Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடல் வழியில் ஊடுருவல் என வடக்கு மீனவர்களுக்கு புதுக் கதை கட்டுகிறது இராணுவம்

Featured Replies

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கும் அங்கிருந்து இங்குமாக கடலால் போக்குவரத்துச் செய்கிறார்களென புதிய விளக்கமொன்றினை அளித்துள்ளது இலங்கை அரசு. வடக்கே உள்ள மீனவர்கள் இனிமேல் கடலுக்குச் சென்று மீன்பிடிப்பதற்கு கடற்படையினரிடம் அல்லது இராணுவத்தினரிடம் பாஸ் பெறும் நடைமுறை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட உள்ளது.

போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் படிப்படியாகவே, மிக மெதுவாகவே மீன்பிடிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இப்போது ஜெனிவாவில் இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள்சபை விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் மீன்பிடிக்கான பாஸ் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாகப் படையினர் தம்மிடம் தெரிவித்தனர் என்று மீனவ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நேற்றுமுன்தினம் இரவு முதல் கரையோரப் பகுதிகளில் படையினரின் ரோந்து அதிகரிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேவேளையில் கரையோரப் பகுதிகளில் காவலரண்களை மீண்டும் நிறுவும் பணிகளில் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

பண்ணையில் இவ்வாறு உயரமான கண்காணிப்புக் கோபுரங்களைக் கடந்த சில நாள்களாகப் படையினர் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் அரியாலை மற்றும் மாதகல் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களிடம், மீண்டும் பாஸ் நடைமுறையைக் கொண்டு வரப்போகிறார்கள் என்று படையினர் தெரிவித்துள்ளனர். மாதகல் பகுதி மீனவர்களை நேற்றுப் படையினர் சந்தித்துக் கலந்துரையாடினர். அப்போது, மீனவர்களின் நலனுக்காவே தாம் பாஸ் நடைமுறையை மீண்டும் கொண்டு வருகிறார்கள் என்று படையினரி கூறியுள்ளனர்.

உங்களின் பாதுகாப்புக்காத்தான் இந்தப் பாஸ் நடைமுறை. இங்கிருந்து இந்தியாவுக்கும் அங்கிருந்து இங்குமாகக் கடலால் போக்குவரத்துச் செய்கிறார்கள். தங்கம் கஞ்சா என்பவற்றையும் கடத்துகிறார்கள். இவற்றையெல்லாம் தடுப்பதற்காகத்தான் மீண்டும் பாஸ் முறையைக் கொண்டு வருகின்றோம் என படை அதிகாரி தம்மிடம் தெரிவித்தார் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவப் போகிறார்கள் என்று மேலிடத்தில் இருந்து தமக்குத் தகவல் வந்ததால் தாம் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறார்கள் என்று அரியாலையில் உள்ள படையினர் தம்மிடம் தெரிவித்தனர் என்றும் அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.Fishman-Jaffna-600x450.jpg

 

http://www.jvpnews.com/srilanka/64112.html

 

வடக்கில் 82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளது:- ருவான் வணிகசூரிய

கடல் வழி போதைப் பொருள் கடத்தல் வர்த்தகத்தை தடுக்க நடவடிக்கை - கோசல வர்ணகுலசூரிய

வடக்கில் இன்னும் 82 சதுர கிலோ மீற்றர் பரப்பிலேயே கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.


கண்ணிவெடி அகற்ற வேண்டிய 2004 சதுர கிலோ மீற்றரில் 82 சதுர கிலோ மீற்றரே எஞ்சியுள்ளது. அதுவும் வனப்பகுதி என அவர் குறிப்பிட்டார்.


கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவதாக கொழும்பில் இன்று (02.02.14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.


கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளைவிட கண்ணிவெடி அகற்றும் பணிகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


இதேவேளை, கடல் வழியாக இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.


புலனாய்வு துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் அதிக போதைப் பொருள் வர்த்தக கொடுக்கல் வாங்கல் சர்வதேச கடல் எல்லையில் இடம்பெறுவதால் அதனை தடுக்க தமக்கு வழி இல்லை என அவர் குறிப்பிட்டார்.


அத்துடன், ஒவ்வொரு மீன்பிடி படகுகளையும் சோதனை செய்ய முடியாது எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105075/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.