Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேர்ணல், லெப்­டினன்ட் பத­வி­களை கொடுத்து கல்விச் சேவை இரா­ணு­வ­மயம். மாண­வர்­களை உள­வியல் ரீதி­யாக பாதிக்­கின்­றது. ஜோஸப் ஸ்டாலின்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ssss2338.gif
பாடசாலை மாணவ மாணவியரை நல்வழிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக உருவாக்க வேண்டுமானால்
அவர்களுக்கு முறையான உளவள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் . மாறாக , இராணுவ ஒழுக்கக் கோவையினால் அதனை ஏற்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்தார் .
 
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 , தரம் 11 போன்ற பதவி நிலைகளுக்குத் தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு கேர்ணல் மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் போன்ற பதவி நிலைகளை வழங்கி கல்விச் சேவையை இராணுவமயமாக்குகின்றனர் . இது ஏற்புடைய ஒன்றல்ல எனவும் அவர் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது , கல்வி நிர்வாக சேவையில் இவ்வாறான பதவி நிலைகளை வழங்கும் போது அவர்கள் , இராணுவ ஒழுக்கக் கோவை போன்ற கடுமையான செயற்பாடுகளை பாடசாலைகளில் முன்னெடுக்கின்றனர் . இதனால் மாணவ , மாணவியர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர் .
 
பாடசாலை மாணவ , மாணவியர்கள் சுதந்திரமாக செயற்படுகின்றவர்கள் . எனவே , அவர்களின் பராயம் மற்றும் தன்மைக்கேற்ற ஒழுக்கக் கோவைகளை பயன்படுத்தி அவர்களை வழிநடத்துவதே சிறந்தது . அவ்வாறன்றி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையோ கட்டளைகளையோ பிறப்பித்தல் சாதுரியமான ஒன்றெனக் கூறமுடியாது .
 
குருநாகல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல கல்லூரி மாணவி வேனுசாவின் விவகாரமும் இந்தளவுக்கு மோசமாக செல்வதற்கு காரணம் என்னவென சிந்தித்துப் பார்த்தால் புரியும் . பாடசாலை அதிபர் குறித்த மாணவியை மிகவும் தகாத வார்த்தைகளால் கண்டித்துள்ளார் . அத்தோடு ஏனைய மாணவர்கள் முன்னிலையில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளார் . இதனால் அந்த மாணவி மிகுந்த மன வேதனைக்குள்ளாகியிருக்கலாம் . எனவும் அவர் தெரிவித்தார் .
 
கொழும்பு நிருபர் .
 
 

நான் முன்பு ஒருமுறை சாரணர் படை, இராணுவ சிறார் படையாக தொடங்கியது என்ற கூற்றை சிறி லங்கன் ஒருவர் நக்கலடித்தார்.

அவரின் அரிவரி வாத்திக்கு ஜெனெரல் பட்டம் கொடுக்கும் கொமெடி கட்டுரைகள் பக்கம் இப்போது தலை வைப்பதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.