Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் புதிய திட்டம்

Featured Replies

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மாதாந்த சஞ்சிகையான `முரகல' (காவற்கல்) சஞ்சிகையின் ஆகஸ்ட் இதழில் வெளியான "இந்தியாவின் புதிய நிகழ்ச்சி நிரல் என்ன?" என்ற சிங்களக் கட்டுரையின் தமிழாக்கம்.

-தமிழில் ப.பன்னீர்ச்செல்வம்-

சேர்.ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவி வகித்த காலத்தில் பாண்டுங் நகரில் வலய நாடுகளின் மாநாடொன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் சேர்.ஜோன் "ஏகாதிபத்திய வாதிகளுக்கு சார்பான" உரையொன்றை நிகழ்த்தினார். இவ்வுரையை செவிமடுத்த ஜவஹர்லால் நேரு கொத்தலாவலவின் அருகில் வந்து இந்த உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் அதன் பிரதியை ஏன் தன்னிடம் காண்பிக்கவில்லையென வினவினார்.

இதற்கு பதிலளித்த சேர் ஜோன் எனது உரையின் பிரதியை நான் ஏன் உனக்கு காட்ட வேண்டும்? நீ உனது உரையின் பிரதியை எனக்கு காண்பித்தாயா? என பதிலளித்தார்.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது சேர் ஜோனின் பதிலையல்ல. நேரு எமது நாடு தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாட்டையே ஆகும். நாம் உரையாற்றுவதற்கும் நேருவின் அனுமதியைப் பெற வேண்டும். சுதந்திர இந்தியா ஆரம்பம் தொடக்கம் தனது அயல்நாடு தொடர்பில் கொண்டிருந்த நிலைப்பாடு இதுவாகும். அன்று முதல் இன்று வரை இந்தியாவின் நிலைப்பாடு மாறவில்லையென்பதனை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மீண்டும் நேருவின் நிலைப்பாடு - நேருவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளோம்.

நேருவின் இந்த நிகழ்ச்சி நிரல் பல்வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்பட்டது. இந்திய வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக பேசுவோர் அதனை "பனிக்கார் ஞான நிகழ்ச்சி நிரல்" என்றே அழைப்பார்கள். இந்த நிகழ்ச்சி நிரலின் பிதாமகன் பனிக்கார் ஆகும். ஜே.வி.பி. இதனை "இந்திய ஆதிக்கம்" என்றே அழைத்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர் சேனாநாயக - பண்டாரநாயக்க ஆட்சிக் காலங்களில் இந்தியாவிற்கு இந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இயலாமல் போனது.

விசேடமாக சிறிமாவோ பண்டாரநாயக்க கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கையினால் இந்தியாவும் நாமும் சமாதானமாக இருந்தோம். சீன - இந்திய நெருக்கடிக் காலத்தில் அதனை அமைதிப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையிலான பலம் சிறிமாவிடம் இருந்தது.

இந்நாட்டில் வசித்த பிரஜாவுரிமையில்லாதவர்களை திருப்பி அனுப்புவதற்கான சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதிலும் வெற்றி கொண்டார். கச்சதீவின் உரிமையை இந்திரா காந்தி எமக்கு வழங்கியதும் அக்காலகட்டத்திலே தான். பங்களாதேஷ் உருவாக்குவதற்கு காரணமான இந்து - பாகிஸ்தான் யுத்த காலத்தில் பாகிஸ்தான் விமானங்களுக்கு இலங்கையில் தரித்து நின்று எரிபொருள் நிரப்புவதற்கும் அனுமதி வழங்கியது சிறிமாவின் ஆட்சிக் காலத்திலேயாகும். அதற்காக இந்தியாவிடம் அனுமதியை பெற வேண்டிய அவசியம் சிறிமாவுக்கு இருக்கவில்லை.

(இன்று தமிழ்ச்செல்வனுடன் பேசுவதற்கும் நாம் இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும்.)

நேரு - பனிக்கார் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு 1977 இல் ஜே.ஆர்.இன் ஆட்சிக் காலம் வழி

சமைத்தது. "யெங்கி டிகி" என அழைக்கப்பட்ட ஜே.ஆர்.இன் அமெரிக்க சார்பு கோழைத்தனமான கொள்கை இந்தியாவிற்கு வாய்ப்பை வழங்கியது. பனிக்கார் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமென்பதை ஜே.ஆருக்கு உணர்த்துவதற்கு இந்தியா முனைந்தது.

பயங்கரவாதத்தையே இதற்கான வியூகமாக இந்தியா வகுத்தது. அக்காலத்தில் சிறு சிறு பயங்கரவாதக் குழுக்கள் வடக்கில் இயங்கி வந்தன. இவர்களனைவரையும் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று பயங்கரவாத பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தென்னிந்தியாவில் இதற்காக பல முகாம்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் ஜே.ஆரின் ஆட்சியை ஸ்திரமற்ற நிலையை அடையச் செய்து ஜே.ஆர்.ஐ மண்டியிடச் செய்வதே இந்தியாவின் நோக்கமாக இருந்தது.

இந்த வியூகம் பலனளிக்காதென 1987 இல் புரிந்து கொண்ட இந்தியா நிகழ்ச்சி நிரலை மாற்றியமைத்தது. விமானம் மூலம் "பருப்பு ஆக்கிரமிப்பை" நடத்தி வட, கிழக்கை இணைக்கும் ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர்.ஐ பலாத்காரமாக இணங்கச் செய்தது. பின்னர் இந்திய இராணுவம் இங்கு அனுப்பி வைக்கப்பட்டதும் இந்த புதிய நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே ஆகும்.

இப்புதிய நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு முடியாமல் ராஜீவ் காந்தியின் கொலை தடுத்து நிறுத்தியது. அது மட்டுமல்லாது, ஜனாதிபதி பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்திய இராணுவம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதும் இன்னொரு காரணமாகும்.

இதுபோன்ற வியூகங்களால் கையை சுட்டுக் கொண்ட இந்தியா எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டுமென உபதேசித்துவிட்டு மௌனித்துக் கொண்டது.

பிரபாகரனினால் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போதும் இந்தியா தனது நேரு பனிக்கார் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததோடு நாட்டைப் பிரிக்கும் அதன் அபிலாஷையையும் கைவிடவில்லை.

புலிகளால் எமது இராணுவம் யாழ். குடாநாட்டுக்குள் முற்றுகைக்கு உள்ளான போது இந்தியா நடந்து கொண்ட விதம் இதற்கு சிறந்த உதாரணமாகும். எமக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்த போது இந்தியா என்ன பதில் அளித்தது. தேவையானால், மனிதாபிமான ரீதியில் இராணுவத்தினரின் உயிர்களைப் பாதுகாக்க கப்பல்களை அனுப்ப தயாராக இருப்பதாகவே பதிலளித்தனர்.

இதன் பின்னர் எமது பிரச்சினையில் தலையிடுவதை இந்தியா விலக்கிக் கொண்டது. இதற்கு முக்கியமான காரணம் எமது தலைவர்கள் அனுசரணையாளராக நோர்வேயை தேர்ந்தெடுத்ததாக இருக்கலாம் என்றாலும் நோர்வேயின் அனைத்து தீர்மானங்களும் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட வேண்டுமென்ற பிரசாரப்படுத்தாத ஒப்பந்தமொன்றை சொல்ஹெய்முடன் செய்து கொண்டது. எமது கோழைத் தனமான தலைவர்களும் நித்தம் அவர்களை சந்தித்து அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள்.

இன்று மீண்டும் எமது பிரச்சினையில் நேரடியாக தலையிடுவதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் காய்களை நகர்த்தி வருகிறது. அண்மையில் அன்டன் பாலசிங்கம் இந்தியாவிடம் மன்னிப்பு கோரியது எதற்காக என்பது பலர் மத்தியிலும் ஒரு கேள்விக் குறியை முன்வைத்தது. பாலசிங்கம் எதற்காக செய்தார்? யார் தேவைக்காகக் செய்தார்? என்ற வேறும் பல கேள்விக் கணைகளை தொடுத்தது.

இது பாலசிங்கத்தின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. விடுதலைப் புலிகள், நோர்வே, இந்தியா என்ற முக்கூட்டு சூழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையிலேயே ஆகும். இதற்கு காரணம் மீண்டும் இந்தியாவை நேரடியாக தலையிடுவதற்கான அழைப்பை விடுப்பதற்கான திட்டமாகும்.

பாலசிங்கம் மன்னிப்புக் கோரிய சில தினங்களுக்குள் இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை வந்து சொன்னது என்ன? யுத்தத்தை கைவிட்டு இந்திய முறையில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்வதற்கு தயாராக வேண்டுமென்றும் அதற்காக இந்திய நிபுணர்களின் உதவிகளையும் வழங்க முடியுமென்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்விற்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கமைய இந்தியா சென்ற ரணிலுக்கு அரச தலைவருக்கு வழங்கப்படும் வரவேற்பு கௌரவம் வழங்கப்பட்டது. ரணிலுடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவும் சென்றார். வழமையில் இது போன்ற நிகழ்வு இடம் பெறுவதில்லை.

ரணிலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் சோனியா காந்தி வெளியிட்ட கருத்தென்ன?

01. பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.க. சுதந்திரக் கட்சிகள் இணைய வேண்டும். அடிப்படை வாதக் கட்சிகளான ஜே.வி.பி.யையும் ஹெல உறுமயவையும் ஓரம் கட்டிவிட்டு அதிகாரப் பரவலாக்கலுக்கு இணங்க வேண்டும்.

02. பிரச்சினைக்கு யுத்தம் தீர்வல்ல.

03. யுத்தத்திற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்காது.

இந்த நிபந்தனைகள் மூலம் இறுதியாக இந்தியா விடுக்கும் செய்தி தான் என்ன?

ஈழத்திற்கு வழி சமைக்கும் சமஷ்டி முறை மூலம் நாட்டின் மூன்றிலொரு பகுதியையும் கடற்பிரதேசத்தில் மூன்றிலொரு பகுதியையும் நாம் தமிழ் இனவாதிகளுக்கு தாம்பாளத்தில் வைத்து கையளிக்க வேண்டியது என்பதாகும்.

மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா இணைந்து கொண்டு எமது நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கையில் தலையிட்டுள்ளது. இது இன்று வெளிப்படையாகத் தெரியும் உண்மையாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை அச்சுறுத்தி இதனை முன்னெடுப்பது முதலாவது முயற்சியாகும்.

அது தோல்வியடையுமானால், இந்த அரசாங்கத்தை கவிழ்த்து சந்திரிகாவையும் ரணிலையும் இணைத்து அரசாங்கமொன்றை அமைக்க முனையலாம்.

இந்தியாவின் வியூகங்களுக்கு நாம் எவ்வாறு முகம் கொடுக்கின்றோம் என்ற நிலையிலேயே எமது நாட்டின் எதிர்காலம் அமைந்துள்ளதென்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

http://www.thinakkural.com/news/2006/9/3/a...es_page9924.htm

அட்டகாசமாக விடயத்தை புரிந்து கொண்டார்கள்....! இனி என்ன இந்தியாவை தூற்றி வசைபாட பதிகங்களை எழுத ஆரம்பித்து இருப்பார்கள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.