Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆனந்தசங்கரி - தங்க.முகுந்தன் இடையே வெடித்தது மோதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஆனந்தசங்கரி - தங்க.முகுந்தன் இடையே வெடித்தது மோதல்! 
[sunday, 2014-05-04 09:20:36]
sankari-muhunthan-040514-150.jpg
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து கட்சியின் முக்கியஸ்தரும். நிர்வாக உத்தியோகத்தருமான தங்க. முகுந்தன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனந்தசங்கரி இருக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் அவர் கட்சியை விட்டுப் போகும்வரை அல்லது அவரது இறுதிக் காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்து கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரிக்கு அக்கட்சியின் முக்கியஸ்தரும், நிர்வாக உத்தியோகத்தருமான தங்க.முகுந்தன் நீண்ட கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
 
உங்களுடன் வாக்குவாதப்பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத் தருகிறேன்.மேலும் சில விடயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக பத்துப் பாரிய பிரச்சினைகளைக் குறிப்பிட்டு உங்களுக்கு விளக்கமான கடிதமொன்றினை அனுப்பி வைக்கின்றேன். உங்களுடைய முட்டாள்தனமான அறிக்கைகள், நீங்கள் தமிழருக்காக அரசியல் செய்கிறீர்களா அல்லது பெரும்பான்மையினத்துக்கு சாதகமான அரசியல் செய்கிறீர்களா என சாதாரண பொதுமகனுக்கு மாத்திரமல்ல எங்களுக்கே புரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது.
 
நீங்கள் கூட்டணியில் இருக்கும் வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமே செய்வீர்கள். மக்களுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை. இதில் நீங்களும் அடங்குவீர்கள். நாம் ஏதாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பது மேல் எனக் கருதி இம்முடிவை எடுத்துள்ளேன் என்று தங்க முகுந்தன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
அதேவேளை, தங்க முகுந்தன் எமது கட்சியில் அங்கத்தவராக இருந்தால்தானே கட்சியிலிருந்து விலக முடியும். அவர் எமது கட்சி அங்கத்தவரே இல்லை.அப்படியிருக்க அவரது அறிக்கையை ஒரு கதை என்று என்னிடம் சிலர் விசாரிக்கின்றனர் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.குடும்பத் தகராறு காரணமாக சுவிஸிலிருந்து வந்த அவருக்கு தங்க இடமும், சம்பளமும் கொடுத்து பாவம் எனக் கருதி எம்முடன் வைத்திருந்தால், அவர் எமக்கே துரோகம் செய்ய முனைகிறார்.அவரது முட்டாள் தனத்தை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.
 
அவர் இதுவரை எம்முடன் இருந்து கொண்டே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார். இப்போது அது தெரியவந்ததும் எம்மீது வீண் பழி சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.இதுவரை காலமும் என்னுடன் ஒரு எட்டப்பனை வைத்திருந்தமையையிட்டு நான் வேதனை அடைகின்றேன். அவரை நான் விலக்க அவர் கட்சி அங்கத்தவர் இல்லை என்பதால் அவர் விரைவாக எமது அலுவலகத்திலிருந்து தானாக வெளியேறுவது அவருக்குத்தான் நல்லது எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

 

sankari-muhunthan-040514-150.jpg
 
அவர் இதுவரை எம்முடன் இருந்து கொண்டே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார். இப்போது அது தெரியவந்ததும் எம்மீது வீண் பழி சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்.இதுவரை காலமும் என்னுடன் ஒரு எட்டப்பனை வைத்திருந்தமையையிட்டு நான் வேதனை அடைகின்றேன். அவரை நான் விலக்க அவர் கட்சி அங்கத்தவர் இல்லை என்பதால் அவர் விரைவாக எமது அலுவலகத்திலிருந்து தானாக வெளியேறுவது அவருக்குத்தான் நல்லது எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

 

எட்டப்பன் என்ற சொல்லை... ஆனந்த சங்கரி பாவிக்க‌ அருகதை உள்ளதா? :D

இந்த.... நாத்தம் பிடிச்சவனின், தொல்லை தாங்க முடியலியேப்பா.... :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூட்டணியில் இருக்கும் வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமே செய்வீர்கள்

ஈழத்தின் டாக்டர் கலைஞர்.. :D

"அவர் இதுவரை எம்முடன் இருந்து கொண்டே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார்."

துரோகி என்ற கூற்றை பார்த்து எங்கட புலம்பெயர் சிறி லங்கன் ரெண்டு பேருக்கு கோபம் வரபோகுது.

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியில  இருக்கிறதே இரண்டு பேர்தான்

ஒருத்தர்  தலைவர்

மற்றவர் துரோகி............

 

நல்லகாலம் தள்ளியிருந்தார்கள் மக்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.