Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞனைப் புரிந்துகொள்ளல்

Featured Replies

கலைஞனைப் புரிந்துகொள்ளல்
May 2, 2014 at 10:22pm

1797331_246243788910798_3957531941084394

 

ஜா. தீபாவின் மொழிபெயர்ப்பில்,

உலகத் திரைப்படநெறியாளர்  பதினைந்து பேரின்

நேர்காணல்களைக் கொண்டதான

மேதைகளின் குரல்கள் நூலிலிருந்து,

நெறியாளர் ஐவரின்

கருத்துகளின் சில பகுதிகளை

இங்கு தருகிறேன்.

படைப்பாளிகளின் நேர்காணல்களை

நான் எப்போதும்

விருப்பத்துடன்படிப்பது வழக்கம்;

அவர்களின் கருத்துலகையும்,

படைப்புச் செயற்பாடையும் புரிந்துகொள்வதற்குத்

துணை செய்பவை அவை!

 

 




10154108_246244288910748_895421108751981

சத்யஜித் ரே (இந்தியா).

 

1.      உங்கள் படத்தின் பெண் கதாபாத்திரங்கள்வலுவானவர்களாக இருக்கின்றனர். வங்காளத்தினுடைய சமூக வரலாற்றின் பாதிப்பா இது?

 

·        நான் எந்தக் கதையைப் படமாக எடுக்கிறேனோ அந்தப்படத்தின் எழுத்தாளரின் ‘பார்வை’யைத்தான் நான் சார்ந்திருக்கிறேன். தாகூரும்,பக்கிம்சந்திரரும் உறுதியான பெண் கதாபாத்திரங்களையே  படைப்பார்கள். பெண்களிடம் எனக்கு இருக்கிற தனிப்பட்டஅனுபவங்களும், எண்ணங்களும்கூட இதில் பிரதிபலிக்கின்றது.

   அவர்கள் உடலளவில் ஆண்களைப் போல உறுதியானவர்கள் இல்லையென்றாலும், இயற்கைஅவர்களுக்கு அதனை ஈடுகட்டி விடுகிறது. எல்லாப் பெண்களையும் பற்றி நான் சொல்லவில்லை.என்னை ஈர்த்த பெண்களை மட்டுமே சொல்கிறேன். என்னுடைய படங்களில் வருகிற பெண்கள்ஆண்களைக்காட்டிலும் சூழலை லாவகமாகக் கையாள்பவர்கள்.

 

2.      இந்திய அரசியல் சூழலில் ஒரு திரைப்பட இயக்குநரின்பங்கு, செயல்படுவதா அல்லது பார்வையாளனாக இருப்பதா?

·        ‘The kingdom of Diamonds’ (Hirok rajar Deshe) படம் பார்த்தீர்களா? அதில் ஏழைகளைஅவர்கள் இடங்களிலிருந்து அப்புறப்படுத்துகிற காட்சி ஒன்று இருக்கும்.இந்திராகாந்தியின் ஆட்சியின்போது டெல்லியிலும் மற்ற நகரங்களிலும் நடைபெற்றதின்நேரடியான பாதிப்புத்தான் இது. சமகாலக் கதைகளைக் கையாளும்போது ஒரு கட்டத்திற்குமேல் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. அதிகாரத்தில் உள்ளவர்களை நேரடியாகத் தாக்கமுடியாது. ‘The Story of Chair’ படத்தில் இதை முயற்சித்தேன். என்ன நடந்தது? முழுப் படமும்வீணானது. என்ன செய்ய முடியும் எங்களால்? சுற்றி நடக்கிற பிரச்சனைகள் தெரியும்.ஆனாலும் எதற்கும் எல்லை இருக்கிறது. அதைத் தாண்டி நம்மால் போக முடியாது.





10277682_246244425577401_672612570531302

ஜாஃபர் பனாஹி (ஈரான்).

 

1.      தேசபக்தி, கடமை,கௌரவம் இவைதான் உங்களது படத்தின் மையமாக இருக்கின்றன. இதில் பாராட்டப்படவேண்டியது,இவற்றை இளைய தலைமுறையினர் வழியாகவே வலியுறுத்துகிறீர்கள்....

 

·        .... ஈரானிய மக்கள்தங்களது தேசிய அடையாளத்தை நோக்கித் திரும்பவேண்டும் என நினைக்கின்றனர்.தங்களுக்கென்று நீண்டதொரு வரலாறு இருக்கிறதென்றும், அதில் பெருமைப் படுவதற்குக்காரணங்கள் இருக்கிறதெனவும் சொல்வதற்கு விரும்புகின்றனர். அதன்மூலமாகத் தங்களை ஒருநாகரிகமான மக்கள் என்றும் சொல்லிக்கொள்ள முனைகிறார்கள்.

 

2.      மக்களிடம் ஒருதாக்கத்தை உண்டுபண்ண உங்களுக்குக் கலை தேவைப்படுகிறது இல்லையா?

 

·        கலைகள் எப்போதுமேஉடனடித் தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தாது. ஒரு கலைக்குஅத்தனை சக்தி இருந்தால், அது மக்களை அணுகிய அடுத்த கணமே சமூக சிந்தனையை மக்களிடம்ஏற்படுத்தி இருக்க முடியும். எந்த மனிதருக்குக் கலைகள் வேண்டுமோ, அவர்களைத்தான்அது போய்ச் சேருகிறது. கொடுத்துப் பெறுகிற பரிமாற்றம்தான் இது. சமூகத்திற்குக் கலைமற்றும் கலைஞனின் தாகம் தேவைப்படுமென்றால், அது தானாகவே நடந்துவிடும்.




1491729_246244552244055_8261642608680731

கிம் கி துக் (கொரியா)

 

1.   தத்துவம் என்பது  உங்கள் படங்களைப் பாதிக்கிறதா? உங்கள் படங்களில்உள்ள கடவுள் என்ன பங்களிப்பைச் செய்கிறார்?

 

·        நாம் கண்களால்பார்க்கவும், உணரவும் முடிகிற இயற்கைதான் கடவுள். இயற்கை என்பது பிரமாண்டமானது.அதற்குள் கணக்கு, அறிவியல், தத்துவம், விஞ்ஞானம் என எல்லாமே இருக்கிறது. மனிதம்,அன்பு இவை மட்டும்தான் உண்மையானது. வாழ்க்கையின் தேடல், கடவுள் என்பது தனியாக இல்லை எனத் தெரியவரும் போது தான் முடிவுக்கு வருகிறது.

 

2.   மாயக் கற்பனைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

·        .... என் குழந்தைப்பருவத்தில் மிஷன் பள்ளியில் படித்தேன். அங்கு எனக்கு மூளைச்சலவை செய்யப்பட்டது.கிறித்தவ மனநிலையில் இருந்து வெளியேற மிகவும் பிரயத்தனப்பட்டேன். முடிவில் அது நிகழ்ந்தது.அதில் இருந்து வெளியேறியபின்புதான் தெரிந்தது, கிறித்தவ மதிப்பீடுகள் முக்கியமானதுஎன்பது. என்னைச் சுற்றி அவர்கள் இருந்தபோது அவர்களைப் பின்பற்றுவது கடினமாகஇருந்தது. கஷ்டமான சிக்கல்கள் ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்த படி இருந்தால், மாயக்கற்பனைகளால் ஆன உலகில் வாழ்வது என்பது சிறிதளவாவது ஆறுதல் தரும்.


.
1613914_246245135577330_7007743874766719

டேவிட் லீன் (இங்கிலாந்து)

 

1.   உங்களுக்குள் இருக்கும் இயக்குநர் எப்போதுதிருப்தியடைவார்?

 

·        எனக்குள் ஒரு பயம்இருந்துகொண்டே இருக்கும். பயம் என்பதை அப்படியே அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாது.என்னால் எதைச் சிறப்பாகச் செய்ய முடியுமோ அதை நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன்.அதற்காக ஒரே ஒரு ஷாட்டுக்காக என்னால் ஆறு நாட்களெல்லாம் வீணாக்க முடியாது. அதேபோல்ஸ்க்ரிப்ட் இல்லாமல் படம்பிடிக்கப் போவதையும் நினைத்துப்பார்க்க முடியாது.ஏனென்றால் எது சிறப்பாகச் செய்யவேண்டியிருக்குமோ அவற்றையெல்லாம் ஸ்க்ரிப்ட்டில்எழுதி திருப்தியடைந்த பிறகே, அதைப் படமாக எடுக்கிறேன். ஸ்க்ரிப்ட்டில்உள்ளவையை  அப்படியே காட்சிக்குக்கொண்டுவருவது எனது பொறுப்பு மட்டுமே. என்னுடைய ‘பெஸ்ட்’ எதுவோ அதைச் செய்வதுதான் எனக்கு நிறைவு

1452122_246245352243975_6786326916812323

மார்ட்டின்ஸ்கோர்சிஸ் (அமெரிக்கா)

 

1.   உங்கள் படங்கள் பெரும்பாலும் நீதிகேட்டமனிதர்களைப் பற்றியும் பாதுகாப்பற்ற பெண்களைப் பற்றியுமே அதிகம் சித்திரிக்கின்றன.அதே நேரத்தில் வன்முறையையும் அதிகம் சார்ந்திருக்கிறது. இதை நீங்கள்உணருகிறீர்களா?

 

·        மார்ட்டின்ஸ்கோர்சிஸ் படங்கள் என்றதும் மக்கள் என்ன நினைப்பார்களோ அதையேதான் கேள்வியாகக்கேட்டிருக்கிறீர்கள். வன்முறைக்கு நான் ஆதரவாளன் கிடையாது. ‘Mean street’ படத்தில் கணவனால் தொடர்ந்து வன்முறைக்குஆளாகும் பெண், அவனை விட்டு வெளியேறுவதாகக் காட்சி இருக்கிறது.

    ஒரு மனிதன் தொடர்ந்து சமூகத்தால், சுற்றிஉள்ளவர்களால் தாக்கப்படும்போது வேறு வழியில்லாமல் பதில் சொல்வதற்கு அவன்வன்முறையையே கையில் எடுக்க முடியும். Raging Bull படத்திலும்கூட மையச் சரடுஅதுதான்....

 

2.   உங்கள் படங்களில் நீங்கள் பெருமைப்படுகிற படம்எது?

 

·        எனக்கு LastTemptation of Christ படம் பிடிக்கும். அதனுடைய கருத்து, நடிகர்களின் பங்களிப்பு, இசைஎன எல்லாமே எனக்கு அதில் பிடித்திருந்தது.

 

3.   இயேசுவை மேலும் தெரிந்துகொள்ளவேண்டி அந்தப் படம்எடுத்ததாகச் சொல்லுகிறீர்களா?

 

·        ஆமாம். ஆனால்தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இயேசுவின் செய்திகளின்படி வாழ்வது எனக்குப்பிடித்திருக்கிறது. அதுதான் மிகுந்த சிரமமானது. நம்மால் அப்படி வாழ்ந்துவிடமுடியுமா? அப்படி முடியவில்லை என்றால், நமது தோல்வியை நாம் ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும்.

 

                                                                                            - 15. 02. 2014

                                                                                                           

                                                                                                     - கலைமுகம்

                                                                                                       தை - பங்குனி 2914

Athanas Jesurasa     //   அ.யேசுராசா  [முகநூல் வழியாக ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.