Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னிப்பும் கோரமாட்டோம், நட்டஈடும் கொடுக்க முடியாது! – அமைச்சர் ரிஷாத்துக்கு பொதுபல சேனா பதில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பும் கோரமாட்டோம், நட்டஈடும் கொடுக்க முடியாது! – அமைச்சர் ரிஷாத்துக்கு பொதுபல சேனா பதில். 

[Thursday, 2014-03-27 18:54:01]
gnanasara-270314-150.jpg

எவருக்கும் ஐந்து சதமேனும் நஷ்டஈடாக வழங்கப் போவதும் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதுமில்லையென பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்றும் எனவே, தேரர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் 500 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப் போவதாகவும் அதற்கான சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கலகொட அத்தே ஞானசார தேரர்-

  

யுத்தத்தால் முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்கள், சிங்களவர்கள் என அனைத்து இனத்தவர்களும் இடம்பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை வடக்கில் அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியேற்ற வேண்டும். அதைவிடுத்து தேசிய ரீதியாக பாதுகாக்கப்படும் வில்வத்து உட்பட வனாந்தரங்களை அழித்து முஸ்லிம் மக்களை மீள் குடியேற்ற இடமளிக்க முடியாது. இவ்வாறு வனாந்தரங்களை அழித் ததன் காரணமாகவே இன்று இலங்கையின் காலநிலை மாற்றமடைந்து உஷ்ணமான காலநிலை நிலவுகிறது. இதனால் இயற்கை சூழல் பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது மனிதர்களும், மிருகங்களும் அழியும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு குடியேற்றங்களை மேற்கொள்வோர் மாமிசம் உண்பவர்கள். அவர்களுக்கு மிருக உயிர்களின் வலி, உயர்வு தெரியாது. இயற்கை சூழலின் சுகாதாரத்தன்மை தெரியாது. எனவே, வனாந்தரங்களை அழிக்க எந்தக் கொம்பனுக்கும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை, எவருக்கும் ஐந்து சதத்தையேனும் நஷ்டஈடாக வழங்கப் போவதும் இல்லை.நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதுமில்லை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106578&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.