Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இனம்' படத்திலிருந்து 5 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது - திரையிடத்தயாராகிறார் இயக்குநர் லிங்குசாமி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'இனம்' படத்திலிருந்து 5 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது - திரையிடத்தயாராகிறார் இயக்குநர் லிங்குசாமி! 

[saturday, 2014-03-29 14:18:09]
Enam-cut-cut-200-ready.jpg

ஈழத் தமிழர்களின் இன்னல்களைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன், என்று கூறிக்கொண்டு ஒட்டு மொத்த தமிழர்களின் காதுகளில் 'இனம்' படத்தின் மூலம் பூவைச்சுற்றிவிட்டார் இயக்குநர் சந்தோஷ் சிவன். தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட பல காட்சிகளைக் கொண்ட இப்படத்திற்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்று சிலர் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

  

இந்த நிலையில், இனம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டதாக, படத்தை வாங்கி வெளியிட்ட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து இயக்குநர் லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே 'இனம்' திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம். இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதைத் தொடர்ந்து 'இனம்' படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காட்டினோம்.

படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கேட்டுக்கொண்டதன்படி, 'பள்ளிக்குடட்க் காட்சி', 'புத்தமதத் துறவி தமிழ்க்குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி', 'சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி', 'தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம்', 'படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல்' ஆகிய 5 காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று லிங்குசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=106699&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
‘இனம்’ அல்ல இழிவு! தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு களங்கம் கொலைகார புத்த பிட்சுகளுக்கு மகுடம் கேரள இயக்குநரின் ஈனத்தனமான வேலை வைகோ அறிக்கை!
மார் 30, 2014
 
 ‘இனம்’ எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ்சிவன் இயக்கி உள்ளார். ‘பயங்ரவாதி’ என்ற பெயரில் அவர் முன்பு வெளியிட்ட திரைப்படம், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, கேவலமான முறையில் சித்தரித்தது.
 
இப்பொழுது அவர் இயக்கிய ‘இனம்’ எனும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் புகழேந்தி தங்கராசு என்னிடம் அதுகுறித்து விவரித்தபோது, தாங்கமுடியாத அதிர்ச்சிக்கு ஆளானேன்.
 
ஈழ விடுதலைப்போரையும், அங்கு ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.
 
சிறுவர்களும் இப்படம் பார்க்கலாம் என்ற ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படத்தில், சின்னஞ் சிறுவர்களும், சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், தங்க வைக்கப்படும் இடங்களில் அவர்கள் அச்சிறு வயதிலேயே பாலியல் இச்சைக்கு ஆட்பட்டு, சேட்டைகள் செய்வதாகவும் எடுக்கப்பட்டுள்ள விதம் காம இச்சையைத் தூண்டும் வகையில் கீழ்த்தரமாக அமைந்துள்ளன. அச்சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயச் சூழ்நிலை இருந்ததாகவும் படம் கூறுகிறது.
 
பாடசாலை வகுப்பு நடக்கும்போது, கரும் பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு அபாண்டமான பொய்யை காட்சியாக்குகிறார்.
 
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது, ஒரு இளந்தமிழ் பெண் சிங்களவர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக ஒரு காட்சியை அமைத்துவிட்டு, அதன் பிறகு கால்களின் மூட்டுகளுக்கு மேல் அந்த அபலைப் பெண்ணின் அங்கங்களை பெருமளவுக்கு காண்பித்துவிட்டு, அப்பெண் நீரால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்வதாக அமைத்துள்ள காட்சி வக்கிர புத்தி படைத்தவர்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குளத்துத் தண்ணீரில் அந்தப் பெண் நிற்கும்போது உடைக்கப்பட்ட ஒரு புத்தர் சிலையின் தலையும் முகமும் கரையில் தெரியும் வகையில் காட்டப்பட்டுள்ளது..
 
இனியொரு காட்சியில், ஓடையில் வரும் நீரை, குடிப்பதற்காக குவளையில் புத்த பிட்சு நிரப்புவதாகவும், குடுவையின் வாயில் துணியை வைத்துப் பிடிப்பதாகவும், குடுவையின் வாய்ப் புறத்துத் துணியில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் ஓடை நீரிலேயே உயிருடன் நீந்த விட்டுவிடுவதாகவும் காட்சி சித்தரிக்கிறது.
 
இதன் நோக்கம் என்ன? புத்த பிட்சுகள் மனிதாபிமானிகள் என்றும், தமிழர்கள் புத்தர் சிலையையே உடைப்பவர்கள் என்றும் தமிழ் இனத்தின் மீது களங்கம் சுமத்துவதுதான் நோக்கம் ஆகும்.
 
இலங்கையில் கடந்த 66 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதற்கும், போடப்பட்ட ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டதற்கும், ஐ.நா. சபை பிரதிநிதிகள் தாக்கப்பட்டதற்கும், இரத்த வெறிபிடித்த புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.
 
2170 இந்து கோயில்களை சிங்களவர்கள் இடித்துத் தகர்க்க புத்து பிட்சுகளே ஏவினார்கள்.
 
கிறித்துவ தேவாலயங்கள் உடைக்கப்பட்டதற்கும், அண்மைக் காலமாக இசுலாமிய மசூதிகள் தாக்கப்படுதற்கும் முழுக்க முழுக்க புத்த பிட்சுகளே காரணம் ஆவார்கள்.
 
இத்திரைப்படத்தில் கதைக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத ஒரு காட்சியை அமைத்து, நந்திக் கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து கிடந்ததாக படம் தெரிவிக்கிறது.
 
மொத்தத்தில் சிங்களக் கொலைகார அரசின் மறைமுகப் பின்னணியில், அந்த அரசின் கைக்கூலியாக கேரளத்து சந்தோஷ்சிவன் படத்தை இயக்கி உள்ளார்.
 
சமீப காலத்தில் வெளியான சில காணொளிகள் எப்படி எல்லாம் ஈழத் தமிழ் பெண்களும், இளைஞர்களும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நிருபிக்கின்றன. அதிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கோர காட்சிகளை கண்களால் காண முடியாது. அந்த சம்பவம் பற்றி நாவால் கூற முடியாது. காதுகளால் கேட்க முடியாது.
 
நெஞ்சு கொதிக்கிறது. தன்மானத் தமிழ் இரத்தம் துடிக்கிறது. மலையாளிகளைக் கொச்சைப்படுத்தி, இதுபோன்ற திரைப்படத்தைத் தயாரித்து கேரளத்தில் வெளியிட யாராவது முனைவார்களா?
 
தமிழர்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? சொரணையற்ற ஜென்மங்களா?
 
இளம் தமிழர்களே, மாணவர்களே சிந்தியுங்கள். இந்தத் திரைப்படம் தமிழகத்துத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம் என்பதை உணர வேண்டுகிறேன்.
 
உன்னதமான திரைக் காவியங்களை நான் பெரிதும் மதிப்பவன். ஏன், மலையாள மொழியில் வெளியான தகழி சிவசங்கரன் பிள்ளையின் ‘செம்மீன், வடக்கன் வீரகதா 1921, நாயர் ஷாப், துலாபாரம், பழசிராஜா’ போன்ற படங்கள், சிறந்த கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால் நடித்த திரைப்படங்கள் போன்றவற்றின் பரம இரசிகன் ஆவேன் நான். மனித குலத்துக்கு நல்வழிகாட்டும் திரைப்படங்களை பெரிதாக மதிப்பவன் நான்.
 
ஆனால், திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
 
தமிழ்நாட்டில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’ எனும் திரைப்படத்தை திரையிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
30.03.2014 மறுமலர்ச்சி தி.மு.க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.