Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுவர்வாழும் உலகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்வாழும் உலகம்

- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா-

06 மே 2014

"அதிகாரங்களில் இருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறார்"

ana1_CI.png

இன்றைக்கு (4-5-2014) நான் வாழும் நாட்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாள். நாளைக்கு (5-5-2014)ஜெர்மன் நாசிகளிடம் இருந்து நெதர்லாந்து விடுதலை அடைந்த நாள். இந்நாட்களில் ஊடகங்களில் இரண்டாம் உலகயுத்தத்தின் கொடூரங்களும் அவலங்களும் ஆவணப் படங்களாகவும் செய்திகளாகவும் வெளிப்படுத்தப்படும்.

போராட்டம், வாழ்வு, மரணம் நினைவுகூரல், சுதந்திரம், விடுதலை போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தையும் கனதியையும் நடைமுறை வியாபார உலகில் இழந்துவிட்ட போதும் தனிமனித ஆத்மாக்களின் நினைவுகளில் இவை உன்னதமான இடத்தைப் பெறுகின்றன. இறந்தவர்களை நினைவு கூர்வதும் விடுதலை டையும் நாளும் என்னளவிலும் கூட உணர்வு பூர்வமானதாகவே இருக்கின்றது.

இந்நினைவு நாட்களை ஒட்டி ஒலிபரப்பப்பட்ட, நாசிகளால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சிறுமி அனபிராங் பற்றிய ஆவணப் படமொன்றைத் தொலைகாட்சியில் பார்க்கநேர்ந்தது.

1929 ஆண்டு பிறந்த யூதச் சிறுமியான அனபிராங்கின் குடும்பம் ஜேர்மனியின் பிராங்பேர்ட் நகரத்தில் இருந்து நாசிகளுக்கு அஞ்சி நெதர்லாந்துக்கு 1933 இல் இடம்பெயர்ந்து அம்ஸ்ரர்டாமில் வசித்து வந்தது. பிற்பாடு நாசிகள் நெதர்லாந்தையும் ஆக்கிரமித்தனர். அப்பொழுது அனபிராங்கின் குடும்பம் அம்ஸ்ரர்டாமில் அவர்களின் வீட்டின் பின்புறமிருந்த மறைவிடமொன்றில் தலைமறைவாக இருந்தது. ஆயினும்1944 ம் ஆண்டு அவர்கள் ஜேர்மன் நாசிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டதனால் அவர்களால் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டு பெர்கன் பெல் சென் தடுப்பு முகாமில் அடைக்கப் பட்டனர். 1945 ஆண்டு சிறுமி அனபிராங் தனது 15 ஆவது வயதில் நாசிகளால் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தில் அவரது தந்தையார் மட்டுமே உயிர்பிழைத்தார். அனபிராங்கின் தாயார் மற்றும் தங்கை ஆகியோர் உயிர்தப்பவில்லை. அனபிராங் நாசிகளுக்கு அஞ்சித் தலைமறைவாக இருந்த நாட்களில் எழுதிய குறிப்புக்கள் தொகுக்கப்பட்டு பின்னர் அவரது நாட்குறிப்பாகப் புத்தகமாக வெளிவந்தது.

நாசிகளுக்கு அஞ்சி ஒழிந்து வாழ்ந்த சிறுமி ஒருத்தியின் வாழ்வதற்கான வேட்கை கொண்ட உணர்வுகள் உலகத்தைப் பற்றிக்கொண்டன. நாசிகளின் இன ஒழிப்புக்கெதிரான ஒரு குறியீடாக அனபிராங்கும் அவரது நாட்குறிப்பும் ஆனது.

இப்புத்தகம் உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் இன ஒழிப்பு நடவடிக்கைகளின் முகங்களும் வடிவங்களும் மாறியும் மாறாமலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிகாரங்களில் இருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறார் எனச் சொல்லக் கூடியவகையில் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

யுத்தத்தின் கொடூரத்தினை உலகின் பலபாகங்களைச் சேர்ந்தமக்களும் வெவ்வேறு காலகட்டங்களிலும் அனுபவிக்க நேர்ந்துள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களின் குருட்டுத் தனமான மமதையும் வெறியும் யுத்தங்களைத் தோற்றுவிக்கின்றன. யுத்தத்தின் சங்கநாதமோ இன்றுவரை ஓயவில்லை.

சிரியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுத்தத்திற்கு அஞ்சிப் புலம்பெயர்ந்து இருக்கிறார்கள். இன்னும் இன்னும் பலர் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிரியாவின் போர்ப்பகுதியில் வாழும் பத்து வயதான ஒரு சிறுமி தனக்குப் பயங்கரக் கனவுகள் வருகின்றன என்றும் தான் செத்துபோய்விடுவேனோ என்றும் அஞ்சுவதாகப் போர் தொடர்பான ஆவணப் படத்தைதயாரிக்கும் ஒருவரிடம் கூறுகிறாள்.

சிதிலமடைந்த கட்டிடங்கள் இடையே குண்டும் குழியுமான வீதிகளில் குழந்தைகள் போரின் விளைவுகளின் மீது விளையாடிக் கொண்டிருப்பதை ஆவணப்படக்காரர் காட்டுகிறார்.

2009 ஆண்டு ஈழத்துக் குழந்தைகள் அனுபவித்ததை இப்போது சிரியக் குழந்தைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களின் முன்பு சிரியாவில் நிகழ்ந்த நச்சுவாயுத் தாக்குதலில் கைக்குழந்தைகள் கூடப்பாதிக்கப்பட்டுத் துடித்துக் கொண்டிருந்ததை ஊடகங்களில் காணுற நேர்ந்தது. (ஊடகங்களின் சார்புத் தன்மையைப் பொறுத்து இவ்வாறான விடையங்கள் வெளிவருவதும் வெளி வராமையும் அமைந்து விடுகின்றமை இன்னுமொரு துயரம்)

உலகின் எல்லாக் கண்டங்களிலும் குழந்தைகள் சிறுவர்கள் தங்களது உணர்வுகளையும் கனவுகளையும் வெளிப்படுத்தவே அவகாசமின்றிப் பலி எடுக்கப்பட்டுவிடுகிறார்கள். ஏன் இப்படி நிகழ்கிறது என்ற கேள்விக்கு மிக இலகுவான விடைகள் இல்லை.

போரில் உயிரிழத்தல் ஒருபுறமிருக்கத் தப்பிப் பிழைத்து வாழ்தல் கூடச் சிறுவர்களுக்கு நரகமாகவே இருக்கிறது. நேற்று ஆபிரிக்க நாடொன்றில் தங்கம் தேடிச் சுரண்டப்படுகின்ற சுரங்கங்களில் வேலை செய்கிற சிறுவர்கள் பற்றிய ஆவணப் படமொன்றைப் பார்க்கநேர்ந்தது. போரொன்றில் அகப்பட்டு அவலமடைவதற்கும் சிறுவயதிலேயே இவ்வாறு கடின வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப் படுவதற்கும் இடையில் அதிகவித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

அரைமீற்றர் விட்டம் கொண்ட இருபது தொடக்கம் முப்பது அடி ஆழமான குழிக்குள் இறங்கிச் சிறுவர்கள் மண்ணையும் பாறையும் சுரண்டிச் சிறுசாக்குகளில் பொதிகளாக்கி மேலே அனுப்புகிறார்கள். குறைந்த உயிர்வாய்வளவு ( O2) நச்சுவாய்வுத் தாக்கம்மற்றும் அதிக வெப்பம் நிறைந்த குழிகளுக்குள் சிறுவர்கள் நாளொன்றுக்கு 12 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக வேலை செய்கிறார்கள்.

இச்சுரங்கங்களின் வெளியே காவல்துறை நின்று காவல்காக்கிறது. சிறுவர்கள் வேலை வாங்கப் படுவதையிட்டுக் காவற்றுறையால் எதுவும் செய்யமுடிவதில்லை. உலகத்தின் சீமான்களினதும் சீமாட்டிகளினதும் அங்கங்களில் தொங்கும் தங்கங்களில் ஆபிரிக்கச் சிறுவர்களின் இரத்தம் வியர்வை மற்றும் கண்ணீரும் மின்னுகின்றன. அண்மையில் இத்தகைய சுரங்கமொன்று இடிந்து வீழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் புதையுண்டும் போயினர்.

ஆசிய ஆபிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில் சிறுவர்கள் உழைப்பதென்பது மிகச் சாதாரணமான தொன்றாகி விட்டது. அதுவும் மிகமோசமான நிலமைகளின் கீழ் அவர்கள் உழைக்க நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு ஈழத்தின் பலபகுதிகளிலும் சிறுவயதில் சிறுவர்கள் உழைக்கச் செல்வது அதிகரித்து வருகிறது.

இந்தச் சிறுவர்களின் சந்தோசமான காலங்களை யார் பறித்துக் கொண்டார்கள் என்பதற்கு மிகக் கடினமானபதில்கள் கூடத் தரப்படுவதில்லை. அரசியல்வாதிகள் செல்வந்தர்கள் அதிகார அடுக்குகளில் மேலுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு உள்ள உலகமும் வாழ்வும் இந்தப் பிள்ளைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் வளங்களில் இப்பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய நியாயமமான பங்கை அவர்களுக்கு கிடைக்கவிடாதபடி இந்த உலகம் வலதுபுறமாகச் சுழன்று கொண்டிருக்கிறது.

அனபிராங் தனது நாட்குறிப்பில் ஓரிடத்தில் “இவ்விளம் சிறுமியின் ஆன்மாவினுள் எண்ணுக்கணக்கற்ற எண்ண ஓட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை யாராவதுஎ ண்ணிப் பார்த்திருப்பார்களா?( Who would ever think that so much went on in the soul of a young girl?)” என எழுதியிருப்பாள். அவ்வாறு எண்ணிப்பார்க்கக் கூடியமனம் அதிகாரத்தில் இருந்த மனிதர்களுக்கு இருந்திருக்குமென்றால் அன்றைக்கு அனபிராங்க் மடிந்திருக்கமாட்டாள். இன்றைக்கும் அதிகாரங்களின் ஆசைகளுக்குள்ளும் ஆட்டங்களுக்குள்ளும் சிக்கி அழிந்து கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்வும் கூட இப்புரிதலில் தான் தங்கியிருக்கிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106513/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.