Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்: மரணதண்டனைக் கைதிகளிடம் காட்டிய மனிதநேயத்தையும், நியாய உணர்வையும் ஈழத்தமிழ் அகதிகள் விஷயத்திலும் அக்கறையுடன் காட்டுங்கள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அனந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு வணக்கங்கள் பல,

நான் ஈழத்தின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்),  அண்மையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டபின் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களது முழுமையான விடுதலை தொடர்பாக, தாங்களும் தங்கள் அரசும் மனோதர்மத்தின்படி மனிதநேயத்தின் அடிப்படையிலும் எடுத்த முடிவு உலக  வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழக அரசின் நடவடிக்கைகளை சரித்திரத்தில் பதியப்படும் என்பது உண்மையே. இந்தவகையில் தாங்கள் தமிழ் பேசும் நல்லுலகத்தினரால் என்றென்றும் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவரே.

இதேசமயம் தமிழகத்தில் சில பத்தாண்டு காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் பற்றி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவர்கள் வாழ்விலும் இயல்பு நிலைமையினை தோற்றுவிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

உண்மையில் அவர்கள் அகதிகளும் அல்ல. அநாதைகளும் அல்ல. சிங்கள அரசின் அளப்பரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது உயிர் பாதுகாப்பிற்கென மட்டுமே புலம்பெயர்ந்து வந்தவர்கள். அவர்கள் வசதிகளற்ற அகதி முகாம்களிலும் சிறப்பு முகாம் என அழைக்கப்படும் தடுப்பு முகாம்களிலும் படும் இன்னல்கள் ஒன்றும் ரகசியமானதல்ல.

அவர்களும் அவர்களது உறவுகளும் சொந்த மண்ணிற்கு திரும்பி இயல்பு வாழ்க்கை வாழும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நம்பிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ளவர்களின் துன்ப துயரங்களை நேரில் சென்று பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

இந்தநிலையில் தங்களால் சொந்த மண்ணிற்கு திரும்பும் வரையிலான காலம் கனியும் வரை அவர்கள் குறைந்தபட்சம் தத்தம் மனித உணர்வுகளை இழக்காமல் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது முதல்வராகிய உங்களது மனிதநேய கடமையாகும் என எண்ணுகிறோம்.

மரண தண்டனைக் கைதிகளில் காட்டிய மனிதநேயமும் நியாய உணர்வும் ஈழத்தமிழ் அகதிகள் விடயத்திலும் அக்கறையுடன் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=25060

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.