Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமானின் அடாவடி.

Featured Replies

சர்வதேச ரீதியில் பத்திரிகை சுதந்திர தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் ஊடக சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பதை மலையக அமைச்சர் ஒருவர் உலகத்துக்குக் காட்டியிருக்கிறார்.
 
ஆம்! மலையகத்தின் ஏகப் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்கின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் பொதுமேடையொன்றில் நடந்துகொண்ட விதம் இதனை எடுத்துக் காட்டுகிறது.
 
arumugan-flash.jpg
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பண்டாரவளையில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ மேடைக்கு வருகை தந்தார். அந்த மேடையில் ஊடகவியலாளர் சிலர் தமது கடமைகளை செய்துகொண்டிருந்தார்கள்.

 

அமைச்சர் ஆறுமுகன் மேடைக்கு வந்தவுடனேயே கடமையில் இருந்த ஊடகவியலாளர் ஒருவரை தூக்கித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

பொறுப்பு வாய்ந்த அமைச்சரின் இந்த இழிசெயல் ஊடகங்களில் வெளியானதுடன் அது அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது.

 

உழைக்கும் தொழிலாளர் தினத்தில் போற்றப்பட வேண்டிய அவர்களின் முதுகில் குத்தியதுபோன்று அமைச்சர் ஆறுமுகனின் செயற்பாடு அமைந்திருந்தது.

 

உண்மையில் ஊடகவியலாளர்களுக்கே இந்தக் கதியென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என கேட்கத் தோன்றுகிறது.

 

ஆயிரக் கணக்கான மக்கள் மேடைக்கு முன்னால் கூடியிருந்த நேரத்தில் நிகழ்வுக்கு தலைமை ஏற்று வருகை தந்த அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டமை கண்டிக்கத்தக்கது.
 
மக்களின் பிரதிநிதியாக இலங்கையின் அதி உயர் சபையான பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட தலைவரின் இச்செயல் எந்த வகையில் நியாயம்?
 
பொதுமேடையிலேயே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றால் உதவி என்று அலுவலகத்துச் செல்லும் சாதாரண தொழிலாளியை எவ்வாறு நடத்துவார்?
மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சரின் சுயநினைவோடுதான் மேடைக்கு வந்தாரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
 
உண்மையில் மலையக மக்களை வழிநடத்துகின்றோம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமைச்சரின் பொறுப்பற்ற இச்செயல் அந்த மக்களை வெட்கித் தலைகுனியவைத்துள்ளது.
 
மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை ஜீவனத்தையும் நாளாந்த நடைமுறையினையும் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலன்றி அவர்களுக்குள் ஒருவராக இருந்து பார்த்தலின் பிரதிபலன் நிச்சயம் கண்ணீராகத்தான் இருக்க முடியும். ஏனென்றால் அந்தளவுக்கு வலிகள் நிறைந்த வாழ்க்கை அவர்களுடையது.
 
"தங்க இடமும் தங்கக் காசும் இலவசமாம், தேயிலைக்கடியில் மாசியும் தேங்காயும் கிடைக்குமாம்" என நம்பி வந்து ஏமாற்றப்பட்டவர்கள் என நாட்டார் பாடல்கள் உட்பட இன்னும் கேலிக்கையாகக் கூறுவதுண்டு. அப்படியென்றால் இவர்களின் ஆரம்பமே ஏமாற்றம் என்பது தெளிவாகிறது. இதன் தொடக்கமோ தெரியவில்லை அவர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவரால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
 
வறுமை என்னும் தீயின் அனல் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க அரசியல் இலாபம் தேடும் சில தொழிற்சங்கங்களும் அரசியல்தலைவர்களும் மாற்றுப்புறத்தில் குளிர்காய்ந்துகொண்டிருக்கிறார்கள்.
 
சமுதாயத்தின் மீது தார்மிகப்பொறுப்புடன் செயற்பட்டு நியாயமான அரசியலில் ஈடுபட்டிருந்தால் உண்மையில் மலையக சமுதாயம் அத்தனை துறைகளிலும் முன்னேறி மிளிர்ந்திருக்கும். ஆனால் எதற்கெடுத்தாலும் அப்பாவித் தொழிலாளர்களையே குறைசொல்லி அவர்களின் அறியாமையையும் கல்வியின்மையையும் சுட்டிக்காட்டியே பலர் வளர்ந்துவிட்டார்கள்.
 
மக்களின் தேவை அறிந்து மக்கள் சேவையுடன் அரசியலில் ஈடுபடும் நல்ல தலைமையை இனியும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுமக்களிடம் அடாவடித்தனங்கள் புரியும் தலைமைத்துவத்துக்கு மக்களின் எதிர்ப்பு எப்போதும் உண்டு. தயவு செய்து அவ்வாறான தவறான தலைமைத்துவத்தை வழங்க வேண்டாம் என அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறோம்.
 
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் மலையக சமுதாயத்தை முன்னேற்றகரமான வழியில் இட்டுச்செல்லும் தலைவர்களை மலையகம் இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராக இருக்கிறது. அதேவேளை, மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட முனையும் எந்தத் தலைமையும் வரலாற்றுக்கு பதில்சொல்லியே ஆக வேண்டும்.
 
அமைச்சர் நினைத்தபடி மக்களிடம் நடந்துகொள்வதற்கு அவர்கள் அடிமைகள் அல்லர் என்பதை உணர வேண்டும். தாங்கள் மாத்திரமே மலையகத்தை ஆள வேண்டும் என நினைப்பவர்கள் மக்களோடு மக்களாக இருந்து அவர்களின் வலிகளையும் சுமைகளையும் அறிந்து நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
 
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இவ்வாறு நடந்துகொண்ட சந்தர்ப்பத்தில் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் இறக்குவானை பாரவத்தை எனும் தோட்டத்தில் நடந்துகொண்ட விதம் நினைவுக்கு வருகிறது.
 
மாகாண சபை தேர்தல் பிரசாரத்துக்கு அமைச்சர் முத்து சிவலிங்கம் வருகை தந்திருந்தார். அந்த வேளையில் சாதாரண தொழிலாளி ஒருவரைப் பார்த்து "உன்னை வெள்ளை வேனில் தூக்குவேன்" என்று அதட்டும் தொனியில் எச்சரித்தார் பிரதியமைச்சர்.
இவ்வாறான செயற்பாடுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கே உரித்தானதுதானா? 
 
தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களின் இருப்பிடங்களை தேடிச் சென்று சிறுகுழந்தைகளை அணைத்துக் கொஞ்சி வாக்கு கேட்கும் தலைமைகள் இனிமேலும் தவறுகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.

 

 

http://virakesari.lk/articles/2014/05/03/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டமான் சுப்பர் ஸ்டார்மாதிரி கையை காட்டும் பொழுது குறுக்காள பத்திரிகையாளர் போனல் அவருக்கு கோபம் வரும்தானே.....:D.....அதிகார வர்க்கம் எங்கும் உண்டு...மலையகத்திலும் உண்டு .....யாழிலும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்காந்த் பாணியைப் பினற்றத் தொடங்கி இருக்கிறார். வாழ்த்துக்கள் சிரஞ்சீவி அமைச்சர்.. ஆறுமுகம் தொண்டமான்.

 

ஆறுமுகம் தொண்டமானும்.. டக்கிளஸ் தேவானந்தாவும்.. சிரஞ்சீவி அமைச்சர்கள். சிரஞ்சீவி கட்சி தலைவர்கள். அவர்களுக்கு எதிராக யாரும் (இவர்களுக்கு எலும்பு பொறுக்கிப் போடும்.. சிங்கள எஜமானர்களைத் தவிர..) எதுவும் செய்ய முடியாது. ஆனால்.. இதெல்லாம் சனநாய்கம் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளனும். இல்ல தொலைஞ்சாங்க..! :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.