Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்போதும் கைதுசெய்யப்படலாமென்ற ஏக்கத்தில் முன்னாள் போராளிகள்: அவர்களுக்காக குரல்கொடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழர் தாயகத்தில் உள்ள முன்னாள் போராளிகள் தாங்கள் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சுகின்றனர். இவர்களுக்காக கவிஞர்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

செல்வக்குமாரின் ஊசல் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா யாழ். நாவலர் வீதியிலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது அங்கு உரையாற்றுகையிலே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வட்டுக்கோட்டைப் பகுதியில் சனிக்கிழமை சிறிலங்கா படையினரால் 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் 2 விளையாட்டு மைதானங்களுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பில் எமக்கு தொலைபேசியில் தகவல் கிடைத்த நிலையில், நானும் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் உள்ளிட்டோரும்; அங்கு சென்றோம்;. இதன்போது, இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினரிடம் கேட்டபோது, அண்மையில் கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நடந்த அசம்பாவிதத்துடன் தொடர்புடைய நபர் இங்கு வந்து போயுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் அல்ல. இங்கு என்ன நடக்கின்றது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், நாங்கள் வெளியே சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலைக்குள் இருக்கின்றோம்.

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட விபூசிகா மற்றும் அவரது தாயார் ஜெயக்குமாரி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளார். தானும் தனது தாயாரும் தங்கள் வீட்டில் வைத்து தலைமயிரில் பிடித்து இழுக்கப்பட்டு கன்னங்களில் அறைந்து, சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தான் இப்போது பூப்படைந்துள்ளதால் தனது தாயை விடுதலை செய்யுமாறும் கூறியுள்ளார்.

அப்பாவிகளான அந்த தாயையும் மகளையும் சிறிலங்கா அரசாங்கம் இன்று பிரித்து வைத்திருக்கின்றது. இது அரசு வசனம் எழுதி, அரசே இயக்கி நடிக்கும் ஒரு நாடகம். அதில் நடிகர்களாக அரசின் புனர்வாழ்வு முகாம்களிலிருக்கும் முன்னாள் போராளிகள் சிலர் விரும்பியும் விரும்பாமலும் நடிக்கக்கூடும். ஜெனீவாவில் அரசுக்கு ஏற்படப்போகும் தாக்கங்களிலிருந்து தன்னை விடுவிப்பதற்காகவே இந்த அரசு இவ்வாறான புலிப்பூச்சாண்டியை காண்பிப்பதற்கு முயற்சிக்கி;றது. ஆனால், இங்கு பாதிக்கப்படப் போகிறவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் நிர்க்கதிக்கு ஆளாகியுள்ள எமது உறவுகள் தான்.

தாங்கள் எந்நேரமும் கைதுசெய்யப்படலாமென்று முன்னாள் போராளிகள் அஞ்சுகின்றனர்;. இவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது, கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் கடமைமையென்று நினைக்கிறேன்.

புதுவை இரத்தினதுரை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்றதற்கு அப்பால், அவர் எமது கவிஞர் அல்லது படைப்பாளியென நினைத்து எமது படைப்பாளிகள் எவரும் அவருக்காக குரல்கொடுக்க வரவில்லை. அவர் எங்;கேயென்று யாரும் கேட்கவில்லை. அந்த வகையில், புதுவை இரத்தினதுரை மழுங்கடிக்கப்பட்டு விட்டார்.

எந்த அமைப்பு எந்த இயக்கம் என்ற எண்ணமின்றி அனைவரும் படைப்பாளிகள் என்ற வகையில் எல்லோருக்கும் குரல் கொடுக்க வேண்டும். படைப்பாளிகளுக்கு அப்பால் மிக இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுக்கக்கூடிய இக்கால கட்டத்தில் எமது முன்னாள் போராளிகள் மீண்டும் சிறைக்கு செல்லாதிருக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.