Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு மாற்றுக் காணி வழங்க இரண்டுவார காலக்கெடு! - இல்லையேல் போராட்டம் என்கிறார் அமைச்சர் ரிஷாத்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு மாற்றுக் காணி வழங்க இரண்டுவார காலக்கெடு! - இல்லையேல் போராட்டம் என்கிறார் அமைச்சர் ரிஷாத்.

[sunday, 2014-04-20 09:15:49]
RISHATH-200414-150.jpg

மன்னார், முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் புதிதாக அமைக்கப்பட்ட கடற்படை முகாமினால், சுமார் 700 ஏக்கர் பரப்புடைய தமிழ்- முஸ்லிம் மக்களின் காணிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடற்படை முகாம் அமைப்பதற்காக பெருமளவு நிலப் பிரதேசம் கையகப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணிகளை இழந்துள்ள முஸ்லிம் குடும்பங்களே வில்பத்து சரணாலய பகுதியில் குடியேறி இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை மறுதலித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

  

முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் கடற்படை முகாம் காரணமாக ஒரு குடும்பம் மட்டுமே இடம்பெயர நேரிட்டதாகவும், அந்தக் குடும்பமும் இப்போதும் சரணாலயப் பகுதிக்குள் குடியேறியுள்ள குடும்பங்களில் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சும் கடற்படையும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இடம்பெயர்ந்த ஒரு குடும்பத்துக்கும் மாற்றுக்காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'நாட்டின் தேசியப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரை இந்தப் பிரச்சனைக்குள் இழுக்காமல், சிவில் அதிகாரிகள் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வார்கள்' என்று நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டுப் பிரதேசங்களில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அமைக்கப்பட்ட கடற்படை முகாம் காரணமாக சுமார் 700 ஏக்கர் பரப்புடைய தமிழ்- முஸ்லிம் மக்களின் காணிகள் அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிற்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசியிடம் தெரிவித்தார். மறிச்சிக்கட்டுப் பகுதியில் 300 ஏக்கர் காணியை கடற்படைத் தேவைக்காக அரசு கையகப்படுத்தியுள்ள நிலையில், காணிகளின் உரிமையாளர்களான 73 குடும்பங்களே தமது பாரம்பரிய காணிகளுக்கு சற்று தொலைவில் தற்காலிக கூடாரங்களில் வசித்துவருவதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறினார்.

இந்தக் குடும்பங்கள் வில்பத்து சரணாலயத்தின் எல்லைக்குள் குடியேற்றப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களையும் அவர் நிராகரித்தார். இந்த மக்களுக்காக பிரதேச செயலாளரால் அளிக்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளில் குடியேறுவதற்கும் இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

'சொந்தக் காணிகளுக்குள்ளும் வாழமுடியாமல், தற்போது தங்கியிருக்கும் பகுதிகளிலும் இருக்கமுடியாமல், மாற்றுக்காணிகளுக்கும் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில் மக்கள் தத்தளிக்கின்றனர்' என்றார் ரிஷாத் பதியுதீன். இரண்டு வாரகாலத்துக்குள் மாற்றுக்காணிகள் கொடுக்கப்படா விட்டால் மக்களுடன் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் இறங்கப் போவதாகவும் அமைச்சர் கூறினார்.

http://seithy.info/breifNews.php?newsID=107753&category=TamilNews&language=tamil

jasim-houses-300x136.jpg

 

The Jassim Housing Scheme near the Wilpattu National Park

 

DSC09993-300x103.jpg

These squatter families who have put up cadjan huts at

the northern end of the Wilpattu National Park face legal action. 

 

938_380_DSC_8760.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.