Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் ஒருவரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சந்தேகநபரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுவொன்று நேற்று பிற்பகல் தர்மபுரம் பகுதி வீடொன்றிற்கு சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து தப்பியோடிய சந்தேக நபரை தேடி பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 
 
 

ம்ம்ம்ம்..... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

gopi.jpg

கிளிநொச்சி, தர்மபுரத்தில், நேற்றுப் பிற்பகல், சந்தேக நபர் ஒருவரைத் தேடிச்சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்புப்பிரிவின் சிறப்புக் குழு மீதே, தர்மபுரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். 

இதையடுத்து, தப்பிச்சென்ற சந்தேக நபரைக் கைது செய்வதற்காக சிறிலங்கா படையினரும், காவல்துறையினரும் நேற்று பிற்பகல் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். 

குறிப்பிட்ட சந்தேக நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், சம்பவ இடத்தில் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. 

இதற்கிடையே, குறிப்பிட்ட சந்தேகநபர், தப்பிச் சென்ற பகுதியில் உள்ள, வீட்டை சிறிலங்கா காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளதாகவும், இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்த வீட்டில் இருந்த, தாயும் மகளும், தனியாக அடைத்து வைத்து விசாரிக்கப்பட்டனர்.

பாலேந்திரன் ஜெயகுமாரி என்ற பெண்ணும், அவரது 13 வயதுடைய மகளுமே இராணுவ, மற்றும் காவல்துறையின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

இவர்கள் இருவரும் நேற்றிரவு 10 மணியளவில், சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள்  தெரிவிக்கின்றன.

போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல்போன தனது கணவன் மற்றும் மகனுக்காக ஜெயக்குமாரி, அவரது மகள் விபூசிக்காவுடன் பல போராட்டங்களில் பங்கெடுத்தவராவார். 

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்திலும் பங்கெடுத்த்துடன், 'சனல்4' போன்ற பல அனைத்துலக ஊடகங்களில் காணாமற்போனோரின் உறவுகள் சார்பில் பகிரங்கமாக குரல் கொடுத்து வருபவர்களாவர். 

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில், தப்பிச்சென்ற, சந்தேக நபர், பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால், தேடப்படுவதாக அறிவிக்கப்பட்ட காசியன் அல்லது கோபி என்று அழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம் (வயது - 31) என்பவரே என்றும் தகவல்கள் கூறுகின்றன.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140314110132

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.