Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேட்பாரற்று நாதியற்று இருக்கும் சமூகத்திற்கு சட்டம் எங்கே நீதி எங்கே துணைபுரியப் போகிறது?

Featured Replies

8ஆவது தடவையாக முல்லை நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு:

யுத்த வீரனாக மாறிய அரசசட்டத்தரணி சிகான்டீசில்வா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

சரணடைந்தவர்களை தேடி அலையும் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு 8 ஆவது தடவையாக முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று (02.04.14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே வவுனியாவில் 4 தடவையும் இன்றுடன் முல்லைத்தீவு நீதிமன்றில் 4ஆவது தடவையாகவும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.

தம்மால் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக 12 நேரடி உறவுகளால்  கொண்டுவரப்பட்ட இந்த ஆட்கொணர்வு மனுவில் 5 பேருடைய மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டு பின்னர் 3 எனக் கூறப்பட்டு இறுதியாக ஒருவருடைய மனுவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

தனது மகள், மருமகன், 2 சிறிய பேரக் குழந்தைகளை படையினரிடம் நேரில் கையளித்த கந்தசாமி பொன்னம்மா என்ற வயோதிபப் பெண்ணின் ஆட்கொணர்வு மனுவே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியற் துறையில் கடமையாற்றிய முரளீதரன் அவரது மனைவி, இரண்டு குழந்தைகளை ஆஜர்படுத்துமாறே முரளீதரனின் மாமியார் கந்தசாமி பொன்னம்மா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவரை குறுக்கு விசாரணை செய்த அரசாங்க சட்டத்தரணி யுத்தகாலத்தின் போர் வீரனாக நீதிமன்றில் காட்சி அளித்ததாக நீதிமன்றில் கூடியிருந்தோர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தனர்.

சிகான் டீ சில்வா என்ற இந்த அரச சட்டத்தரணி மனுத்தாரர் கந்தசாமி பொன்னம்மாவை குறுக்கு விசாரணை செய்த போது பல்லைக் கடித்தவாறு உறுமி அவரை பயமுறுத்தும் பாணியில் கேள்விகளை கேட்டதாகவும் எனினும் அந்தப் பெண் 1மணித்தியாலம் 30 நிமிடம வரை நின்றவாறு சளைக்காது பதில் அளித்ததாகவும் அவருக்காக வாதாடிய சட்டத்தரணிகள் ரட்ணவேல் மற்றும் அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் எதிர்வாதங்களை துணிவுடன் முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அரசாங்க சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட பல கேள்விகளில் 2009ல் சரணடைந்து காணாமல் போனதாக கூறுகின்ற நீங்கள் 2012ஆம் ஆண்டுவரை எதுவித முறைப்பாட்டையும் செய்யவில்லையே அதுவரை என்ன செய்தீர்கள்?

முறைப்பாட்டில் சரடைந்தது எனக் கூறப்படவில்லை காணாமல் போனதாக கூறப்பட்டு உள்ளதே அவ்வாறாயின் சரணடைந்தது என எவ்வாறு கூறுவீர்கள்?

நீங்கள் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதங்கே இவ்வாறான ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்துள்ளீர்கள் என சிகான்டீ சில்வா சீருடை அணியாத போர்க்களத்து ராணுவ அதிகாரியாக அடுக்கடுக்கான கேள்விகளினூடு மனுதாரரை மிரட்டியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது.

2009ல் சரடைந்தவர்களை காணவில்லை என நேரடி ரத்த உருத்துடையோர் மட்டுமே முறைப்பாடு செய்ய முடியும்...

வவுனியா முகாம்களில் அடைத்து வைத்து வெளியில் செல்ல முடியாது உள்ளிருந்தவர்கள் எங்கே முறையிட முடியும்?

இறுதிக்கட்ட யுத்தத்தில் மிகக் கொடடூரமாக நடந்து கொண்ட 58ஆவது படை அணிக்கு எதிராக அன்றைய சூழலில் வழக்குத் தொடர பாதிக்கப்பட்ட எவர் துணிவர்?

அப்பாவிகளாய் வன்னியில் வெளி உலகத் தொடர்புகள் இன்றி இருந்த அந்தப் பெண்ணுக்கு ஆட்கொணர்வு மனு என்று ஒன்று இருப்பது தெரியுமா?

யுத்தக் கொடுமையில் இருந்து வெளிவந்த ஒரு சில மாதங்களில் அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய  யார் துணிவர்?

வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்கள் அனைத்திலுமே சிங்களத்திலேயே இப்போதும் முறைப்பாடுகள் பதியப்படும் நிலையில் 2012ல் எந்தப் பொலிஸ் நிலையத்தில் தமிழில் முறையிட முடியும்....?

சரணடைந்ததாக தான் கொடுத்த வாக்கு மூலம் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்டு கையொப்பம் பெறப்பட்டதாக பொன்னம்மா கூறுகையில் சிகாண்டி சில்வா இராணுவ பாணியில் அதட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

கேட்பாரற்று நாதியற்று இருக்கும் சமூகத்திற்கு சட்டம் எங்கே நீதி எங்கே துணைபுரியப் போகிறது?

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105072/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.