Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பே – மல்லவராட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பே – மல்லவராட்சி:

 

"எனக்கு தெரியாமல் ஆட்களை செர்க்க முடியாது" – சுந்தரம் அருமைநாயகம் - எது உண்மை? எது பொய்? - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

Yes-No-Maybe_CI.jpg

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுவது இலங்கை இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பே என இராணுவத்தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வகையில் இராணுவத்தினருக்கான 800  வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்  யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று (10.05.14) யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9.30 மணிக்கு  யாழ். சிவில் அலுவலகத்தில் படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே குறித்த அறிவித்தலை உத்தியோக பூர்வமாக அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 'யாழ்ப்பாணத்தில் தொண்டர்களாக கடமையாற்றுவதற்கு 700 தொடக்கம் 800 வெற்றிடங்கள் உள்ளன. எனவே நாம்  விரும்பியவர்கள் இணைந்து கொள்ள முடியும். இதற்காக காங்கேசன்துறையில் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அத்துடன் பயிற்சிக் காலத்திலும் சம்பளம் வழங்கப்படும். மேலும் உணவு, இருப்பிடம், மருத்துவம், போக்குவரத்து ஆகியன இலவசமாக வழங்கப்படுவதுடன், குடும்பத்தினருக்கும் சலுகைகள் வழங்கப்படும். பயிற்சி முடிவடைந்ததும் இராணுவ தொண்டர்களாக உள்வாங்கப்பட்டு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபா சம்பளமும் வழங்கப்படும். இதற்கு 18 வயது தொடக்கம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எனினும் படை அதிகாரிகளை இணைப்பதற்கு மட்டும்  வர்த்தமானியில் அறிவிக்கப்படுமே ஒழிய தொண்டர்களை இணைப்பதற்கு அல்ல. இவ்வாறே தான் தெற்கிலும் தொண்டர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த காலங்களில் வடக்கில் ஆட்களை இணைப்பதற்கான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே தற்போது அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போலி தரகர்கள் சகிதம் நடப்பது உண்மையான ஆட்சேர்ப்பில்லையென அரச அதிபர் அறிவித்திருந்த நிலையிலேயே அவசர அவசரமாக படைத்தரப்பின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எமது இருப்பை அழிக்க நினைக்கும் சிகள இனவாதிகளது கொலைகாரத் தளபதிகளுக்கு இருக்கும் துணிவும் திராணியும்கூட, அவர்களை அண்டிப்பிளைக்கும் எம்மவர்க்கு இருப்பதில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

 

மாறாக தமிழர்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்வது சிங்களவனது இருப்பிற்கு எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.