Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தின் பின் கோபி - தேவியன் - அப்பன் - நாடகத்தின் பாகம் 2 - பொறிக்குள் சிக்குமா TNA?

Featured Replies

"நான் சொன்னதைப்போல ஜெனீவா முடிய மூன்றுபேருக்கு வெடி விழுந்தது" கருணா:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Gota%20Karuna_CI.jpg

முதற் பதிவேற்றம்:- 04-2014 - 15:27

'நான் சொன்னதைப்போல ஜெனீவா முடிந்த பின்னர் இரண்டு ஒரு பேருக்கு வெடி விழுந்துள்ளது' என கருணா எனப்படும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது,  'தமிழ் கட்சிகள் மக்களை உசுப்பேத்தி வேடிக்கை பார்த்து திரும்பவும் எங்கேயும் வெடி கொண்டு போகும் முயற்சிகளில்தான் ஈடுபடுகின்றன என்று தெரிவித்த அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பே மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முனைகிறது' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் வெளிப்படையாக ஒரு விடயத்தை கூறுவதாக தெரிவித்த அமைச்சர் கருணா மூன்று மாத்திற்கு முன்பாகவே ஜெனீவா முடிந்ததும் இரண்டு ஒரு பேருக்கு யாழ்ப்பாணத்தில் வெடி விழும் என்று முற்கூட்டியே குறிப்பிட்டிருந்ததையும் நினைவுபடுத்தினார்.

'அங்குள்ள அரசியல்வாதிகளே அவர்களை இவ்வாறு நடத்தினர் என்று குற்ப்பிட்ட அமைச்சர் கருணா தமிழ் தேசியக் கூட்டமைப்பால் மூன்று பெடியன்கள் காட்டில் ஆயுத்துடன் ஓடி வெடி வைத்து இப்போ பெரும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என்றும்  குறிப்பிட்டார். 

இது தேவையற்ற வேலை என்று தெரிவித்த கருணர் இதனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ் அரசியல்வாதிகள் தங்களை தக்க வைத்து மக்களை ஏமாற்றுவதைத் தவிர இதனால் எதுவும் உருப்படியாக நடைபெறப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105719/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்
யாழ் மாவட்ட TNA எம்.பியைக் கைது செய்ய! புதுக் கதையுடன் TNA மற்றும் அரசாங்கம்…

நெடுங்கேணியில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்று தெரிவித்து சுட்டுக்கொல்லப்பட்ட கோபி அப்பன் உட்பட மூவரையும் அதற்கு முன்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் பாதுகாத்து மறைத்து வைத்திருந்து போக்குவரத்து வசதியும் செய்து கொடுத்தாராம். இந்தத் தகவலை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்கா கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருக்கின்றார்.

இதன் பின்னனியை ஆராய்ந்தால் யாழ் மாவட்டத்தில் மக்கள் செவ்வாக்குடைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு நீண்ட நாள் சந்தர்ப்பம் பார்த்து வந்ததாகவும் அதனை சாதகமாக்கிக் கொள்ள கோபின் கைதை காரணம் காட்டியுள்ளதுடன் அதில் சில தகவல்கள் கைத் தொலைபோசி மூலம் கிடைத்ததாக உறுதிப்படுத்துவதாக எஸ்.பி குறிப்பிட்டதன் பின்னனியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய மற்றும் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ் மாவட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய வேண்டும் என பாரிய அழுத்தம் கொடுப்பதாகவும் இதற்குரிய தகவல்களைப் பரிமாறும் ஒருவராக எஸ்.பியைப் பயன் படத்துவதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பெயர் குறிப்பிடாத அதிகாரி குறிப்பிட்டதுடன்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த செலில் ஈடுபட்டாரா அல்லது இல்லையா எனத் தெரிளாத சூழலில் அவரை கைது செய்யும் படியும் அவரின் கடந்த கால செயற்பாடுகள் முழுவதும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாய் இருந்தது அரசுக்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டதுடன் அதன் ஒரு வெளிப்பாடாகவே இவ் உரை அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். அவரின் உரையை அவதானிக்குமிடத்து

கோபியிடமிருந்து கைத்தொலைபேசி ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் என்றும் அதன் மூலம் சம்பந்தப்பட்ட எம்.பிக்கும் கோபி தரப்பினருக்கும் உள்ள தொடர்பு அம்பலத்துக்கு வந்துள்ளது என்றும் – அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த எம்.பி. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரபாகரனை பாராட்டிப் பேசினார் என்றும் – 2014 ஆம் ஆண்டுக்கான வரவு.

செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மாவீரர் தின உரை ஒன்றை நிகழ்த்த முயன்றார் என்றும் – அதைத் தாம் உடனடியாகவே சபையில் கண்டித்தார் என்றும் – அமைச்சர் மேலும் கூறினார் சம்பந்தப்பட்ட எம்.பி. மட்டுமல்ல மேலும் பலர் கோபியுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது தெரியவந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/65825.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்கும் நிச்சயமாக ஒரு வெருட்டு உண்டு. அடுத்த முறை ஜெனிவா பக்கம் தலை காட்டாமல்  அனைவரையும் பயமுறுத்துகிறது சிறிலங்கா அரசு.

கூட்டமைப்புக்கும் நிச்சயமாக ஒரு வெருட்டு உண்டு. அடுத்த முறை ஜெனிவா பக்கம் தலை காட்டாமல் அனைவரையும் பயமுறுத்துகிறது சிறிலங்கா அரசு.

நல்ல விடயம்.

உலகத்திற்கு தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்று தெரிய வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.