Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக

Featured Replies

ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில்

ஒரு வேவுக் போராளியின் உண்மைக் கதை.

ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன.

அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில்இ பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி.

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால்இ இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால்இ அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்கஇ அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான்.

சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் „ டோப்பிட்டோ “ குண்டை பொருத்தஇ மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய “ டோப்பிட்டோ “ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கஇ அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது.

துப்பாக்கிகள் சடசடக்கஇ எதிரி வானில் ஏவிய “ பரா “ வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீசஇ அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான்.

நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக “ டோப்பிட்டோ “ வோஇ

பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்கஇ கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் „ கட்டரு “ டன் எழுந்தான்.இ அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன்.

துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழியஇ தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன்இ ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவி;ட்டது.

அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான்.

„ மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ “

அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான்.

தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே.

எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் „ ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் “ தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.

சாதனையாளன் கப்டன் காவலன்

இரண்டாம் கட்ட ஈழப்போரில் ஆரம்ப ஆண்டுகள் அவை.26.11.1992.பலாலித் தளத்தின் வளலாய்ப் பகுதி முன்னணிக் காவலரண் வரிசையைத் தாக்கி அழித்து அதன் பின்னாலுள்ள சில மினி முகாம்களையும் அழிப் பதற்கான பணிகள் நடந்துகொண்டிருந்தன.

முன்னரங்கக் காவல்நிலைகள் தாக்கப்படும் அதே நேரத்தில் ஏற்கனவே ஊடுருவி நிலைகொண்டிருக்கும் அணிகள் தளத்தின் உட்புற இராணுவ மினி முகாம்களைத் தாக்கவேண்டு மென்பதே அன்றைய எமது திட்டம்.

பின்னணியில் அமைந்திருந்த மினி முகாம்களைத் தாக்கும் அணியாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஒரு பிரிவு நியமிக்கப்பட்டது. அதற்காக இராணுவ நிலைகளை ஊடறுத்து ஏழு கிலோமீற்றர் தூரம் வரை அவர்கள் இரகசியமாக நகரவேண்டியிருந்தது.

கண்ணிவெடிகள்இ மிதிவெடிகள் நிறைந்த இராணுவ முன்னரங்க வேலிஇ நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ள தொடர் காவலரண்கள்இ மின் ஒளி பாய்ச்சப்பட்ட இரவு நேரஅவதானிப்பு வலயம்இ சிறு ஒலியையும் தெளிவாகக் கேட்கக்கூடிய பேரமைதி. இவை எல்லாவற்றுக்கும் முகம் கொடுத்து தொடர் கண்காணிப்பிலிருக்கும் வீதியொன்றைக் கடந்தே அந்த அணி தன் இலக்கை அடையவேண்டும்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. யாருமே தாக்குதலுக்கான இறுதி இலக்கை நெருங்கவில்லை. அன்றைய இருட்பொழுதின் ஆழ்ந்த அமைதியைக் குலைத்தது ஒரு வெடியோசை. இராணுவ முன்னரங்கை ஊடுருவிப் பின்னணி நிலைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த காவலன் என்ற போராளியின் கால்களில் ஒன்றை அங்கே வெடித்த மிதிவெடி சிதைத்துவிட்டது.

எல்லோருடைய விழிகளிலும் கலவரத்தின் சாயல் தென்பட்டது. அடுத்து நடக்கப் போவது என்ன? நிச்சயமாக அந்தச் சத்தத்தை எதிரி கேட்டிருப்பான். திகைப்பின் கதறல்இ வேதனையின் புலம்பல்இ பாயப்பட்டுவிட்ட ஒரு மனித உயிரின் இயல்பான அனுங்கல் எதிரிக்கு எம்வரவைச் சொல்லிவி;டும். அன்றைய முயற்சி அத்துடனேயெஇ எம்மாற் சண்டை தொடங்கப்படாமலேயே முடிவடைந்துவிடும்.. அந்தப் பிரதேசத்தைச் சூழ்ந்திருந்த எமது முன்னணி வீரர்கள் பலரை நாம் இழக்க நேரிடும். இலக்குகள் எவையும் வெற்றி கொள்ளப்படாமலேயே எமது திட்டம் எதிரியால் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். அவநம்பிக்கையுடன் எல்லோரது கவனமும் காவலன் பக்கம் திரும்பியது.

வேடிப்பின் அதிர்வுகள் அடங்கியபோது கலைந்த புகையினூடாக அவன் அசைவது தெரிந்தது. துண்டிக்கப்பட்டுச் சிதைந்திருந்த அவனது காலில் இருந்து குருதி கொப்பளித்துப் பாய்ந்தது. சத்தமில்லை. மெல்லக் கையசைத்து அருகிலிருந்த தோழனை அழைத்தான்.

மச்சான் நான் சத்தம் போட மாட்டன். நீங்கள் தொடர்ந்து முன்னேறுங்கோ. பயம் படர்ந்திருந்த தோழர்களின் முகத்தில் வியப்பும் பரவியது. அந்த வார்த்தைகள் எவ்வளவு அற்புதமானவை. அவனது அந்த வார்த்தைகள் தான் அன்றைய எம் வெற்றியைச் சாத்தியமாக்கின என்று சொன்னால் யாரால்தான் அதை மறுத்துவிடமுடியும்?

உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக

09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலைவேளை. ஆனையிரவுஇ பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்துகொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள்இ உப்பு வெளிகள்இ சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல்இ எனினும்இ முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும்இ எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்துகொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத்தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்துகொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும.

அங்கே நகர்ந்துகொண்டிருந்த அணிகளிற் சாள்ச் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குறியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப்போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கிநிற்கிறது.

சண்டை தொடங்கிவிட்டது. சாள்ச் அன்ரனி படையணியும் அவர்களுக்குறிய பாதைவழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை „ டோப்பிட்டோ “ குண்டுகள் தகர்க்கஇ அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்துகொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத்துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை அவர்களுக்குத் தெரிந்தது.

ஆம் எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளைவிட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஓவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுளையாவிட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக்கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூட போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க „ டோப்பிட்டோ “ வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக்கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச்சென்ற போராளி சுயந்தன் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவைபட்டு வீழ்ந்துவிட்டான். ஏதிரிஇ அந்த இடத்தில் முட்கம்பிகளை வெட்டப்படாமல் இருப்பதையும் நாம் அதை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழச் சூட்டுவலுவையும் இப்போது அங்கே மையங்கொள்ள வைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்கமுடியாமல் நிற்கஇ தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான்.

அந்தத் தடையை அகற்றவேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற் பட சுயந்தன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின் மீது பாய்ந்தான்இ நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்கஇ அவன் அமைத்துத் தந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.

அவனது அணி கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக்கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழவேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக்கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக்கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழியமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயாந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனைகளையும் தாங்கிக்கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழிசமைத்துக் கொடுத்த அவனது வீரம்.

தலைவரவர்களின் „ எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது “ என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் „ ஜயசிக்குறுய் “ சமரில் வித்தாகிப்போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.

முற்றும்.

இன்னும் பல........

http://eelamgallery.com/e107/e107_plugins/...ent.php?cat.147

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.