Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய இடத்தில் கிளிநொச்சிப் பேரூந்து நிலையத்தை அமைப்பதே பொருத்தமானது!

Featured Replies

 

Kili%20Bus1_CI.jpg

 

கிளிநொச்சி போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நகரம். பல்வேறு சவால்களைத் தாண்டி இப்போது வளர்ச்சி பெற்றுவருகிறது. கிளிநொச்சி நகரத்தில் பேரூந்து நிலையம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலமையே தொடர்கிறது. பொருத்தமான இடமின்மையாலும் போதிய இடமின்மையாலும் ஒரு பேரூந்து நிலையம் இல்லை என்பதுவே கிளிநொச்சியின் பெரும் பிரச்சினையாக உள்ளது.

கிளிநொச்சி டிப்போ வீதியில் உள்ள வீதியின் அருகான பகுதியே தற்போது பேரூந்துநிலையம் இயங்குகிறது. வீதியின் இரண்டு மருங்கிலுமே தனியார் பேரூந்துகள் தரித்து நிற்கின்றன. குறிப்பாக மழை காலங்களில் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்கின்றனர். நிழற்கூடாரங்கள் எதுவுமற்ற அந்த வீதியில் மரங்களின் கீழாக நின்று மழையில் நனைந்தவாறே பேரூந்தில் ஏறுகின்றனர்.

தற்போதுள்ள பேரூந்து நிலையத்தில் மலசலகூடம் இன்றி பெண்களும் குழந்தைகளும் பெரும் அல்லல்படுகின்றனர். வட பிராந்திய போக்குவரத்து சபைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பழைய பேரூந்துகள் தரித்து நிற்கின்றனவே தவிர அங்கு மக்கள் தரித்திருக்க இடம் இல்லை. இளைப்பாறவோ, மலசல தேவைகளை நிவர்த்தி செய்யவோ இடமில்லாமல் மக்கள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

கிளிநொச்சியிலிருந்து முழங்காவில், பூநகரி, உருத்திரபுரம், வட்டக்கச்சி போன்ற கிளிநொச்சியின் தூர இடங்களுக்கான அரிதான பேரூந்துகளில் பயணிப்பவர்கள் மாத்திரமின்றி கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி என நீண்ட தூரங்களுக்குச் செல்பவர்களும் இந்த நிலையத்திற்கு வருகின்றனர். பேரூந்து நிலையம் ஒன்று இல்லாமையினால் ஏ-9 வீதி ஓரமாகவே பயணிகள் நிற்கின்றனர்.

மீள்குடியேற்றம் தொடங்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் ஆகின்ற நிலையில் இன்னமும் பேரூந்துநிலையம் ஒன்றை நிரந்ரதரமாக அமைக்க முடியாத நிலமையே காணப்படுகிறது. கிளிநொச்சி நகரத்தில் தொடரும் பேரூந்து நிலையப் பிரச்சினைக்கு முடிவாக கிளிநொச்சியைச் சேர்ந்த கல்விமான்கள், முன்னாள் அரச உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஒரு யோசiயை முன் வைக்கின்றனர்.

விரைவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு செல்லவுள்ளது. அரச அதிபர் அலுவலகம் அங்கு சென்றவுடன் தற்போது கிளிநொச்சி பிரதேச சபை அலுவலகம் இயங்கும் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து பிரதேச சபை அலுவலகத்தை பழைய அரச அதிபர் இல்லத்திற்கு மாற்றிவிட்டு பிரதேச சபை அலுவலகம் இயங்கிய பழைய பேரூந்து நிலையத்திற்கே மீண்டும் பேரூந்து நிலையத்தை கொண்டு செல்லுவதே பல்வேறு வகையிலும் பொருத்தமாகவும் சிறப்பாகவும் அமையுமென கருதுகின்றனர்.

கிளிநொச்சியின் பழைய பேரூந்து நிலையமே கிளிநொச்சி நகர அமைப்புக்கு உரியாகவும் பொருத்தமாகவும் காணப்படுகிறது. அத்துடன் அதற்கு அருகில் புகையிரத நிலையம் அரச அதிபர் அலுவலகம், சர்வதேச விளையாட்டு அரங்கு, பிரதேச சபை, பிரதேச செயலாளர் அலுவலகம், நூலகம், பொலிஸ்நிலையம் என்று அனைத்து முக்கிய அலுவலங்களும் அமைந்தள்ளன. இதுவே பேரூந்து நிலையத்தை அமைக்கப் உகந்த இடம் என்று பலரும் கருதுகின்றனர். 

கிளிநொச்சிக்கு வரும் அல்லது கிளிநொச்சியிலிருந்து செல்லும் எந்தவொரு பேரூந்தும் பொதுச்சந்தையை கடந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் செல்லுகின்றது. கிளிநொச்சியின் அனைத்து அலுவலகங்களும் ஏ-9 பாதையை மையப்படுத்தியே உள்ளது. தற்போது சந்தையை மையப்படுத்தியே பொதுச்சந்தையின் முன்பாக பேரூந்துகள் தரிக்கின்றன. பழைய பேரூந்து நிலையத்தில் பேரூந்து நிலையம் செயற்பட்டால் அங்கு வரும் பேரூந்துகளும் அங்கிருந்து புறப்படும் பேரூந்துகளும் கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பொது வைத்தியசாலையைக் கடந்தே செல்லும்.

வளர்ச்சி பெற்றுவரும் கிளிநொச்சி நகரத்தில் பொருத்தமான வகையில் பேரூந்து நிலையத்தை அமைப்பது இன்னும் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கு இன்னமும் உறுதுணையாய் அமையும் என்று புத்திசீவிகள் கருதுகின்றனர். எதிர்காலத்தின் வடக்கு மாகாணத்தின் சிறந்த நகரமாக கிளிநொச்சி வளர்ச்சி பெறும் எனக் கருதப்படுகிறது. அந்நிலையில் பழைய பேரூந்து நிலைய இடத்திலேயே மீண்டும் பேரூந்து நிலையத்தைக் கொண்டு செல்வதும் அந்த வளர்ச்சிக்கு உதவும் என்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்விமான்கள் கூறுகின்றனர்.

தற்போது பொதுநூலகம் இயங்கிவரும் இடமானது போதிய இடமற்றதாக காணப்படுகிறது. நகரத்தை அண்டிய இடத்தில் பொதுநூலகம் இயங்கினால் அது மாவட்டத்தின் பலதரப்பட்ட வாகசப் பயனாளர்களுக்கும் உகந்ததாக அமையும். அத்துடன் அங்குள்ள கட்டிட வசதிகளின் மூலம் பல்வேறு அரங்குகளை நிறுவி கலைச்செயற்பாடுகளைளயும் முனனெடுக்க முடியும். அதற்கான போதுமான வசதி தற்போதைய அரச அதிபர் அலுவலகத்தில் காணப்படுகிறது.

எதிர்வரும் 22ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழ கூட்டம் நடைபெற இருக்கின்றது. அனைத்துத் தரப்பினரும் அரசியல், கட்சி பேதமின்றி இந்த வியடத்தை ஒரு தீர்மானமாகக் கொண்டு வந்து கிளிநொச்சி நகரத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றும் கிளிநொச்சி மாவட்ட கல்விமான்கள், அரச உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105839/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.