Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் ஜனாதிபதி மஹிந்த! - மண்முனைப் பாலம், பல்கலைக்கழக கட்டடத் தொகுதிகளைத் திறந்து வைத்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஜனாதிபதி மஹிந்த! - மண்முனைப் பாலம், பல்கலைக்கழக கட்டடத் தொகுதிகளைத் திறந்து வைத்தார். photo.png 

[sunday, 2014-04-20 09:46:40]
mahinda-batti-200414-150.jpg

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மண்முனைப் பாலத்தையும், கிழக்குப் பல்கலைக்கழத்தில் பல்வேறு கட்டத்தொகுதிகளையும் திறந்துவைத்தார். ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் மண்முனைப்பாலம் நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

  

ஆனால் 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமானப்பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடையவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும், எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மண்முனைப்பாலம் 210 மீற்றர் நீளத்தையும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் நீளத்துக்கு மதகுகளையும் கொண்டதாக,மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபா செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபா செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

mahinda-batti-200414-600.jpg

 

 

mahinda-batti1-200414-600.jpg

 

 

mahinda-batti2-200414-600.jpg

 

அதேவேளை, மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அங்கு 555 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டடத் தொகுதிகளைத் திறந்துவைத்தார். 230 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டடத் தொகுதி, 171 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டடத்தொகுதி, 121 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டடத் தொகுதி, 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உள்ளக உடற்பயிற்சி அரங்கு, 7 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் என்பனவற்றை ஜனாதிபதி திறந்துவைத்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸநாயக்க மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்ரம, கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசார் எம்.எஸ். சுபைர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி சானிகா ஹிரும்புரேகம மற்றும் அமைச்சின் அதிகாரிகளும், கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

mahinda-batti3-200414-600.jpg

 

http://seithy.info/breifNews.php?newsID=107762&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2(2818).jpg

-வசந்த சந்திரபால

ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய நூலக கட்டடம் மற்றும் வர்த்தக, முகாமைத்துவ பீடங்களை இன்று(20) பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இத்திறப்பு விழாவில் அமைச்சர்களான எஸ்.பி.திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாஉல்லா, சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன,  பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம், கிழக்கு மாகாண ஆளுனர் ரியட் அட்மிரல் மொஹான் விஜேவிக்ர  மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

1(4397).jpg

3(2120).jpg

5(1749).jpg

12(706).jpg

13(463).jpg

14(373).jpg

 

2.JPG


3.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.