர்பில் முடிவெடுக்கப்படும் வரையில் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய அரசாங்கம் தமிழக அரசின் முடிவை எதிர்த்து, அவசர அவசரமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அத்துடன், தமிழக அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையுத்தரவையும் இதன் மூலம் பெற்றுவிட்டது. இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ள இந்திய நீதிமன்றம் இது தொடர்பில் விளக்கமளிப்பதற்குத் தமிழக அரசுக்கு இரண்டு வாரம் கால அவகாசமும் வழங்கியிருக்கின்றது.

தண்டனைக் குறைப்பு தீர்ப்பில் நீதிமன்றம் செய்திருந்த பரிந்துரைக்கு அமைய ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்த போதிலும், தண்டனைக் குறைப்பு செய்து சலுகை காட்டுகின்ற விடயத்தில் அது சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிவிட்டது என்று தமிழக அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.

குற்றவாளிகளை விடுதலை செய்வதற்குத் தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. அந்த அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமே உள்ளது. இல்லையில்லை. இந்த விடயத்தில் மத்திய அரசின் கருத்தைப் பெற்றால் போதும். மத்திய அரசின் ஒப்புதல் இதற்கு அவசியமில்லை என்ற வாதங்களும், பிரதி வாதங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் சிறையில் இருந்து உடனடியாக விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று பலரும் மகிழ்வோடு எதிர்பார்த்திருந்த ஏழு தண்டனைக் கைதிகளும் சிறைக்கதவுகளைக் கடந்து வர முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. தூக்குத் தண்டனையில் இருந்து தப்பி, ஆயுட் கைதிகளாகி பின்னர் முழுமையான விடுதலையை இந்த ஏழு பேரும் பெறுவார்கள் என்பதில் பல தரப்பினரும் கொண்டிருந்த மகிழ்ச்சி வெய்யிலில் சிக்கிய புழுவாகிப் போயிருக்கின்றது.

அரசியல் விளையாட்டு

இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியின் கொலையானது, இந்திய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், ஆத்திர உணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. அரசியல்வாதிகள் இதனால் கொதித்துப் போயிருந்தார்கள். இதன் காரணமாக இலங்கையில்இடம்பெற்று வந்த அடக்குமுறைகள், இப்போது கூறப்படுவது போன்ற இன ஒடுக்குமுறை, இன அழிப்பு நடவடிக்கைகளை அறிந்து, தமிழ் மக்களுக்கு ஆதரவாக எழுச்சி பெற்றிருந்த அனுதாப அலை ஓய்ந்து போனது. அது விடுதலைப்புலிகள் மீதான ஆறாத சீற்றமாகியது. பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்த ஈழத் தமிழ் மக்கள் மீது இந்திய மக்கள் குறி;ப்பாகத் தமிழக மக்கள் கொண்டிருந்த பற்றும் பாசமும்கூட, வெறுப்பாக மாறியிருந்தது. இருப்பினும், தங்கள் நாட்டு அரசியல் தலைவர் ஒருவரைப் படுகொலை செய்துவிட்டார்களே என்ற தமிழக மக்களின் அந்த வெறுப்பும் கோபமும் நாளடைவில் மாற்றம் பெற்றிருந்தது. ஆனால் இந்தியத் தலைநகர அரசியல்வாதிகள் மத்தியில் இந்த மாற்றம் ஏற்படவில்லை.

இருந்தபோதிலும், ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான மனிதாபிமான அனுதாப உணர்வானது ஓர் அரசியல் மயப்பட்டதாக ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, இந்திய மத்திய அரசும் சரி, தமிழக அரசும்சரி தங்களைக் காப்பாற்றுவதற்காக ஏதாவது செய்வார்கள் என்று முள்ளிவாய்க்காலின் மரணக் கூட்டுக்குள் சிக்கி நாளாந்தம் உயிரழந்து. படுகாயமடைந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள். அப்போது ஏற்பட்டிருக்க வேண்டிய மனிதாபிமான உணர்வும், அனுதாபமும் இந்தியத் தரப்பிலிருந்து வரவே இல்லை.

மாரிகாலத்து அடைமழைபேல அன்றாடம் இடைவெளியே இல்லாமல் பொழிந்து கொண்டிருந்த எறிகணை தாக்குதல்கள், விமானக்குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகங்கள் என்பவற்றின் மத்தியில் இருந்து உயிர்;ப்பிச்சைக்காக எழுந்திருந்த பாதிக்கப்பட்ட மக்களின் அவலக்குரல்கள் எவருடைய மனங்களையும் இளகச் செய்யவில்லை. அவலப்பட்ட மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எவரையும் இந்தியத் தரப்பில் எவரையும் தூண்டவுமில்லை. அந்தக் காலப்பகுதியில் ஐhநாவின் முக்கிய பிரதிநிதியாக இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் இலங்கை வந்திருந்த போதிலும் எதுவும் நடக்கவில்லை.

போர்ச்சூழலில் சிக்கியிருந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக மேரிகொல்வின் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளர் விஜய் நம்பியாருடன் தொடர்பு கொண்டு நிலைமைகள் எவ்வளவு மோசமடைந்திருக்கின்றது என்பதை எடுத்துக் கூறி, போர்க்களத்தி;ல் இடம்பெற்ற மனிதப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்தியிருந்தார். ஐநாவும்கூட, அந்த நேரத்தின் கொடூரமான நிலைமைகள் குறித்து நன்கு அறிந்தே இருந்தது. எனினும், யுத்த மோதல்களில் சிக்கித் தவித்த அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அப்போது கனிமொழி உட்பட தமிழகத்தின் முக்கியத் தலைவர்களை முள்ளிவாய்க்காலில் இருந்து பலரும் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு தங்கள் உயிரிகளைப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்கள். அந்தக் குரல்கள் காற்றில் கரைந்து போயின. நிலைமையின் தீவிரத்தைக் குறைப்பதற்கும், அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவி;ல்லை. இதே தமிழகத்தில் இருந்து ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்தில் தண்டனை வழங்கப்பட்டவர்கள் மீது அனுதாபம் காட்டப்படுகின்றது. இது உண்மையான மனிதாபிமானம்தானா, உண்மையான அனுதாபம்தானா என்ற சந்தேகக் கேள்வி தவிர்க்க முடியாத நிலையில் எழுந்து நிற்கின்றது.

இலங்கையில் யுததம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகப் போகின்றது. ஆயினும் இனப்பிரச்சினைக்கு இன்னும் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் பற்றி எந்தவிதமான அக்கறையும் அரசாங்கத்தினால் செலுத்தப்படவில்லை. இறுதி யுததத்தின்போது கொல்லப்பட்ட மக்களுக்கும், காணாமல் போயள்ளவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். அங்கு இடம்பெற்ற மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என்ற குரல்கள் சர்வதேச ரீதியில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்திய அரசும், ஆதரவு காட்ட வேண்டும் என்று பரவலான எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

தேர்தலுக்கான காய் நகர்த்தல்

இந்த விடயம் தமிழக மக்கள் மத்தியிலும் இப்போது செல்வாக்கு பெற்றிருக்கின்றது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் வேண்டும். காணமல் போயுள்ளவர்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பது உள்ளிட்ட பல விடயங்களில் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றார்கள். அதனையொட்டி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற அனுதாப அலையும் அந்த மக்கள் மத்தியில் பெரிய அளவில் காணப்படுகின்றது. இது முக்கியத்துவம் மிக்கதோர் அரசியல் விடயமாகத் தமிழகத்தில் இப்போது முனைப்பு பெற்றிருக்கின்றது.

இந்த முனைப்பை அரசியல் மூலதனமாகக் கொண்டு தமிழக மக்களின் ஆதரவை வரவிருக்கின்ற தேர்தலில் பெற்றுவிட வேண்டும் என்ற அரசியல் ஆர்வமும், அவசரத் துடிப்பும் தமிழக முதல்வருடைய நடவடிக்கைகளில் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இதற்காகவே, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்குத் தண்டனை குறைப்பு செய்யும் விடயத்தைக் கையில் எடுத்து தீவிரமாக அவர் செயற்பட்டிருந்தார் என்று அவர்கள் கூட்டிக்காட்டுகின்றார்கள்.

தமிழக முதல்வரைப் பொறுத்தமட்டில், வரவிருக்கின்ற தேர்தலின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கையும், திமுக தலைவர் மு.கருணாநிதியின் அரசியல் செல்வாக்கைத் தூள் பறக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான ஓர் ஆயுதமாகவே, இவரால் ராஜிவ் காந்தியின் கொலைக்குற்றவாளிகளின் தண்டனைக்குறைப்பு விடயம் கையாளப்படுகின்றது என்பது அவர்களின் கணிப்பாக இருக்கின்றது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேர் தொடர்பான விடயங்கள் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. அவர்கள் மீதான தண்டனை குறைக்கப்பட வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உணர்வு கிட்டத்தட்ட ஓர் அலையாகவே எழுந்திருந்தது. இந்தப் பின்னணியில் அவர்களுடைய தூக்குத் தண்டனையை ஆயுள் சிறைத்தண்டனையாகக் குறைத்த நீதிமன்றம் அவர்களை தமிழக அரசு விரும்பினால் விடுதலை செய்யலாம் என்று சிபாரிசு செய்திருந்தது.

நீதிமன்றத்தின் இந்த சிபாரிசானது, இந்தத் தேர்தல் சூழலில் தமிழக மக்களின் ஆதரவைப் பெறுகின்ற விடயத்தில் தமிழக முதல்வருக்கு பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போன்ற ஓர் அரசியல் சந்தர்ப்பத்தையே வழங்கியிருந்தது. அதன் காரணமாகவே இவர்களை விடுதலை செய்வது தொடர்பில் உடனடியாக முடிவெடுத்து, அது தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மூன்று நாள் அவகாசத்தை வழங்கியிருந்தார்.

தமிழக மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ள ராஜிவ் கொலைவழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடயத்தை தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுகின்ற வகையில் சாதுரியமாகக் கையாண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அதிமுகவே செயற்பட்டது என்ற படத்தைக் காட்டுவதுடன், காங்கிரஸ்காரர்கள் அதனை முழுமையாக எதிர்க்கின்றார்கள் என்றதோர் அரசியல் தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான காய் நகர்த்தல்களை அவர் கையாண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தொடர்பில் முதலமைச்சர் ஜெயலலிதா தீவிரமாகச் செயற்படுகின்றார். ஆனால் இதிலும்பார்க்க முக்கியமான சந்தர்ப்பங்களில் தீவிரமாகவும், அவசரமாகவும் செயற்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவ்வாறு செயற்படவில்லை என்று ஏற்கனவே பலரும் இப்போது பேசத் தொடங்கிவிட்டார்கள். மக்களின் இத்தகைய எண்ணவோட்டத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முதலமைச்சர் தயங்கமாட்டார் என்று பலரும் கருதுகின்றார்கள். அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமான சூழல் ஒன்று கிடைக்குமானால் அதனை சரியான முறையில்ப யனப்டுத்தத் தயங்கமாட்டார்கள் என்பது தெரிந்ததே.

விடுதலையின் பயன்

ராஜிவ் காந்தி கொலை வழக்குக் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்பும், அதனைத் தொடர்ந்து அவர்களை விடுதலை செய்வதற்கான சூழலும் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், அவர்கள் உண்மையாகவே விடுதலையாவார்களா, அவ்வாறு அவர்களை விடுதலை செய்ய முடியுமா என்பது இப்போது கேள்விக்குறியாகியிருக்கின்றது.

அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவை எதிர்த்துள்ள இந்திய மத்திய அரசாங்கம், அதற்கு இடைக்காலத் தடையொன்றையும் நீதிமன்றத்திடமிருந்து பெற்றிருக்கின்றது. இதனால் இந்த விடயத்தில் இப்போது பல்வேறுபட்ட சட்டச் சிக்கல்கள் எழுவதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. மத்திய அரசாங்கத்தின் அதிகார பலம், மாநில அரசிற்குள்ள செயற்பாட்டு அதிகாரம் என்பன குறித்து பல்வேறு சட்டவாதங்கள் எற்கனவே எழுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் உடனடியாக முடிவு காணப்பட்டு, இந்த விடுதலை விவகாரம் முடிவுக்கு வருமா என்பதை அனுமானிக்க முடியாமல் இருக்கின்றது.

அவ்வாறே, ஒரு தீர்க்கமான முடிவொன்று மேற்கொள்ளப்பட்டாலும், இந்தத் தண்டனைக் கைதிகள் விடுதலை பெற்று சிறைச்சாலையை விட்டு வெளியில் செல்ல முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவர்கள் மீது நம்பிக்கை வைத்து இலங்கை அரசாங்கம், இவர்களை நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கமாட்டாது என்று நிச்சயமாக நம்பலாம். இதனை கோடி காட்டும் வகையில் அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவர்களை ஏற்பதென்பது குழப்பகரமான ஒரு விடயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 20 வருடங்களுக்கு மேலாக நாட்டில் இல்லாதிருந்தவர்கள் தொடர்பில் குடியுரிமைப் பிரச்சினை ஏற்படலாம் என கூறியுள்ள அவர் இது சட்டரீதியாகக் கையாளப்பட வேண்டிய விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இது விடத்தில் தீர்க்கமான ஒரு நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்குத் தனக்குத் தகுதி இருக்கின்றதா என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசானது, தேசிய பாதுகாப்பிலும், விடுதலைப்புலிகள் தொடர்பிலும் அதீத அக்கறையும் செயற்பாட்டுத் தன்மையையும் கொண்டுள்ளது. விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுத்து விடுவார்கள் என்ற என்ற அசசத்தை மிகத் தீவிரமாக எல்லா விடயங்களிலும் அது கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகள் என்றாலும்சரி, அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றாலும்சரி, யுத்தம் முடிவடைந்து நான்கு வருட்களாகின்ற இன்றைய நிலையிலும் அதிக அளவில் சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்ற போக்கை அதுகொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் மிகவும் தேர்ச்சியான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது.

ஆமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருப்பதைப் போன்று விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளித்து சமூகத்தில் எற்றுக்கொள்கின்ற நடைமுறைகள் நாட்டில் இருந்தாலும், மிகவும் பாரதூரமான ஒரு கொலைச் சம்பவமாகக் கருதப்பட்ட, இப்போதும் கருதப்படுகின்ற ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை ஏற்றுப் புனர்வாழ்வளிக்குமா என்பது சந்தேகமே.

இன்றைய சூழலில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்குள் வருதென்பது பாதுகாப்பற்றது, அவர்களுடைய உயிருக்கு உத்தரவாதமற்றது என்ற கருத்து பொதுவாக நிலவுகின்றது. எனவே. இந்தக் கருத்தின் அடிப்படையில் தமிழகத்தில், செங்கல்பட்டு, பூந்தமல்லி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு நிறைந்த சிறப்பு முகாம்களில் அவர்களின் உயிர்ப் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகள் அமைப்பினருடன் ராஜிவ்காந்தி கொலைக்குற்றவாளிகளும் சேர்க்கப்படுவதற்கான சந்தர்ப்பமே அதிகமாகக் காணப்படுகின்றது.

எனவே, தண்டனைக்குறைப்பு செய்யப்பட்டுள்ள ராஜிவ்காந்தி கொலை வழக்கில் த்ணடனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும்கூட, விடுதலை செய்யப்படாதவர்களாக இருப்பதற்கான சந்தர்ப்பமே அதிகமாகக் காணப்படுகின்றது. இவர்களை விடுதலை செய்வதை எதிர்த்துள்ள மத்திய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துகின்ற ஒரு போக்கில் இத்தகைய ஒரு முடிவை மேற்கொள்வதற்குத் தமிழக அரசு நிர்ப்பந்திக்கப்படலாம் என்பதையும் மறுக்க முடியாது. இந்த வகையில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட்ட ஏழு பேரினி; விடுதலை என்பது இன்றைய நிலையில் வெறும் தேர்தல் சளசளப்பு விவகாரமாகவே தோன்றுகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103387/language/ta-IN/article.aspx

புலிகள் செய்தார்கள் என்று இவரே எழுதி, இந்த எழுவருமே புலிகளின் அங்கத்தவர்கள் என்றும் எழுதி, அவர்களுக்கு புனர் வாழ்வு அளிப்பதற்கு கெகெலிய மறுப்பதால் மத்திய அரசு விடுவிக்க போவதில்லை என்றும் எழுதுகிறார். இவர் தனது பக்கத்தை எழுதினாலும், நாங்கள் எங்கள் பக்கத்தை எழுதும் போது விடுதலை தாமதமகலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுவத்தால் அடக்கி வாசிக்க வேண்டியிருக்கிறது. குலோபல் நடுநிலைமை என்று காட்ட கூழுக்கும் பாடி, கஞ்சிக்கும் பாடுகிறது. அது ந்டுநிலைமை அல்ல. கொள்கை இல்லாத்தனம். 

சாந்தன், பேரறிவாளன், முருகனின் விடுதலையில் சிக்கல்: ஏனைய நால்வருக்கு சிக்கலில்லைசாந்தன், பேரறிவாளன், முருகனின் விடுதலையில் சிக்கல்: ஏனைய நால்வருக்கு சிக்கலில்லைFebruary 22, 2014  04:45 pmBookmark and Share
நளினி உள்பட 4 பேரும் விடுதலையாவதில் சட்ட சிக்கல் எதுவும் எழவில்லை என்று வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார் ஆகியோர் மூன்று நாளில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதனிடையே, 3 பேரின் விடுதலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 பேரை விடுதலை செய்வதி்ல் நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி தடை விதித்தது.

இந்நிலையில், வேலூர் மத்திய சிறைச்சாலை முன்பரின்றூ செய்தியாளர்களிடம் பேசிய நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே மத்திய அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டு தடை பெறப்பட்டுள்ளது.

அதனால், தமிழக அரசின் அறிவிப்பின்படி மற்ற 4 பேரும் விடுதலையாவதில் சட்ட சி்க்கல் எதுவும் எழவில்லை. ஆகவே, முறைப்படி ஓரிரு தினங்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=52363

இப்போதைக்கு இவர்கள் விடுதலை ஆக மாட்டார்கள் போல. தடை... இடைக்கால தடை என்று இப்போதைக்கு நீட்டித்துக்கொண்டே செல்லும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் காணப்படும் எதிர்ப்பின் காரணமாக ஜெயலலிதாவும் இந்த விடயத்தில் இனிமேல் அடக்கித்தான் வாசிப்பார்.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.