Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fonseka-12.jpg

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார். 

“இதன் விளைவாகத் தான், அவர்களில் சிலர் ஈழப் போராட்டத்தில் மீண்டும் இறங்கினர். 

புனர்வாழ்வுத் திட்டங்களுக்காக பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ராஜபக்ச அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர். 

போர் முடிவுக்கு வந்த பின்னர், நலன்புரி நிலையங்களில் 280,000 மக்கள் தங்கியிருந்தனர். 

அவர்களில் 11 விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்டனர். 

அவர்கள் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

அங்கு எல்லா அடிப்படைவசதிகளும், முழுமையான தொழிற்பயிற்சி, உடற்பயிற்சி, மற்றும் உளவளப் பயிற்சி என்பன வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறியது. 

ஆனாலும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சில போராளிகள், புலிகள் இயக்கத்தக்கு மீள உயிர்கொடுக்க முயன்றதாக கேள்விப்படுகிறோம். 

இதற்கு புனர்வாழ்வுத் திட்டத்தின் குறைபாடே காரணம். 

முன்னாள் விடுதலைப் புலிகள் மீண்டெழ முயன்றதற்கு அரசாங்கமும் பொறுப்பாகும். 

வடக்கிலுள்ள தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையான முயற்சிகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற்கொள்ளவில்லை. 

தடுத்து வைக்கப்பட்ட புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதன் மூலம், சிறிலங்கா அரசாங்கம் புலிகளின் பணத்தைக் கொள்ளையிட்டது. 

படுகொலைகளுக்குக் காரணமான புலிகளின் முன்னாள் தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உயர் பதவிகள் அளிக்கப்பட்டன. 

தேர்தலின் போது வாக்குகளைப் பெறுவதற்காக ராஜபக்ச அரசாங்கம் இனப் பதற்றநிலையை ஊக்குவித்தது. 

ஒவ்வொரு தேர்தலின் போதும், ராஜபக்ச அரசாங்கம் தெற்கிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக பௌத்த இனவாதத்தை ஊக்குவிக்கிறது. 

அதேவேளை, வடக்கிலுள்ள தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்துக்கு ஊக்கமளிப்பதில்லை. 

ஆனால், ஏனைய கட்சிகள் தான் இனவாதத்தை ஊக்குவிப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20140424110388

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலிக்கு ஓணான் சாட்சி  நல்லாத்தான் இருக்கிது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.