Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கு பல்கலை மிக மோசமான நிலைக்கு சென்றமைக்கு கடந்த 30 வருட கால குழுக்களின் நடவடிக்கைளே காரணம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'பலம்வாய்ந்த ஆசிரியர் சங்கமாயின் எனக்கெதிராக எதுவும் செய்ய முடியுமா? சவால் விடுகிறேன்' உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா

kiddu_CI.jpg

கிழக்கு  பல்கலைக்கழகம் மிக மோசமான நிலைக்கு சென்றமைக்கு கடந்த 30 வருட கால  குழுக்களின் நடவடிக்கைளே காரணம் என கிழக்கு பல்கலைக்கழகத்தின்  உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா தெரிவித்துள்ளார்.

அந்த நிலை மீண்டும் தலைதூக்காத வகையில் செயற்பட வேண்டிய நிலையில் தாம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தற்போதை நிலை மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள மருத்துபீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இதன்போது, கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், ஜனநாயகத்துக்கும் அபிவிருத்திக்குமான கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

இங்கு கருத்து தெரிவித்த உபவேந்தர்,  'கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறு குழுக்களின் நடவடிக்கைகளில் அதிருப்தியுற்ற 101 விரிவுரையாளர்கள் அதில் இருந்து விலகி உயர் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். 

அதேபோன்று சில தினங்களுக்கு முன்னர் சிலர் மேற்கொண்டுவரும் குழப்ப நிலை தொடர்பில் சகல பீடாதிபதிகளும் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர். 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 157. இவர்களில் 36பேர் கற்கை விடுமுறையில் உள்ளனர். தற்போது கடமையாற்றும் 121 விரிவுரையாளர்களில் 101 உறுப்பினர்கள் இந்த ஆசிரியர் சங்கத்துக்கு எதிராக கடிதம் எழுதி உயர்கல்வி அமைச்சுக்கு அனுப்பியுள்ளனர். 

அந்தவேளையில் அந்த கடிதத்தில் கையெழுத்திடாதவர்களும் தற்போது எங்களுடன் இணைந்துள்ளனர். ஆசிரியர்கள் சங்கம் என்று கூறிக்கொள்பவர்களிடம் 13 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 

நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்களை ஏமாற்றவில்லை. கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு பங்களிப்பினை வழங்கியுள்ளோம். பௌதீக அபிவிருத்தி மற்றும் உள்ளக அபிவிருத்தி பலவற்றினை நாங்கள் செய்துவருகின்றோம். 

இதுவரை காலமும் தேங்கிக் கிடந்த விரிவுரையாளர்கள் நியமனங்கள், பதவி உயர்வுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்துவிட்டோம். இரு விரிவுரையாளர்களின் பதவி உயர்வு தொடர்பிலேயே பிரச்சினைகள் உள்ளது.  அது நீதிமன்றில் வழக்கு உள்ளதால் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கமுடியாது. 

நான் பதவியேற்ற இரண்டு வருடங்களில் பல திட்டங்களை மேற்கொண்டுள்ளேன். குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கிழக்கு பல்கலைக்கழகம் எட்டியுள்ளது.  பீடாதிபதிகளின் நூறுவீத ஒத்துழைப்புடனேயே இந்த வெற்றியை எங்களால் பெறமுடிந்தது. 

ஒரு சிலர் பல குழப்பங்களை ஏற்படுத்திவருகின்ற நிலையிலும் அவற்றினையெல்லாம் தாண்டி நாங்கள் எமது பணியை மேற்கொண்டுவருகின்றோம். 

குறிப்பாக சொல்லப்போனால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டம் பெற்றுச் செல்லும் ஒருவர் கடந்த காலத்தில் தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தார்.  ஆனால் இன்று கலைப்பீடத்தில் பல மாற்றங்கள் செல்லப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று மொழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியேறுவோர் சிறந்த தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்வி முதுகலைமாணி பாடநெறியை இப்பகுதியில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு சென்று பெற்றுவந்த நிலையில் இன்று அதனையும் எமது பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்துள்ளோம்.  இருவாரங்களில் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.  

அத்துடன் இந்துநாகரிக பீடம் தனித்துறையாக மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியை உயர்கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.  இதனை நான் எனது சொந்த முயற்சியின் ஊடாகவே பெறமுடிந்தது. இதேபோன்று பல தனித்துறைகளை பல்கலைக்கழகத்தில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

எனது பதவிக்காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தினையும் உருவாக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளேன். அதற்கான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

நான் பல்கலைக்கழகத்தில் இருந்து செல்லுமுன் அதற்கான அனைத்து வேலைகளையும் பூர்த்தியாக்குவேன். அல்லது பொறியியல் பீடத்தினை உருவாக்குவேன். 

இதேபோன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலை, கலாசார பீடத்துக்கு இதுவரையில் தனிக்கட்டிடம் எதுவும் இல்லாத நிலையே இருந்துவந்தது. எனினும் தற்போது அதற்கான தனிக்கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.  அது எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்படும். 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் இருந்த நிதி தொடர்பான ஊழல்களை நூறுவீதம் இல்லாமல் செய்துவிட்டோம். 

பல்கலைக்கழகத்தின் தாபன கோவைக்கு அமைவாகவே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரில் நல்ல தொழிற்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இதில் சிரேஸ்டம், கனிஸ்டம் பார்க்க முடியாது. திறமையும் தொழிற்படும் நிலையும் கருத்தில்கொள்ளப்பட்டு பல்கலைகழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

நான் பல்கலைக்கழக உபவேந்தராக கடமையேற்ற காலம் தொடக்கம் விரிவுரையாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 35 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நான்கு வளாகங்களில் 17 பட்டப்படிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு மேலதிகமாக புதிய துறைகள் ஏழு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மிகவும் நீண்டகாலம் பின்தங்கிய நிலையில் இருந்த எமது பல்கலைக்கழகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. 

இந்த நிலையில் எமது பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சீர்குலைக்க நினைக்கும் சிலர் தொடர்பில் நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. அந்த ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் சிரேஸ் விரிவுரையாளர் ஒருவர் உள்ள தாவரவியல் பீடத்தினால் இதுவரையில் ஒரு விரிவுரையாளரை உருவாக்க முடியாத நிலையே உள்ளது. 

37 வருடங்கள் பழமையான அந்த பீடத்தினால் இதுவரையில் ஒரு விரிவுரையாளரை உருவாக்க முடியாத நிலைக்கு யார் காரணம். இது தொடர்பில் நாங்கள் சிந்திக்க வேண்டியுள்ளோம். இது தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.  சில மாற்றங்களை செய்யவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. 

ஒரு சிலரின் எதிர்ப்புகளுக்காக எமது பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியை பின்தள்ள முடியாது. நாங்கள் எதிர்ப்புகளை மேற்கொண்டுவரும் சிலர் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். 

பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை குழப்பும் வகையில் செயற்படுவதன் காரணமாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளோம்.  தாபனகோவை அடிப்படையில் பல்கலைகழக பேரவைக்கு இது தொடர்பில் அறிவிக்கவுள்ளோம். 

என்னை கனேடிய பிரஜை என்றும் நான் உபவேந்தராக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். நான் கனேடிய பிரஜை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த நாட்டில் இந்த மாகாணத்தில் பிறந்தவன் வழந்தவன் என்ற அடிப்படையில் எனக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 

நான் பிறந்து வளர்ந்த மண்ணுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பிரஜையொருவர் உபவேந்தராக பதவி வகிக்க முடியாது என்று எந்த சட்டமும் இல்லை. என்னை ஜனாதிபதியே இந்த உபவேந்தராக நியமித்துள்ளார். 

இது சட்டத்துக்கு முரணான விடயமாக இருந்தால் இது நடந்திருக்காது. 

இதேபோல் நான் போனில் மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். அவ்வாறானால் அவர்கள் அதனை நிருபீக்கட்டும். நான் எந்த பிரதேசவாதமும் பல்கலைக்கழகத்தில் பார்ப்பதில்லை.  உண்மையை சொல்லப்போனால் எனது கதிரைக்கு ஆசைப்படும் சிலரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கு எமது சமூகம் தொடர்பிலான அக்கறைகள் இருக்காது. 

இவ்வாறு குற்றஞ்சாட்டும் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமானது பலம் பொருந்திய அமைப்பு என்றால் முடிந்தால் எனக்கு அவர்களால் ஏதாவது செய்யமுடியுமா என நான் சவால் விடுக்கிறேன்.

 

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/103917/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

துணைவேந்தர் பதவிக்காக.. எதுவும் சொல்லக் கூடியவர்கள் நம்மவர்கள். :D:icon_idea:


உலக தர வரிசையில்.. எங்க நிற்கிறீர்கள்.. என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.. படிப்பை விட மிச்ச எல்லாத்தையும் நல்லா கவனிக்கிறாங்க. :D

 

TOP-RANKED FOR REPUTATION
  • Harvard University
  • Massachusetts Institute of Technology
  • Stanford University
  • Cambridge University
  • Oxford University
  • University of California, Berkeley
  • Princeton University
  • Yale University
  • California Institute of Technology
  • University of California, Los Angeles

http://www.bbc.co.uk/news/education-26450955

 

http://www.timeshighereducation.co.uk/world-university-rankings/

 

"ஜனநாயகத்துக்கும் அபிவிருத்திக்குமான கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்."

இந்த கோமாளிகள் சங்கத்தின் நடவடிக்கைகள் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.