Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்காவிற்கு ரா ரா.. பாய் பாய் சொன்னது சிங்களம்: மீண்டும் வேதாளம் தெரிவுக்குழுவில் தொங்கியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவை களட்டிவிட்ட சிங்களம்.

 

sl%20flag_1.jpg?itok=zyJXZ_ML

 

தென் ஆபிரிக்காவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்வும், பேச்சு வார்த்தையும் அமையும் என சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. 

 

இதன்மூலம் தென்னாபிரிக்காவை வழமை போன்று களட்டிவிட்டுளது  சிறிலங்கா.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சின் போது  தலைமை தாங்கியவரும், கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்குச் சென்ற அரசதரப்புக் குழுவுக்கு தலைமை தாங்கியவருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே மேற்படி தென்னாபிரிக்காவின் பங்களிப்பினை தேவை அற்றது எனக் கூறியுள்ளார். 

 

இலங்கை அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தலையிட்டது. அதற்கமைய தென்னாபிரிக்க ஜனாதிபதி இலங்கை விடயங்களை கையாள்வதற்காக சிறப்புப் பிரதிநிதியாக சிறில் ரமபோ­வை நியமித்திருந்தார்.   

 

சிறில் ரமபோ­வின் அழைப்பை ஏற்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரச தரப்பினர் சென்றிருந்தனர். அதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடந்த வாரம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றனர். 

 

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்க அனுசரணையில் இலங்கை அரசுடனான பேச்சுக்குத் தயார் என்று அறிவித்திருந்தது.   இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றோம். 

 

எனினும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று தெரிவித்தார்.

 

http://www.eelanatham.net/articles/2014/04/16/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவா நாடகத்துக்கு ஊறுகாய் தென்னாபிரிக்கா.. தீர்மானம் சரிவந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அலைக்கழிச்சிருப்பினம்.. பாவம் தென்னாபிரிக்கா.. :D

ஜெனீவா நாடகத்துக்கு ஊறுகாய் தென்னாபிரிக்கா.. தீர்மானம் சரிவந்திருந்தால் இன்னும் கொஞ்சம் அலைக்கழிச்சிருப்பினம்.. பாவம் தென்னாபிரிக்கா.. :D

 

ஏற்கனவே தென்னாபிரிக்க முன்னாள் தலைமை நீதிபதியிடம் சிங்களவன்  நன்கு மாட்டிகொண்டான். மீண்டும் அடுத்த தென்னாபிரிக்க உப ஜனாதிபதியிடமா பொல்லு கொடுத்து அடிவாங்குவான் சிங்களவன். ராமபோசா தாங்கள் கொடுக்கிற சமபோசாவை மட்டும் சாப்பிட்டு போகும் மலையாழி அல்லவென்பது சிங்களவனுக்கு நன்கு தெரியும். என்ன இருந்தாலும் தென்னாபிரிக்காவின் தலைமை நீதிபதியிடமும் உபஜனாதிபதியிடமும் ஒரே நேரத்தில் தலையை கொடுப்பதற்கு சிங்களவன் அவ்வளவு முட்டாளா என்ன.  :D  :D  :D  :lol: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.