Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனை அவசரமாக அழைக்கிறது புதுடெல்லி! - தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முயற்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விக்னேஸ்வரனை அவசரமாக அழைக்கிறது புதுடெல்லி! - தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த முயற்சி. 
[Tuesday, 2014-04-22 08:26:53]
vikneswaran-220414-150.jpg
வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை இந்திய வெளிவிவகார அமைச்சும், காங்கிரஸ் கட்சியும் அவசரமாக புதுடெல்லிக்கு அழைத்துப் பேசும் முயற்சியில், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றிய கரிசனை மற்றும், இந்தியாவினது மூலோபாய நலன்களுக்கு இடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதற்காக, வடக்கு மாகாண முதல்வரை கூடிய விரைவில் புதுடெல்லிக்கு அழைப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருகிறது.
 
கடந்த மாதம், ஐ.நாவில் சிறிலங்காவுக்கு எதிரான வாக்களிப்பில் இந்தியா பங்கேற்காமல் விட்ட பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த அவசர முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ்நாட்டில், நாளை மறுநாள் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலுக்கு முதல் நாள் புதுடெல்லி வருமாறு மாநில காங்கிரஸ் பிரிவு, விக்னேஸ்வரனுக்கு மீண்டும் அழைப்பை விடுத்துள்ளதாக, முதல்வரின் முக்கிய உதவியாளர் தெரிவித்துள்ளார்.
 
எனினும், வடக்கு மாகாண முதல்வர் தமது பயணத்தை இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர் இந்தியாவில் சில தலைவர்களைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். குறிப்பாக தமிழநாடு முதல்வர் ஜெயல்லிதாவை சந்திக்க அவர் விரும்புகிறார். எனினும், அவரைச் சந்திப்பதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்

செய்தி உண்மை எனில் முதல்வர் தேர்தல் முடியும்வரையில் போகக்கூடாது..

போனமுறை ஹிந்து பத்திரிகைக்குப் பேட்டி குடுக்கப்போய் அவன் திரித்து எழுதிய விடயம் ஞாபகத்தில் உள்ளது.

சொழியன் குடும்பி சும்மா ஆடுமா? எல்லாம தேர்தலில் காங்கிரஸ் தமிழ்மக்களின் வாக்கை பெறுவதற்கு.இவரைக்காட்டி தங்களால் தான் வடமாகண தேர்தல் நடந்ததாக சொல்வார்கள்.. ஆனால் இவர் இப்போது காற்று கழட்டிவிட்ட பொம்மை(அதிகாரம் இல்லாத டம்பி) நிச்சயமாக சொல்லமாட்டார்கள்.. எல்லாம் ஒரு நாடகம்..

Edited by வழிகாட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.